குழந்தைகள் விரும்பும் ஓட்ஸ் சாக்லேட் மிட்டாய்! இனி வீட்டிலேயே செய்யலாமே! மாஸ் ரெசிபி!
வீட்டிலேயே இந்த மிட்டாயகளை செய்து தரும் போது சுத்தமாகவு இருக்கும். ஆனால் இதனை வீட்டில் செய்யும் முறை சற்று கடினமானதாக இருக்கும். குழந்தைகளுக்கு ஆரோக்கியத்துடன் சுவையையும் தரும் ஓட்ஸ் சாக்கலேட் மிட்டாய் செய்யும் முறையை இங்கு தெரிந்துக் கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு இனிப்பு என்றாலே தனிப்பிரியம் உண்டு. அவர்கள் விரும்பும் இனிப்புகளில் முதன்மையான இடத்தை மிட்டாய்களே பிடிக்கின்றது. இந்த மிட்டாயகளை கடைகளில் வாங்கி சாப்பிடுகின்றனர். கடைகளில் செய்யப்படும் இந்த மிட்டாய் வகைகள் சுத்தமான முறையில் தயாரிக்கப்பட்டதாக இல்லாமல் இருக்கலாம். எனவே இதன் காரணமாக குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம். வீட்டிலேயே இந்த மிட்டாயகளை செய்து தரும் போது சுத்தமாகவு இருக்கும். ஆனால் இதனை வீட்டில் செய்யும் முறை சற்று கடினமானதாக இருக்கும். குழந்தைகளுக்கு ஆரோக்கியத்துடன் சுவையையும் தரும் ஓட்ஸ் சாக்கலேட் மிட்டாய் செய்யும் முறையை இங்கு தெரிந்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
2 கப் ரோல்டு ஓட்ஸ்
அரை கப் இன்ஸ்டன்ட் ஓட்ஸ்
200 கிராம் பாதாம்
400 கிராம் வெண்ணெய்
250 கிராம் நாட்டு சர்க்கரை
300 கிராம் தேன்
1 டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
200 கிராம் உலர்ந்த கிரான்பெர்ரி
2 டேபிள்ஸ்பூன் சாக்லேட் சிப்ஸ்
செய்முறை
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து மிதமான சூட்டில் ரோல்டு ஓட்ஸ், இன்ஸ்டன்ட் ஓட்ஸ் மற்றும் நறுக்கிய பாதாம் ஆகியவற்றை போட்டு வறுக்கவும். குறைந்தது 15 நிமிடங்கள் இதனை வறுக்கவும். நன்றாக வறுபட்டதும் 15 நிமிடங்களுக்குப் பிறகு, அடுப்பை அணைத்து, அவற்றை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அவற்றை முழுமையாக ஆறவிட வேண்டும். ஆறியதும் இதனை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் உப்பில்லாத வெண்ணெய், நாட்டு சர்க்கரை மற்றும் தேன் ஆகியவற்றை ஊற்ற வேண்டும். தீயை மிதமாக வைத்து, சர்க்கரை முழுவதுமாக கரையும் வரை அதனை காய்ச்சவும். பிறகு இதில் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து சிரப்பை கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
பிறகு சிரப்பை வறுத்து வைத்திருக்கும் ஓட்ஸ் மற்றும் பாதாம் கலவையில் ஊற்றவும். மேலும் இதில் கிரான்பெர்ரி மற்றும் சாக்லேட் சிப்ஸ் சேர்க்க வேண்டும். இவை எல்லாவற்றையும் நன்கு கலந்து விடவும். இதை சிறிது நேரம் தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பின்னர் இந்த ஓட்ஸ் கலவையை, பட்டர் பேப்பர் போட்ட டின்னுக்கு மாற்றி சமமாக பரப்பி விட வேண்டும். பின்னர் இதன் மேலே சில சாக்லேட் சிப்ஸை தூவி, கலவையை சமமாக மெதுவாக அழுத்தவும். இந்த டின்னை குளிர்சாதன பெட்டியில் வைத்து, ஓட்ஸ் கலவையை குளிர்சாதனப் பேட்டியில வைத்து சுமார் 3 மணி நேரம் குளிர வைக்கவும். நன்றாக குளிர்ந்த உடன் அவரவர் விரும்பிய வடிவங்களில் வெட்டி பரிமாறவும். இவற்றை குளிர்சாதன பெட்டியில் வைத்து ஒரு வாரத்திற்கு மேல் நீங்கள் விரும்பும் போதெல்லாம் பரிமாறி மகிழலாம்.
இது போன்று வீட்டிலேயே செய்து கொடுக்கப்படும் உணவுகள் சுத்தமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும். இதனை குழந்தைகளும் மிகவும் விரும்புவர். குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களும் இதை போன்ற மிட்டாய்களை செய்து தரும் போது இதனை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு வாரத்திற்கும் மேலாக இதனை வீட்டில் வைத்து சாப்பிடலாம்.
டாபிக்ஸ்