Palak Paneer : சுவையான ஆரோக்கியமான பாலக் பன்னீர் எப்படி செய்வது.. ரொம்ப ஈஸி தான்.. ட்ரை பண்ணி பாருங்க!
Palak Paneer : சுவையான ஆரோக்கியமான பாலக் பன்னீர் எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம். மிகவும் அட்டகாசமான இந்த பாலக் பன்னீர் ஒரு முறை வீட்டில் உள்ள அனைவருக்கும் செய்து கொடுங்கள்.
பாலக் பன்னீர்
தேவையான பொருட்கள்
பாலக் 1 கொத்து
பனீர் 200 கிராம்
வெண்ணெய் 2 டீஸ்பூன்
வெங்காயம் 1
ஜீரா 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் 2
இஞ்சி சிறு துண்டு
பூண்டு 2
தக்காளி 1
முந்திரி 5
பால் அடுக்கு
பால் 1 லேடில்
மஞ்சள் தூள் சிட்டிகை
கரம் மசாலா 1/4 டீஸ்பூன்
கசூரி மேத்தி 1/2 டீஸ்பூன்
உப்பு 1/2 டீஸ்பூன்
செய்முறை
சுவையான பாலக் பன்னீர் எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம். இப்போது ஒரு காடாயில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் நறுக்கி வைத்த ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், இரண்டு பல் பூண்டு, இஞ்சி சிறிய அளவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதேபோல தக்காளி ஒன்று சேர்த்துக் கொள்ளுங்கள். இதை எல்லாம் சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
பின்னர் அதில் 5 முந்திரி ஒரு கட்டு பாலக்கீரை சுத்தம் செய்து எடுத்து வைத்து இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை இரண்டு நிமிடம் நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். இதன் பிறகு கால் கப் தண்ணீர் 1/2 டீஸ்பூன் உப்பு, ஒரு பின்ச் மஞ்சள் தூள், கரம் மசாலா, கால் டீஸ்பூன் சேர்த்து நன்கு வதக்கி கொஞ்சம் கொதி வந்தவுடன் அணைத்து விடுங்கள். இது ஆரியதும் ஒரு மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
பாலக்கீரையை நன்கு அரைக்கவும்
இதனை அரைக்கும் போது பாலை நன்கு காய்ச்சி மேலே உள்ள ஆடையை அப்படியே எடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் பால் சிறிதளவு சேர்த்து அந்தப் பாலக்கீரையை நன்கு அரைக்கவும். நன்கு பேஸ்ட் போல் அரைப்பது முக்கியம்..
இப்போது ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் வெண்ணெய் அரை டீஸ்பூன் சீரகம் ஒரு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அதில் நாம் அரைத்து வைத்த பாலக்கீரை சேர்த்துக் கொள்ளுங்கள். சிறிது தண்ணீர் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விடுங்கள். இப்பொழுது 200 கிராம் பன்னீரை சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.
சுவையான பாலக் பன்னீர் ரெடி
இந்த பாலக் பன்னீரை மூடி வைத்து கொதிக்க விடாதீர்கள். மூடி போடாமல் ஒரு பத்திலிருந்து எட்டு நிமிடம் சிம்மில் வைத்து நன்கு கொதிக்க விடுங்கள். பின்னர் இறுதியாக கஸ்தூரி மேத்தி தூவி இறக்கி விடுங்கள். இப்பொழுது சுவையான பாலக் பன்னீர் ரெடி. மிகவும் அட்டகாசமான இந்த பாலக் பன்னீர் ஒரு முறை வீட்டில் உள்ள அனைவருக்கும் செய்து கொடுங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்