Healthy Food: சத்தான முழு கோதுமை தோசையும் சிறு நெல்லி தொக்கும் செய்முறை
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Healthy Food: சத்தான முழு கோதுமை தோசையும் சிறு நெல்லி தொக்கும் செய்முறை

Healthy Food: சத்தான முழு கோதுமை தோசையும் சிறு நெல்லி தொக்கும் செய்முறை

I Jayachandran HT Tamil
Published Jun 16, 2023 08:47 PM IST

சத்தான முழு கோதுமை தோசையும் சிறு நெல்லி தொக்கும் செய்முறை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

சத்தான முழு கோதுமை தோசையும் சிறு நெல்லி தொக்கும் செய்முறை
சத்தான முழு கோதுமை தோசையும் சிறு நெல்லி தொக்கும் செய்முறை

இதில் முழு கோதுமை தோசையில் நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கல், அஜீரணக் கோளாறுகள் ஏற்படாது. முழு கோதுமை தோசை செய்து அதற்கு சிறு நெல்லிக்காய் தொக்கு வைத்து சாப்பிட்டால் சுவை சூப்பரோ சூப்பராக இருக்கும்.

கோதுமை தோசை செய்யத் தேவையான பொருட்கள்:

முழு கோதுமை - 2 உழக்கு.

இட்லி அரிசி - அரை உழக்கு.

வெந்தயம் - 1 ஸ்பூன்.

உப்பு - தேவைக்கு.

கோதுமை தோசை செய்முறை:

முழு கோதுமை மற்றும் இட்லி அரிசியை தண்ணீர் ஊற்றி களைந்து சுத்தம் செய்து, அதில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து மூன்று மணி நேரம் வரை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.

இது நன்றாக ஊறிய பின்னர் கிரைண்டரில் போட்டு தேவையான தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு மையாக அரைத்து, தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து எடுத்துக் கொள்ளவும். இப்போது தோசை மாவு தயார். பின்னர் அடுப்பில் தோசை கல்லை போட்டு சூடானதும், அதில் எண்ணெய் தடவி ஒரு கரண்டி மாவை ஊற்றி தோசையாக சுட்டு எடுத்துக் கொள்ளலாம்.

சாதாரணமாக நாம் சப்பாத்திக்கு திரித்து வைத்துள்ள கோதுமை மாவை கரைத்து தோசையாக சுடுவோம், அதனை விட இப்படி ஊற வைத்து அரைத்து தோசை சுடுவது வித்தியாசமான சுவையில் இருக்கும். இந்த மாவை அரைத்த உடனும் தோசையாக சுடலாம். ஆறு மணி நேரம் புளிக்க வைத்தும் தோசையாக சுடலாம். இந்த தோசைக்கு பச்சை மிளகாய் வத்தல் துவையல் தொட்டுக்கொள்ள ஏற்றதாக இருக்கும்.

ஆனால் இன்று சிறு நெல்லியில் தொக்கு செய்து பரிமாறப் போகிறோம்.

சிறுநெல்லி தொக்கு செய்முறை:

அரைநெல்லிக்காய்களை கழுவிவிட்டு கொட்டைகளை நீக்கி விட்டு சிறு துண்டுகளாக்கவும்.வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும் கடுகு, பெருங்காயப் பொடி சேர்த்து தாளித்து கொள்ளவும்.

நறுக்கிய நெல்லிக்காய் துண்டுகளைப் போட்டு பிரட்டி தேவையான உப்பு காரப்பொடி, மஞ்சள் பொடி சேர்த்து வதங்கியதும் வறுத்த வெந்தயப்பொடியையும் போட்டு கிளறவும்.

பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயப் பொடி சேர்த்து தாளித்து கொண்டு நெல்லிக்காய் பொடியை போட்டு, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து வதக்கி தொக்கு சற்று பதமானதும் இறக்கி சிறிது வறுத்த வெந்தயப் பொடியையும் போட்டு கிளறவும்.

முழு கோதுமை தோசைக்கு நெல்லிக்காய் தொக்கு சூப்பராக இருக்கும்.