Healthy Recipe: சர்க்கரை வள்ளிக்கிழங்கு பாயசம் செய்வது எப்படி?
சர்க்கரை வள்ளிக்கிழங்கு பாயசம் செய்வது எப்படி? என்பது குறித்து இங்கு அறிந்து கொள்வோம்.
சர்க்கரை வள்ளிக் கிழங்கு பாயாசம் ரெசிபி உங்கள் பண்டிகை நாளன்று இனிமையான விருந்தளிக்கப் போகிறது. சர்க்கரை வள்ளிக் கிழங்கின் சுவையும், வாயில் போட்ட உடனேயே கரையும் மென்மையான ஜவ்வரிசியும்,
ட்ரெண்டிங் செய்திகள்
குங்குமப் பூவின் நிறமான வாசனையும் நறுமணமிக்க ஏலக்காய், உலர்ந்த பழங்களின் அலங்கரிப்பும் உங்கள் பண்டிகைத் திருநாளை இனிமையாக்க போகிறது.
உங்கள் வீட்டு விசேஷ நாளை சிறந்த உணவுடன் கொண்டாட இந்த எளிமையான பாயாசத்தை டிரை பண்ணி பாருங்கள்.
இதன் வாசமும் சுவையும் கண்டிப்பாக உங்கள் நாவின் சுவை மொட்டுகளை மெய் சிலிர்க்க வைத்து விடும்.
பிஸியான நேரத்திலும் கூட இந்த ரெசிபியை எளிதாக செய்து அசத்திடலாம்.
இப்படித் தித்திக்கும் சர்க்கரை வள்ளிக் கிழங்கு பாயாசத்தை செய்யும் முறை பற்றி இங்கு அறிந்து கொள்ளுங்கள்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு பாயசம் செய்யத் தேவையானவை:
சர்க்கரை வள்ளிக் கிழங்கு - 1
ஜவ்வரிசி - 3 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு (தோல் நீக்கியது) - 1 டேபிள் ஸ்பூன்
பாதாம் பருப்பு (தோல் நீக்கியது) - 1 டேபிள் ஸ்பூன்
பால் - 3 கப்
ஏலக்காய் - 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை வள்ளிக் கிழங்கு பாயாசம் செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியை எடுத்து கொள்ளவும் அதில் தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
குக்கரை எடுத்து அதில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை பாதியாக வெட்டி வைக்கவும்.
அதில் தண்ணீர் சேர்த்து 3-4 விசில் அடிக்கும் வரை வேக வைக்கவும்.
வேக வைத்த கிழங்கின் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பால் சேர்க்கவும் .
3-5 நிமிடங்கள் பாலை நன்றாகக் கொதிக்க விட்டு அதில் ஜவ்வரிசி சேர்க்கவும் நன்றாக கலக்கி குறைந்த தீயில் 4-5 நிமிடங்கள் பாலை வைத்திருக்க வேண்டும்.
அதனுடன் சர்க்கரை, முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு இவற்றைச் சேர்த்து நன்றாக கிளறி 2 நிமிடங்கள் சமைக்கவும்.
வேக வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக கிளறவும் பிறகு குங்குமப் பூ, ஏலக்காய் சேர்த்து நன்றாக கிளறவும். பின்னர் அடுப்பை அணைத்து விட்டு ஒரு பாத்திரத்துக்கு மாற்றி கொள்ளுங்கள்.
சுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கு பாயாசம் ரெடி.
அப்படியே பாதாம் பருப்பை அதன் மேல் தூவி அலங்கரித்து சூடாக அல்லது ஆறின பிறகு பரிமாறுங்கள்.
ஜவ்வரிசியை முன்பே ஊற வைத்து கொண்டால் பாயசத்துக்கு மென்மையான பதம் கிடைக்கும்.
வேக வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை துருவிக் கொண்டால் பாயசம் ரொம்பவும் கட்டிகள் இல்லாமல் இருக்கும்.
பாயாசத்தில் அடங்கியுள்ள ஊட்டச்சத்து:
பரிமாறும் அளவு - 1 கப்
கலோரிகள் - 147 கலோரிகள்
கொழுப்பு - 5.4 கிராம்
புரோட்டீன் - 3.9 கிராம்
கார்போஹைட்ரேட் - 21 கிராம்
நார்ச்சத்து - 1.4 கிராம்