Urad Dal Milk : காலை டீ, காபிக்கு பாய் சொல்லுங்க.. இனி உளுத்தம் பருப்பு பால் செய்து கொடுங்க.. அவ்வளவு நன்மை இருக்கு!-how to make tasty and healthy protein rich ulundu paal - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Urad Dal Milk : காலை டீ, காபிக்கு பாய் சொல்லுங்க.. இனி உளுத்தம் பருப்பு பால் செய்து கொடுங்க.. அவ்வளவு நன்மை இருக்கு!

Urad Dal Milk : காலை டீ, காபிக்கு பாய் சொல்லுங்க.. இனி உளுத்தம் பருப்பு பால் செய்து கொடுங்க.. அவ்வளவு நன்மை இருக்கு!

Divya Sekar HT Tamil
Aug 29, 2024 03:38 PM IST

Urad Dal Milk : தினமும் ஒரே மாதிரி தான் நீங்கள் பால் குடித்து இருப்பீர்கள். ஆனால் இனி இந்த உளுந்தம் பால் குடித்துப் பாருங்கள். ஊட்டச்சத்து நிறைந்த இந்த உளுந்தம்பாலில் அவ்வளவு நன்மைகள் இருக்கிறது. இந்த உளுந்தம் பால் எப்படி செய்வது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

Urad Dal Milk : காலை டீ, காபிக்கு பாய் சொல்லுங்க.. இனி உளுத்தம் பருப்பு பால் செய்து கொடுங்க.. அவ்வளவு நன்மை இருக்கு!
Urad Dal Milk : காலை டீ, காபிக்கு பாய் சொல்லுங்க.. இனி உளுத்தம் பருப்பு பால் செய்து கொடுங்க.. அவ்வளவு நன்மை இருக்கு!

தண்ணீர் 4 கப்

வெல்லம் தூள் 1 முதல் 1 & 1/4 கப்

ஏலக்காய் தூள்

நொறுக்கப்பட்ட வறுத்த வேர்க்கடலை

துருவிய தேங்காய்

தேங்காய் பால் / பசுவின் பால் 1/2 கப்

செய்முறை

தினமும் ஒரே மாதிரி தான் நீங்கள் பால் குடித்து இருப்பீர்கள் ஆனால் இனி இந்த உளுந்தம் பால் குடித்துப் பாருங்கள் ஊட்டச்சத்து நிறைந்த இந்த உளுந்தம்பாலில் அவ்வளவு நன்மைகள் இருக்கிறது. இந்த உளுந்தம் பால் எப்படி செய்வது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

உளுத்தம் பருப்பை நன்கு கழுவி 3 மணி நேரம் ஊற வையுங்கள். நன்கு கூறியதும் மிக்ஸி ஜாரில் தண்ணீரை வடித்து விட்டு உளுந்தம் பருப்பை மட்டும் போடுங்கள். சிறிது தண்ணீர் விட்டு நைசாக உளுந்தம் பருப்பை ஆட்டிக் கொள்ளுங்கள். உளுந்த மாவு நைசான பதத்திற்கு இருக்க வேண்டும்.

15 நிமிடங்கள் நன்கு கிண்டி விடவும்

அடி கனமாக உள்ள பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள் உளுந்து அளந்த அதே பாத்திரத்தில் நான்கு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் அரைத்து வைத்த உளுந்த மாவையும் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளுங்கள். அதனை மிதமான தீயில் வைத்து பத்திலிருந்து 15 நிமிடங்கள் நன்கு கிண்டி விடவும். உளுந்து நன்கு வேக வைக்க வேண்டும் அதுதான் முக்கியம். 10 லிருந்து 15 நிமிடம் கரெக்டாக இருக்கும்.

இப்பொழுது உளுந்து அளந்து அதை பாத்திரத்தில் ஒன்று அல்லது ஒன்றரை அளவு நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு தேவைக்கு ஏற்ப இனிப்பை நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.

உளுந்தம் பால் ரெடி

நாட்டுச் சர்க்கரை சேர்த்ததும் ஐந்து நிமிடம் நன்கு கொதிக்க விடுங்கள். பின்னர் ஏலக்காய் தூள் சேர்த்து அடுப்பை அணைத்து விடுங்கள் இப்பொழுது உங்களுக்கு சுவையான உளுந்தம் பால் ரெடி.

இன்னும் சுவையாக குடிக்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் வருத்த நிலக்கடலையை நன்கு அரைத்து துருவிய தேங்காய் சிறிது சேர்த்து தேங்காய் பால் ஒரு கப் சேர்த்து பருகினால் இன்னும் சுவையாக இருக்கும்.

தினமும் செய்து கொடுக்க முயற்சி செய்யுங்கள்

இந்த உளுந்தம் பாலை நீங்கள் சுட சுட குடித்தாலும் அருமையாக இருக்கும். அதே போல நீங்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்து சுவைத்தாலும் மிகவும் அருமையாக இருக்கும். எனவே இனிமேல் காலை டீக்கு பதில் இம்மாதிரியான உளுந்தம் பாலை கொடுத்தால் உடலுக்கும் நல்லது நீங்கள் ஆரோக்கியமாகவும் இருக்கலாம். எனவே இதனை தினமும் செய்து கொடுக்க முயற்சி செய்யுங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.