Healthy Diet: ருசியும் சத்தான சாமை உப்புமாவும் பலாக்கொட்டை வறுவலும் செய்முறை
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Healthy Diet: ருசியும் சத்தான சாமை உப்புமாவும் பலாக்கொட்டை வறுவலும் செய்முறை

Healthy Diet: ருசியும் சத்தான சாமை உப்புமாவும் பலாக்கொட்டை வறுவலும் செய்முறை

I Jayachandran HT Tamil
Published Jun 16, 2023 08:07 PM IST

ருசியும் சத்தான சாமை உப்புமாவும் பலாக்கொட்டை வறுவலும் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

ருசியும் சத்தான சாமை உப்புமா
ருசியும் சத்தான சாமை உப்புமா

சாமை உப்புமா செய்யத் தேவையானவை :

பச்சைப் பட்டாணி – கால் கப்

சாமை அரிசி – அரை கப்

கோதுமை ரவை – அரை கப்

உப்பு – தேவையான அளவு

பாசிப்பருப்பு – கால் கப்

தேங்காய்த் துருவல் – கால் கப்.

தாளிக்க :

கடுகு – அரை டீஸ்பூன்

உளுந்து – ஒரு டீஸ்பூன்

வேர்க்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

காய்ந்த மிளகாய் – 4

எண்ணெய் – தேவையான அளவு

கொத்தமல்லி - சிறிது

சாமை உப்புமா செய்முறை:

குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும், தாளிக்கக் வைத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

பிறகு உப்பு, சாமை அரிசி, கோதுமை ரவை, பாசிப்பருப்பு சேர்த்துக் கிளறி மூடி, 3 விசில் வரும் வரை வேகவிடவும். வெந்ததும், கொத்தமல்லி தூவி, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.

சுவையான பலாக்கொட்டை வறுவல் செய்யத் தேவையானவை :

பலாக்கொட்டை - 12

உப்பு - தேவைக்கேற்ப

மிளகாய்த்தூள் - ஒரு ஸ்பூன்

தனியா பொடி - ஒரு ஸ்பூன்

எண்ணெய் - இரண்டு ஸ்பூன்

கடுகு - தாளிக்க

சுவையான பலாக்கொட்டை வறுவல் செய்முறை:

பலாக்கொட்டைகளின் தோலை நீக்கி, துண்டுகளாக நறுக்கி, வேக வைக்கவும். வெந்ததும் நீரை வடிக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, மிளகாய் தூள், தனியா தூள், உப்பு பலாக்கொட்டைகளை போட்டு கிளறவும். பலாக்கொட்டைகள் ரோஸ்ட் ஆனதும் இறக்கி விடலாம். தொட்டுக்கொள்ள சுவையான வறுவல் ரெடி.

சாமை உப்புமாவுடன் பலாக்கொட்டை வறுவலை பரிமாறுங்கள். சாப்பிடுவதற்கு ருசியாகவும் பொருத்தமாகவும் இருக்கும்.