‘நாவில் எச்சிலை ஊறவைக்கும் ஆந்திரா ஸ்டைல் கத்தரிக்காய் கூழ் கறி செய்வது எப்படி’: படிப்படியான வழிமுறை!
கத்தரிக்காய் என்ற பெயரைக் குறிப்பிட்டாலே பெரும்பாலான மக்கள் முகம் சுளிப்பர். இந்த முறையில் ஆந்திரா ஸ்டைல் கத்தரிக்காய் கூழ் கறியை செய்து முயற்சி செய்து பாருங்கள்.

கத்தரிக்காய், ஒரு கிழங்கு போல அடிக்கடி நாம் உணவில் பயன்படுத்தும் ஒரு காய்கறியாகும். இதனை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
கத்தரிக்காயை ஆந்திரா ஸ்டைலில் கீழே கூறியபடி முயற்சித்துப் பாருங்கள், குறைவாக சாப்பிடுபவர்கள் கூட நிறைய சாதம் எடுத்துக்கொள்வார்கள்.
கத்திரிக்காயை வைத்து, கத்தரிக்காய் கூழ் கறியை ஆந்திரா ஸ்டைலில் செய்வது எப்படி என்பது குறித்து அறிந்துகொள்வோம்.
கத்திரிக்காய் கூழ் கறி செய்யத்தேவையான பொருட்கள்:
- கத்திரிக்காய் - அரை கிலோ
- தக்காளி - இரண்டு
- பெரிய வெங்காயம் - மூன்று
- தண்ணீர் - போதுமான அளவு
- உப்பு - சுவைக்கும் அளவு,
- மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,
- மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்,
- வெந்தயம் - ¼ டீஸ்பூன்,
- கடுகு - அரை ஸ்பூன்,
- சீரகம் - அரை டீஸ்பூன்,
- பாசிப்பருப்பு - அரை டீஸ்பூன்,
- உளுந்து - அரை டீஸ்பூன்,
- வெள்ளைப்பூண்டு பல் - ஐந்து,
- மிளகாய் - நான்கு,
- கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி,
- பச்சை மிளகாய் - நான்கு,
- கொத்தமல்லி தூள் - ஒன்றரை டீஸ்பூன்,
- சீரகப் பொடி - 1/4 தேக்கரண்டி,
- புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு,
- கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு
மேலும் படிக்க: 'கம கம மணம் வீசும் வெந்தய பன்னீர் புலாவ் அரை மணிநேரத்தில் செய்வது எப்படி?': படிப்படியான வீட்டு சமையல் முறை!
கத்திரிக்காய் கூழ் குழம்பு செய்முறை:
கத்தரிக்காய் கூழ் கறிக்கு கருப்பு கத்தரிக்காயைத் தேர்ந்தெடுத்தால் நல்லது. இப்போது இந்த கத்தரிக்காய்களை செங்குத்தாக ஐந்து அல்லது ஆறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். பின், தண்ணீரில் போட்டு பத்து நிமிடங்கள் அப்படியே ஊற வைக்கவும்.
பின் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் சேர்க்கவும். எண்ணெயில் சிறிது பெருங்காயத்தைச் சேர்க்கவும். நறுக்கிய கத்திரிக்காய் துண்டுகளை பெருங்காயத்துடன் சேர்த்து கிளறிவிடவும்.
சிறிது நேரம் கழித்து, நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து கலக்கவும். தக்காளி துண்டுகளையும் சேர்த்து கலக்கவும்.
இந்தக் கலவையுடன் மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து மெதுவாகக் கலக்கவும். இப்போது அடுப்பை அணைத்துவிடவும்.
இப்படி மேலே தயார் செய்த கலவையை மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடியாக அரைக்கவும். மிக நைசாக அரைக்க வேண்டாம். இதைத்தனியே எடுத்துவைத்துக்கொள்ளவும்.
கத்தரிக்காய் கலவையும் எப்போது புதிய கலவையுடன் சேர்ப்பது?
அதன்பின் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் சேர்க்கவும். அதில் வெந்தயம், கடுகு, சீரகம், பாசிப்பருப்பு, உளுந்து, காய்ந்த மிளகாய், வெள்ளைப்பூண்டு பல், கறிவேப்பிலை, செங்குத்தாக நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து கலக்கவும். இந்தக் கலவை முழுவதும் வெந்தவுடன், முதலில் மிக்ஸியில் நன்றாக அரைத்த கத்தரிக்காய் கலவையைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
பின்னர் கொத்தமல்லி தூள், சீரகப் பொடி, மிளகாய்த் தூள் ஆகியவற்றைச் சேர்த்து முழு கலவையையும் நன்கு கிளறிவிடவும்.
இப்போது முன்பே ஊறவைத்த புளியை, உங்கள் கைகளால் நன்றாக நசுக்கி, புளி தண்ணீரைச் சேர்த்து இந்தக் கறியுடன் கலக்கவும். வாணலியை மூடி, குறைந்த வெப்பத்தில் கால் மணி நேரம் அடுப்பில் சமைக்கவும்.
அந்தக் கலவை ஒரு பேஸ்ட் போல ஆகும் வரை சமைக்கவும். அது கிட்டத்தட்ட கெட்டியான பேஸ்ட் போல ஆனதும், கடைசியில் கொத்தமல்லி இலைகளை, அதன் மேல்பகுதியில் தூவி அடுப்பை அணைக்கவும்.
அவ்வளவுதான், உங்கள் சுவையான ஆந்திரா ஸ்டைல் கத்திரிக்காய் கூழ் கறி தயார். இதை நீங்கள் சாதத்துடனோ, சப்பாத்தியுடனோ சேர்த்து சாப்பிடுங்கள்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்