RAGI HALWA : ஸ்வீட் சாப்பிட இனி பயம் வேண்டாம்.. கேழ்வரகு கருப்பட்டி அல்வா சாப்பிடுங்க.. டேஸ்ட் அப்படி இருக்கும்!
Ragi Halwa : ஸ்வீட் சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறதா? ஆனால் பயமாகவும் இருக்கிறதா? இனி இந்த பயம் தேவையில்லை. இந்த ஸ்வீட்டை நீங்கள் பயமில்லாமல் சாப்பிடலாம். அதுதான் ராகி அல்வா. ராகி அல்வா எப்படி செய்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
கேழ்வரகு கருப்பட்டி அல்வா
தேவையான பொருட்கள்
ராகி - கப்
பனை வெல்லம் சிரப் 3/4 கப்
நெய் 5 டீஸ்பூன்
முந்திரி 10
ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்
உப்பு சிட்டிகை
செய்முறை
ஸ்வீட் சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறதா? ஆனால் பயமாகவும் இருக்கிறதா? இனி இந்த பயம் தேவையில்லை. இந்த ஸ்வீட்டை நீங்கள் பயமில்லாமல் சாப்பிடலாம். அதுதான் ராகி அல்வா. ராகி அல்வா எப்படி செய்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
முதலில் கேழ்வரகு எடுத்துக் கொள்ளுங்கள் அதை நன்கு கழுவி விட்டு எட்டிலிருந்து 10 மணி நேரம் ஊற வைக்கவும். அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த அந்த கேழ்வரகை வடிகட்டி பால் எடுக்கவும். இதே மாதிரி மூன்று நான்கு முறை அரைத்து அரைத்து அதிலிருந்து பால் எடுத்துக் கொள்ளுங்கள்.
செடி நன்கு ஆரோக்கியமாக வளரும்
இந்த பாலை எடுத்த பிறகு கேழ்வரகு சக்கை போல இருக்கும். இந்த சக்கை தூக்கி எறியாதீர்கள் நீங்கள் செடி வளர்கிறீர்கள் என்றால் இந்த சக்கையை அதன் மீது தூவினால் செடி நன்கு ஆரோக்கியமாக வளரும்.
வடிகட்டி பால் எடுத்ததை மீண்டும் துணியிலோ அல்லது வேறொரு வடிகட்டியிலும் வடிகட்டி மீதமுள்ள சக்கையையும் எடுத்து விடுங்கள். இப்போது இந்த பாலை கனமான பாத்திரத்தில் ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து 20 முதல் 25 நிமிடம் வரை கிண்டி கொண்டே இருங்கள்.
கேழ்வரகு கருப்பட்டி அல்வா ரெடி
அல்வா பதத்திற்கு வரும். கருப்பட்டி எடுத்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி காய்ச்சி எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நாம் ராகி பாலில் சேர்த்து கிண்டவும். பத்து நிமிடம் அப்படியே கிண்டி விட்டே இருங்கள் பின்பு 5 டீஸ்பூன் நெய் ஊற்றி மீண்டும் கிண்டிக் கொண்டே இருக்கவும். ஒரு டீஸ்பூன் உப்பு, ஏலக்காய் தூள், நெய்யில் வறுத்த முந்திரி இறுதியாக சேர்க்கவும். பின்னர் நன்கு கிளறி விடவும் இப்பொழுது நமக்கு சுவையான கேழ்வரகு கருப்பட்டி அல்வா ரெடி.
ராகியில் உள்ள சத்துக்கள் மற்றும் நன்மைகள்
100 கிராம் ராகியில் 320 கலோரிகள் உள்ளன. புரதச்சத்து 7 கிராம் உள்ளது. கார்போட்ரேட் சத்துக்கள் 67 கிராம் உள்ளது. நார்ச்சத்து 11 கிராம் உள்ளது. கால்சிய சத்து 364 மில்லி கிராம் உள்ளது. இரும்புச்சத்து 4.62 மில்லி கிராம் உள்ளது.
சிறுதானிய வகைகளுள் ஒன்றான ராகி பிங்கர் மில்லட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான தானியம். அதில் உள்ள சத்துக்களை தெரிந்துகொள்ளுங்கள்.
நீங்கள் சைவ உணவுப்பிரியர் என்றால் கேழ்வரகு சிறந்த புரதச்சத்தை வழங்குகிறது. இதை நீங்கள் தினசரி உணவிலும் சேர்த்துக்கொள்ளலாம். இது சுவை நிறைந்ததும் கூட ஆகும்.
அதிக நார்ச்சத்து நிறைந்தது
கேழ்வரகு உங்கள் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது உடலின் வளர்சிதை மாற்றத்துக்கும், ஜீரணத்துக்கும் உதவுகிறது.
உடல் எடை குறைப்பதற்கு உதவுகிறது
ராகி, உடல் எடை குறைப்பதற்கு உதவுகிறது. இதில் உள்ள அதிக புரதச்சத்து அடிக்கடி பசி ஏற்படாமல் தடுக்கிறது. நீண்ட நேரம் உங்களுக்கு சாப்பிட்ட நிறைவான உணர்வை கொடுக்கிறது.
சரும சேதத்தை தடுக்கிறது
ராகி உங்களின் சருமத்திற்கு சிறந்த நண்பன். இது சருமத்திற்கு சிறப்பான நன்மைகளை கொடுக்கிறது. இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. அது உடலில் செல்கள் சேதமடைவதை தடுக்கிறது. அது உங்கள் சருமத்தை இளமையுடன் வைக்க உதவுகிறது.
தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது
ராகியில் தலை முடி ஆரேக்கியத்துக்கு உதவக்கூடிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது இரும்பு மற்றும் துத்தநாகச்சத்துக்கள் நிறைந்தது. இந்த முக்கிய சத்துக்கள் முடி உதிர்வை தடுக்கிறது. தலைமுடி வளர்ச்சியையும் அதிகரிக்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.