Tamil News  /  Lifestyle  /  How To Make Spicy Masala Bread In Tamil?

Bread Masala Recipe: ஈவ்னிங் டைம்ல இந்த பிரட் மசாலா செஞ்சு சாப்பிடுங்க..வேற லெவல் டேஸ்ட்!

Karthikeyan S HT Tamil
Feb 04, 2024 05:34 PM IST

Bread Masala: சுவையான காரசாரம் மிகுந்த பிரட் மசாலா எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.

பிரட் மசாலா
பிரட் மசாலா

ட்ரெண்டிங் செய்திகள்

மனதை மயக்கும் மாலை நேரங்களில் சுவையான பிரட் மசாலா செய்து சாப்பிடுங்கள். இது உங்களுக்கு ஒரு நல்ல மாலை ஸ்நாக்ஸாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

அந்தவகையில் சுவையான பிரட் மசாலா செய்வது எப்படி என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். கீழே பிரட் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்

பிரட் - 5 துண்டுகள்

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

சீரகம் - 1/2 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)

பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி பூண்டு பேஸ்ட் - தேவையான அளவு

தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் பிரட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பின்னர் பிரட் துண்டுகளை சேர்த்து, குறைவான அளவு தீயில் வைத்து 5 நிமிடம் பொன்னிறமாக வறுத்து இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதே கடாயில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி சூடானதும், சீரகம் சேர்த்து தாளித்து, அதோடு நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து வெங்காயத்தை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்

பிறகு தக்காளியை சேர்த்து, மஞ்சள் தூள், கரம் மசாலா, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும். பின்பு பிரட் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான பிரட் மசாலா தயார். இதன் மேலே கொத்தமல்லி இலைகளைத் தூவி பரிமாறலாம். எண்ணெய்க்கு பதிலாக நெய் சேர்த்தும் சுவையான பிரட் மசாலா செய்யலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்