Ragi Adai Recipe : ராகி அடை, ராகி தோசை இந்த மாதிரி செய்து கொடுங்கள்.. அப்புறம் பாருங்க எப்படி சாப்பிடுவார்கள் என்று!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Ragi Adai Recipe : ராகி அடை, ராகி தோசை இந்த மாதிரி செய்து கொடுங்கள்.. அப்புறம் பாருங்க எப்படி சாப்பிடுவார்கள் என்று!

Ragi Adai Recipe : ராகி அடை, ராகி தோசை இந்த மாதிரி செய்து கொடுங்கள்.. அப்புறம் பாருங்க எப்படி சாப்பிடுவார்கள் என்று!

Divya Sekar HT Tamil Published Aug 21, 2024 09:56 AM IST
Divya Sekar HT Tamil
Published Aug 21, 2024 09:56 AM IST

சிறுதானிய வகைகளுள் ஒன்றான ராகி பிங்கர் மில்லட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான தானியம். அதில் உள்ள சத்துக்களை தெரிந்துகொள்ளுங்கள். மேலும் இந்த ராகியில் அடை, தோசை எப்படி செய்வது என்பது குறித்தும் பார்க்கலாம்.

Ragi Adai, Ragi Dosa : ராகி அடை, ராகி தோசை இந்த மாதிரி செய்து கொடுங்கள்.. அப்புறம் பாருங்க எப்படி சாப்பிடுவார்கள் என்று!
Ragi Adai, Ragi Dosa : ராகி அடை, ராகி தோசை இந்த மாதிரி செய்து கொடுங்கள்.. அப்புறம் பாருங்க எப்படி சாப்பிடுவார்கள் என்று!

அரசி மாவு

இஞ்சி

பச்சை மிளகாய்

வெங்காயம்

தேங்காய்

கேரட்

வெள்ளை எள்

உப்பு

செய்முறை

உடலுக்கு மிகவும் நன்மை அளிக்கக்கூடிய ராகி அடை எப்படி செய்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம். முதலில் ஒரு கப் ராகி மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அரிசி மாவை சேர்த்துக் கொள்ளுங்கள். அதில் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்த இஞ்சி,பச்சை மிளகாய் சேர்க்கவும். பின்னர் அதில் நறுக்கி வைத்த வெங்காயம் ஒரு ஸ்பூன், தேங்காய் துருவல் ஒரு ஸ்பூன், கேரட் துருவல் ஒரு ஸ்பூன், வெள்ளை எள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.

அதாவது இந்த மாவை நீங்கள் தண்ணீர் ஊற்றி பிசைய கூடாது. தண்ணீர் தெளித்து பிசைய வேண்டும். கையில் ஈரப்பதத்துடன் இந்த மாவை நீங்கள் பிசைந்தாள் நன்கு கையில் ஒட்டாமல் வழவழப்பாக வரும். பின்னர் அடைக்கு ஏற்றவாறு மாவை பிசைந்த பிறகு அதனை ஒரு பிளாஸ்டிக் கவரிலோ அல்லது வாழை இலையிலோ வைத்து தட்டவும். இதனை தட்டும் போது கையில் தண்ணீர் நினைத்துக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் மாவை தட்டும் போது மாவு கையில் ஒட்டாது.

வயதானவர்களால் சாப்பிட முடியாது

பின்னர் சூடான தோசை சட்டியில் அந்த இலையோடு எடுத்து அடையை தோசை சட்டியில் போடவும். ஒரு இரண்டு நொடி சூடானதும் அந்த இலையை எடுக்கவும். அப்பொழுதுதான் இலை மாவோடு ஒட்டாமல் அழகாக வரும். இந்த முறையை பயன்படுத்தி நீங்கள் இந்த ராகி அடையை உடையாமல் எடுக்கலாம்.

ஆனால் இந்த ராகி அடையை வயதானவர்களால் சாப்பிட முடியாது. அவர்களுக்கு நீங்கள் ராகி மாவை தண்ணீர் ஊற்றி தோசை போல் ஊற்றிக் கொடுத்தால் அவர்களால் அதை சாப்பிட முடியும். அவர்களுக்கு நீங்கள் ராகி தோசையை இதே முறையை பயன்படுத்தி சுட்டுக் கொடுக்கலாம். இனி இந்த முறையை பயன்படுத்தி ராகி அடை செய்து சாப்பிடுங்கள்.

ராகியில் உள்ள சத்துக்கள் மற்றும் நன்மைகள்

100 கிராம் ராகியில் 320 கலோரிகள் உள்ளன. புரதச்சத்து 7 கிராம் உள்ளது. கார்போட்ரேட் சத்துக்கள் 67 கிராம் உள்ளது. நார்ச்சத்து 11 கிராம் உள்ளது. கால்சிய சத்து 364 மில்லி கிராம் உள்ளது. இரும்புச்சத்து 4.62 மில்லி கிராம் உள்ளது.

நீங்கள் சைவ உணவுப்பிரியர் என்றால் கேழ்வரகு சிறந்த புரதச்சத்தை வழங்குகிறது. இதை நீங்கள் தினசரி உணவிலும் சேர்த்துக்கொள்ளலாம். இது சுவை நிறைந்ததும் கூட ஆகும்.

அதிக நார்ச்சத்து நிறைந்தது

கேழ்வரகு உங்கள் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது உடலின் வளர்சிதை மாற்றத்துக்கும், ஜீரணத்துக்கும் உதவுகிறது.

உடல் எடை குறைப்பதற்கு உதவுகிறது

ராகி, உடல் எடை குறைப்பதற்கு உதவுகிறது. இதில் உள்ள அதிக புரதச்சத்து அடிக்கடி பசி ஏற்படாமல் தடுக்கிறது. நீண்ட நேரம் உங்களுக்கு சாப்பிட்ட நிறைவான உணர்வை கொடுக்கிறது.

சரும சேதத்தை தடுக்கிறது

ராகி உங்களின் சருமத்திற்கு சிறந்த நண்பன். இது சருமத்திற்கு சிறப்பான நன்மைகளை கொடுக்கிறது. இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. அது உடலில் செல்கள் சேதமடைவதை தடுக்கிறது. அது உங்கள் சருமத்தை இளமையுடன் வைக்க உதவுகிறது.

தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது

ராகியில் தலை முடி ஆரேக்கியத்துக்கு உதவக்கூடிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது இரும்பு மற்றும் துத்தநாகச்சத்துக்கள் நிறைந்தது. இந்த முக்கிய சத்துக்கள் முடி உதிர்வை தடுக்கிறது. தலைமுடி வளர்ச்சியையும் அதிகரிக்கிறது.

ராகி, உடல் எடை குறைப்பதற்கு உதவுகிறது. இதில் உள்ள அதிக புரதச்சத்து அடிக்கடி பசி ஏற்படாமல் தடுக்கிறது. நீண்ட நேரம் உங்களுக்கு சாப்பிட்ட நிறைவான உணர்வை கொடுக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.