Raagi Idiyaappam: ராகி மாவில் உதிரி உதிரியான இடியாப்பம்! இத மட்டும் செஞ்ச போதும் !
Raagi Idiyaappam:தினமும் காலை உணவில் ராகியை சேர்த்துக் கொள்வதால் புத்துணர்ச்சி கிடைக்கிறது. உணவில் கூழாக ராகியை சேர்த்து சாப்பிடும் போது சில நாட்களில் போர் அடித்து விடும். இதனை தவிர்க்க ராகி மாவை வைத்து வித விதாக டிபன் செய்து சுவைக்கலாம்.

உடல் பருமனை குறைக்க டயட் மேற்கொள்ளும் அனைவரது உணவிலும் தவறாமல் இருப்பது இந்த ராகி உணவு தான். இதனை எடுத்துக் கொள்வதால் உடலுக்கு தேவையான கலோரிகள் எளிமையாக கிடைக்கின்றன. மேலும் கேட்ட கொழுப்பை சேர விட்டாமலும் இது உதவி புரிகிறது. தினமும் காலை உணவில் ராகியை சேர்த்துக் கொள்வதால் புத்துணர்ச்சி கிடைக்கிறது. உணவில் கூழாக ராகியை சேர்த்து சாப்பிடும் போது சில நாட்களில் போர் அடித்து விடும். இதனை தவிர்க்க ராகி மாவை வைத்து வித விதாக டிபன் செய்து சுவைக்கலாம். ராகி மாவை வைத்து உதிரி உதிரியாக இடியாபாபம் செய்யும் எளிய முறையை தெரிந்து கொள்ள இதை முழுமையயாக படியுங்கள்.
தேவையான பொருட்கள்
அரை கிலோ ராகி மாவு, கால் கிலோ அரிசி மாவு, 3 டம்ளர் தண்ணீர், 2 டேபிள் ஸ்பூன் நெய், அரை கப் நாட்டு சர்க்கரை, அரை முடி தேங்காய், சிறிதளவு ஏலக்காய் பொடி ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, அரிசி மாவு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அவை இரண்டையும் ஒரு கடாயில் போட்டு வாசனை வரும் வரை மிதமான தீயில் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சிறிதளவு ஏலக்காய் தூளை போட வேண்டும். வறுத்த மாவை பெரிய பாத்திரத்தில் மாற்ற வேண்டும். அதில் 2 டம்ளர் தண்ணீர், ஒரு டீஸ்பூன் எண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பை போட்டு கலக்க வேண்டும். மாவை பிசைய நன்கு கொதித்த நீரை பயன்படுத்த வேண்டும். ஏனெனில் அப்போது தான் மாவு நன்கு மென்மையாக இருக்கும்.