Natural Dye: இளம் நரையா! வீட்டில் இருந்தே கருமை ஆக்கும் வழிமுறைகள் இதோ!-how to make natural dye in home - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Natural Dye: இளம் நரையா! வீட்டில் இருந்தே கருமை ஆக்கும் வழிமுறைகள் இதோ!

Natural Dye: இளம் நரையா! வீட்டில் இருந்தே கருமை ஆக்கும் வழிமுறைகள் இதோ!

Suguna Devi P HT Tamil
Sep 24, 2024 05:56 PM IST

Natural Dye: மாறி வரும் வாழ்க்கை சூழ்நிலைகள், உணவு பழக்க வழக்கங்கள் ஆகிய காரணிகளால் பலருக்கு இளம் வயதிலேயே தலை முடி நரைத்து விடுகிறது.

Natural Dye: இளம் நரையா! வீட்டில் இருந்தே கருமை ஆக்கும் வழிமுறைகள் இதோ!
Natural Dye: இளம் நரையா! வீட்டில் இருந்தே கருமை ஆக்கும் வழிமுறைகள் இதோ!

இத்தகைய பிரச்சனைகளில் இருந்து விடுபட இயற்கை வாயிலாகவே தீர்வு காண முடியும். நரைத்த முடிக்கு மீண்டும் கருமை நிறத்தை அளிக்கும் பல இயற்கை பொருட்கள் உள்ளன அவற்றை பயன்படுத்தி தலை முடியின் கருமையை மறைக்க முடியும். மேலும் நரை முடி வரும் ஆரம்ப கட்டத்திலேயே இதனை பயன்படுத்தினால் நரை தலை மொத்ததிற்கும் பரவாமல் தடுக்க முடியும். அந்த இயற்கை முறைகளை இங்கு தெளிவாக காணலாம். 

இயற்கை டை வகைகள் 

முதலில் தலையில் வரக்கூடிய நரை முடியை மறைக்கவும், தடுக்கவும் பயன்படுத்தப்படும் முக்கிய இயற்கை பொருள் தான் மருதாணி இலை, இந்த இலை தலையில் ஏற்படும் நரை முடியை மறைத்து வேறு நிறத்தை தறுகிறது. இதனை அரைத்து தலையில் நேரடியாக தேய்த்து ஒரு சில மணி நேரங்கள் ஊற விட வேண்டும். இது நரை முடியின் நிறத்தை மற்றும். 

மேலும் இயற்கை வழங்கிய மற்றொரு வரம் தான், அவுரி இலை பொடி. இந்த அவுரி செடியின் இலை நரை முடியை கருப்பாக மாற்றும் திறன் கொண்டுள்ளது. இந்த அவுரி செடி இலை, மருதாணி இலை ஆகிய இரண்டையும் பொடியாக்கி மாத்திற்கு இரு முறை பயன்படுத்தலாம்.  

இந்த இரு இலை பொடிகளை தாண்டி நெல்லிக்காய் பொடி, செம்பருத்தி பொடி, கடுக்காய் பொடி, அரப்பு பொடி என பல பொடிகளை சேர்த்து தலையில் தேய்த்து வந்தால் இயற்கையான நிறமும், அதனுடன் சேர்த்து ஆரோக்கியமான தலைமுடியும் கிடைக்கும். 

வேறு சில பொருட்கள் 

தலை முடியை கலராக்க வேறு சில பொருட்களும்  பயன்படுகின்றன. அதில் வெங்காயத்தின் தோல், பீட்ரூட் ஆகியவையும் சிறந்த தீர்வைத் தரும். முக்கியாக பீட்ரூட்டை அரைத்து மற்ற பொடிகளுடன் சேர்த்து தேய்த்து வர நல்ல ரிசல்ட் கிடைக்கும். மேலும் கறிவேப்பிலையும் தலை முடியின் நிறத்தை மாற்றும் வல்லமை பெற்றுள்ளது. இந்த இயற்கை பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தினால் அதன் பலனை அடையலாம். 

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒரு போதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.