Prawn Thokku : இறால் தொக்கு யாருக்கு தான் பிடிக்காது? இப்படி செய்து கொடுங்க.. சுவை அப்படி இருக்கும்!-how to make tasty and healthy prawn thokku recipe - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Prawn Thokku : இறால் தொக்கு யாருக்கு தான் பிடிக்காது? இப்படி செய்து கொடுங்க.. சுவை அப்படி இருக்கும்!

Prawn Thokku : இறால் தொக்கு யாருக்கு தான் பிடிக்காது? இப்படி செய்து கொடுங்க.. சுவை அப்படி இருக்கும்!

Divya Sekar HT Tamil
Sep 02, 2024 02:15 PM IST

Prawn Thokku : இறால் தொக்கு யாருக்கு தான் பிடிக்காது. அந்த இறால் தொக்கை நீங்கள் அடிக்கடி செய்வது போல இல்லாமல் இந்த மாதிரி முயற்சி செய்து பாருங்கள். அருமையாக இருக்கும். இறால் தொக்கு எப்படி செய்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

Prawn Thokku :  இறால் தொக்கு யாருக்கு தான் பிடிக்காது? இப்படி செய்து கொடுங்க.. சுவை அப்படி இருக்கும்!
Prawn Thokku : இறால் தொக்கு யாருக்கு தான் பிடிக்காது? இப்படி செய்து கொடுங்க.. சுவை அப்படி இருக்கும்!

எண்ணெய் 2 டீஸ்பூன்

தக்காளி 1

கறிவேப்பிலை

உப்பு 1 டீஸ்பூன்

கொத்தமல்லி இலைகள்

மசாலா 1:

வெங்காயம் 10

இஞ்சி சிறு துண்டு

பூண்டு 10

பச்சை மிளகாய் 1

மேலே உள்ள அனைத்து பொருட்களையும் கரடுமுரடான பேஸ்டாக அரைக்கவும்

மசாலா 2

மிளகு 1 டீஸ்பூன்

ஜீரா 1 டீஸ்பூன்

பெருஞ்சீரகம் விதைகள் 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்

கொத்தமல்லி தூள் 1 டீஸ்பூன்

கரம் மசாலா 1/2 டீஸ்பூன்

செய்முறை

இறால் தொக்கு யாருக்கு தான் பிடிக்காது. அந்த இறால் தொக்கை நீங்கள் அடிக்கடி செய்வது போல இல்லாமல் இந்த மாதிரி முயற்சி செய்து பாருங்கள். அருமையாக இருக்கும். இறால் தொக்கு எப்படி செய்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

ஒரு மிக்ஸி ஜாரில் சிறிய வெங்காயம் 10, 10 பல் பூண்டு, சிறிய அளவு இஞ்சி, பச்சை மிளகாய் ஒன்று சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் ஒரு ஸ்பூன் பெப்பர், ஒரு ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் சோம்பு,1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி தூள், 1/2 டீஸ்பூன் கரம் மசாலா சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

தக்காளி நன்கு வதங்கும்

இப்போது ஒரு கடாயில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி நாம் அரைத்து வைத்த வெங்காயம் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள். அதில் கறிவேப்பிலை சேர்த்து தக்காளி ஒன்று, உப்பு சிறிது சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். தக்காளி நன்கு வதங்கும் வரை நன்கு வதக்கவும்.

அதேபோல இப்பொழுது நாம் அரைத்து வைத்த மசாலாவையும் இதில் ஊற்றவும். சிறிது தண்ணீர் ஊற்றி அந்த மசாலாவை பத்து நிமிடம் நன்கு கொதிக்க விடலாம். அப்பொழுது அடுப்பை சிம்மில் வைப்பது நல்லது. இப்போது நமக்கு மசாலா எண்ணெய் பிரிந்து காணப்படும். இதுதான் கரெக்டான பதம்.

சுவையான பிரான் தொக்கு

இப்போது சுத்தம் செய்து வைத்த பிரானை இதில் சேர்த்து வேக விடவும். அதாவது அதிக நேரம் வேக வைத்தால் பிரான் லப்பர் போல மாறிவிடும். அதனால் நான்கு நிமிடம் மீடியம் ஃபிளேமிலும் இரண்டு நிமிடம் சிம்மில் வைத்து வேக விடுங்கள்.

இப்போது உங்களுக்கு சுவையான பிரான் தொக்கு ரெடி. இந்த மாதிரி உங்கள் வீட்டில் ஒரு முறை சமைத்து பாருங்கள் நன்றாக இருக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.