Fried Balls: 90ஸ் கிட்ஸ்களின் மனம் விரும்பும் பொரி உருண்டை செய்வது எப்படி? சூப்பர் ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Fried Balls: 90ஸ் கிட்ஸ்களின் மனம் விரும்பும் பொரி உருண்டை செய்வது எப்படி? சூப்பர் ரெசிபி!

Fried Balls: 90ஸ் கிட்ஸ்களின் மனம் விரும்பும் பொரி உருண்டை செய்வது எப்படி? சூப்பர் ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Published Oct 04, 2024 05:59 PM IST

Fried Balls: குழந்தைகள் சாப்பிட பல உணவுகள் இருந்தாலும் அவர்களுக்கு விருப்பமான உணவின் மீது மட்டுமே அதிக ஈடுபாடு செலுத்துவார்கள். அதே போல 90 ஸ் குழந்தைகளின் விருப்ப பண்டங்களில் ஒன்றாக பொரி உருண்டை இருந்தது.

Fried Balls: 90ஸ் கிட்ஸ்களின் மனம் விரும்பும் பொரி உருண்டை செய்வது எப்படி? சூப்பர் ரெசிபி!
Fried Balls: 90ஸ் கிட்ஸ்களின் மனம் விரும்பும் பொரி உருண்டை செய்வது எப்படி? சூப்பர் ரெசிபி!

தேவையான பொருட்கள்

2 கப் அரிசி பொரி

அரை கப் வெல்லம்

அரை கப் நிலக்கடலை

1 டீஸ்பூன் பொட்டுக்கடலை

1 டீஸ்பூன் சுக்கு தூள்

1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்

10 முந்திரி பருப்புக

தேவையான அளவு நெய்

செய்முறை

முதலில் பொரியை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பின் ஒரு கடாயில் முந்திரி பருப்புகளை போட்டு மிதமான சூட்டில் வறுத்து எடுத்தக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் பொரி, வறுத்த வேர்கடலை, பொட்டுக்கடலை, வறுத்த முந்திரியை சேர்த்து அதை நன்கு கலந்து எடுத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் வெல்லத்தை தூள் செய்து போட்டு 2 கிளறு கிளறி பின்பு அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அதை நன்கு கரைத்து பாகை எடுத்துக் கொள்ளவும். பிறகு வேறொரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் வடிகட்டிய வெல்லத்தை ஊற்றி அதை மீண்டும் சுட வைக்கவும்.வெல்லம் சிறிது சூடானதும் அதில் சுக்குத் தூள் மற்றும் ஏலக்காய் தூளை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும். வெல்லப்பாகு 2 கம்பி பதத்தை தாண்டியவுடன் ஒரு சிறிய கிண்ணத்தில் சிறிதளவு தண்ணீரை எடுத்து அதில் கொதித்து கொண்டிருக்கும் வெல்ல பாகிலிருந்து ஒரு கரண்டியின் மூலம் 2 துளிகளை எடுத்து விடவும்.

பின்பு அதை கைகளின் மூலம் உருட்டும் போது அது நன்கு உருட்ட வரவேண்டும். அப்படி உருட்ட வந்தவுடன் அடுப்பை முற்றிலுமாக குறைத்து விட்டு அதில்  கலந்து வைத்திருக்கும் அவல் பொரி கலவையை கொட்டி அதை பக்குவமாக ஒரு கரண்டியின் மூலம் நன்கு கிளறி விடவும். பிறகு அதில் அரை மேஜைக்கரண்டி அளவு நெய் ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு அடுப்பை அணைத்து விடவும். இந்த பொரி கலவையை சூடாக இருக்கும் போதே உருண்டைகளாக பிடித்தால் தான் உண்டு அப்படி இல்லை என்றால் அவை ஆறியவுடன் நம்மால் பிடிக்க முடியாது. அதனால் நம் கைகளில் நன்கு நெய்யை தடவி கொண்டு அது சூடாக இருக்கும் போதே அதை பக்குவமாக உருண்டைகளாக பிடித்து அதை சிறிது நேரம் ஆற விட்டு பின்பு பரிமாறவும். இப்பொழுது உங்கள் சுவையான மற்றும் மொறு மொறுப்பாக இறுக்கும் பொரி உருண்டை தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள். உங்கள் வீட்டில் 90 ஸ் கிட்ஸ் யாரேனும் இருந்தால் விரும்பி சாபிடுவார்.