தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  How To Make Ragi Pakkoda And Vegetable Briyani

Combo Food:சுவையான ராகி பக்கோடாவும் அதற்கேற்ற வெஜிடபிள் பிரியாணியும்

I Jayachandran HT Tamil
Mar 30, 2023 09:49 PM IST

சுவையான ராகி பக்கோடாவும் அதற்கேற்ற வெஜிடபிள் பிரியாணியும் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

ராகி பக்கோடா
ராகி பக்கோடா

ட்ரெண்டிங் செய்திகள்

ராகி பக்கோடா செய்யத் தேவையான பொருட்கள்:

ராகி மாவு - 1 கப்

வெங்காயம் - 1

பொட்டுக்கடலை மாவு - 2 தேக்கரண்டி

காய்ந்த மிகளாய்- 3

பெருங்காயம் தூள் - 1 சிட்டிகை

கருவேப்பிலை - ஒரு கொத்து

உப்பு மற்றும் எண்ணெய் - தேவையான அளவு

ராகி பக்கோடா செய்முறை :

வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

பின்பு காய்ந்த மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளவும்.

அதனுடன் உப்பு, பெருங்காய தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பின்பு ராகி மாவு, பொட்டுக்கடலை மாவு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, மாவு கெட்டியாகும் பதத்திற்கு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.

பின்பு அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கலந்து வைத்துள்ள ராகி மாவை உதிரி உதிரியாக போட்டு பொறித்து எடுத்தால் சுவையான ராகி பக்கோடா தயார்.

இவற்றை அனைவருக்கும் சுடசுட பரிமாறவும்.

 

பல்வேறு காய்கறிகளை சேர்த்து பிரியாணி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். சைவப் பிரியர்களுக்கு பிடித்த மசாலா உணவு வகைகளுள் வெஜிடபிள் பிரியாணியும் ஒன்று. எளிமையான முறையில் வீட்டில் காய்கறி பிரியாணி தயார் செய்யும் முறை பற்றி இங்கு பார்க்கலாம்.

வெஜிடபிள் பிரியாணி செய்யத் தேவையானவை:

பாசுமதி அரிசி - ஒரு கப்

தண்ணீர்- முக்கால் கப்

தேங்காய் பால் - முக்கால் கப்

நெய் - 100 கிராம்

ரீபண்ட் ஆயில் - 100 கிராம்

முருங்கை பீன்ஸ்- 50 கிராம்

பச்சை பட்டாணி - 50 கிராம்

பீன்ஸ் - 50 கிராம்

கேரட் - 50 கிராம்

எலுமிச்சை பழம் - 1

நெய்- தேவையான அளவு

கொத்த மல்லி இலை - தேவையான அளவு

புதினா இலை-தேவையான அளவு

பச்சை மிளகாய் - 3 எண்ணம்

முந்திரி பருப்பு - 6 எண்ணம்

மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

பட்டை - ஆள்காட்டி விரல் அளவு

கிராம்பு - 2 எண்ணம்

ஏலக்காய் - 3 எண்ணம்

சின்ன வெங்காயம்- 100 கிராம்

இஞ்சி- சுண்டு விரல் அளவு

வெள்ளைப்பூண்டு - 3 பற்கள்

கசகசா - 2 தேக்கரண்டி

முந்திரி பருப்பு - தேவையான அளவு

வெஜிடபிள் பிரியாணி செய்முறை:

அரிசியைக் நன்றாக கழுவி, அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவையுங்கள்.

இதனிடையே, அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து அரைத்தெடுங்கள். காய்கறிகளை நறுக்கி வைத்துகொள்ளுங்கள். வெங்காயத்தை நீளவாக்கிலும் தக்காளியை பொடியாகவும் நறுக்கிக்கொள்ளுங்கள்.

இதன் பின், குக்கரில் எண்ணெய், நெய்யைக் காயவைத்து பிரிஞ்சி இலை, வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும், நன்றாக வதங்கியவுடன் பச்சை மிளகாய் மற்றும் அரைத்த விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள்.

இதன் பிறகு, காய்கறி, தக்காளி, தேவையான உப்பு, மஞ்சள்தூள், தயிர், புதினா, மல்லித்தழை ஆகியவற்றையும் சேர்த்து நன்கு வதக்குங்கள்.ஊறிக்கொண்டிருக்கும் அரிசியை, தண்ணீருடன் மேற்கண்ட கலவையில் சேர்த்துக் கிளறி, மூடி போட்டு, ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து, சிறு தீயில் 5 நிமிடம் வைத்திருந்து இறக்குங்கள்.

இறுதியாக முந்திரிப்பருப்பு மற்றும் மேற்புறமாக தூவி சூடாக பரிமாறுங்கள். சூப்பரான வெஜிடபிள் பிரியாணியுடன் மொறுமொறுப்பான ராகி பக்கோடாவுடன் சேர்த்து சாப்பிட்டு மகிழுங்கள்.

வெஜிடபிள் பிரியாணி
வெஜிடபிள் பிரியாணி
WhatsApp channel

டாபிக்ஸ்