தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  How To Make Tasty Achu Murukku,banana Paniyaram

Evening Snack : ஈவினிங் ஸ்நாக்ஸ்.. அச்சு முருக்கு, வாழைப்பழ பணியாரம் எப்படி செய்வது? இதோ செம ஈஸி தான்!

Divya Sekar HT Tamil
Jan 22, 2024 05:36 PM IST

Evening Snack : மாலை நேர ஸ்நாக்ஸ் சுவையான அச்சு முருக்கும், வாழைப்பழ பணியாரமும் எப்படி செய்வது என்பது குறித்து காண்போம்.

சுவையான அச்சு முருக்கும், வாழைப்பழ பணியாரமும்
சுவையான அச்சு முருக்கும், வாழைப்பழ பணியாரமும்

ட்ரெண்டிங் செய்திகள்

மைதா - 1/2 கப்

பொடி சர்க்கரை - 1/2 கப்

ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - ஒரு சிட்டிகை

தேங்காய் பால் - 2 கப்

எண்ணெய்

செய்முறை

அச்சு முறுக்கு என்றால் யாருக்கு தான் பிடிக்காது அனைவருக்கும் பிடித்த ஒரு ஸ்நாக்ஸ் என்றால் அது அச்சு முறுக்கு தான் இந்த அச்சு முறுக்கு எப்படி செய்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம்

அரிசி மாவு எவ்வளவு எடுக்குறீங்களோ அதுல பாதி மைதா மாவு எடுக்கணும் இதில் ஒரு கப் அரைத்த சர்க்கரை ஏலக்காய் தூள் உப்பு சேர்த்து பின்னர் அதில் தேங்காய் பால் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும் தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து தேவையான பதத்திற்கு கொண்டு வரவும்

பின்னர் கடாயில் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும் அதில் அச்சு முறுக்குக்கு தேவையான அச்சை என்னை நன்கு சூடானதும் அதில் 20 நொடிகள் வைக்கவும். பின்னர் அந்த அச்சை மாவில் அழுத்தி அதனை சூடான எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும். இப்பொழுது சுவையான அச்சு முறுக்கு ரெடி. இதனை மாலை நேரத்தில் வீட்டில் உள்ளவர்களுக்கு சமைத்து கொடுத்தால் மிகவும் பிடிக்கும் முக்கியமாக குழந்தைகளுக்கு இது மிகவும் பிடித்த மாலை உணவு ஆகும்.

இதே போல ஈஸியா மாலை நேரத்தில் கோதுமை வாழைப்பழ பணியாரம் செய்து கொடுங்க. ருசி அருமையாக இருக்கும். அது எப்படி செய்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
 

கோதுமை வாழைப்பழ பணியாரம்

தேவையான பொருட்கள்

வெல்லம்

கோதுமை மாவு

வாழைப்பழம்

உப்பு

சுக்கு

தண்ணீர்

எண்ணெய்

முந்திரி

தேங்காய்

நெய்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அளவிற்கு வெல்லம் எடுத்து கொள்ள வேண்டும். எந்த கப்பில் வெல்லம் எடுத்தோமோ அதே கப்பில் அரை கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து வெல்லத்தை பாகு காய்ச்ச வேண்டும். வெல்லம் நீரில் கரைந்தால் போதுமானது. கம்பி பதம் தேவை இல்லை.

ஒரு பாத்திரத்தில் ஒரு பெரிய வாழைப்பழத்தை மசித்து சேர்த்து கொள்ள வேண்டும். சிறிய பழம் என்றால் இரண்டு வரை சேர்த்து கொள்ளலாம். அதில் கோதுமை மாவையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அதில் ஒரு சிட்டிகை உப்பை சேர்த்து கொள்ள வேண்டும். அதில் வெல்லம் கரைத்த பாகை சேர்த்து கெட்டி இல்லாமல் கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் கால் ஸ்பூன் ஏலக்காய் பொடியை சேர்த்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் கொஞ்சமாக நெய் சேர்த்து அதில் பொடியாக நறுக்கிய தேங்காயை நன்றாக வறுத்து அதில் சேர்த்து கொள்ள வேண்டும். அதே பாத்திரத்தில் விருப்பத்திற்கு ஏற்ப முந்திரி பருப்பையும் நெய்யில் வறுத்து சேர்த்து கொள்ள வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் எள்ளை சேர்த்து கொள்ளலாம் ( எள் சேர்க்க விரும்பாதவர்கள் தவிர்த்து விடலாம்.)

பணியார கல்லை சூடாக்கி அதில் தாராளமாக எண்ணெய் அல்லது நெய் விட்டு பணியாரமாக ஊற்றி கொள்ளலாம். அடுப்பை மிதமான தீயில் வைத்து பணியாரத்தை வேக விட வேண்டும். பின்னர் மறுபுறம் திருப்பி நன்றாக வேகவைத்து எடுத்து கொள்ளலாம். ஈஷியாக செய்யக் கூடிய இந்த இனிப்பு பணியாரம் உங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். நல்ல சத்தானதும் கூட

குறிப்பு : வெல்லத்திற்கு பதிலான சர்க்கரை, நாட்டு சர்க்கரை, கருப்பட்டடி என விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்