முருங்கை விதையில் பொடி செய்வது எப்படி? ஆரோக்கியம் நிறைந்தது! சாதம், டிஃபன் இரண்டுக்கும் ஏற்றது!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  முருங்கை விதையில் பொடி செய்வது எப்படி? ஆரோக்கியம் நிறைந்தது! சாதம், டிஃபன் இரண்டுக்கும் ஏற்றது!

முருங்கை விதையில் பொடி செய்வது எப்படி? ஆரோக்கியம் நிறைந்தது! சாதம், டிஃபன் இரண்டுக்கும் ஏற்றது!

Priyadarshini R HT Tamil
Dec 24, 2024 02:42 PM IST

முருங்கை விதையில் பொடி செய்து சாப்பிட பல நன்மைகள் கிடைக்கும்.

முருங்கை விதையில் பொடி செய்வது எப்படி? ஆரோக்கியம் நிறைந்தது! சாதம், டிஃபன் இரண்டுக்கும் ஏற்றது!
முருங்கை விதையில் பொடி செய்வது எப்படி? ஆரோக்கியம் நிறைந்தது! சாதம், டிஃபன் இரண்டுக்கும் ஏற்றது!

தேவையான பொருட்கள்

முருங்கை விதை – இரண்டு கப்

கடலை பருப்பு – ஒரு கப்

உளுந்து – ஒரு கப்

எண்ணெய் – கால் ஸ்பூன்

கட்டிப் பெருங்காயம் – ஒரு சிறிய கட்டி

வர மிளகாய் – 15 முதல் 20 வரை (உங்கள் கார அளவுக்கு ஏற்ப அதிகம் அல்லது குறைவாக எடுத்துக்கொள்ளவேண்டும்)

கறிவேப்பிலை – ஒரு கைப்பிடியளவு

பூண்டு – 5 பல்

மிளகு – ஒரு ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

கருப்பு எள் – ஒரு ஸ்பூன்

புளி – நெல்லிக்காய் அளவு

செய்முறை

முருங்கை விதையை எடுத்து வறுக்கவேண்டும். அடுத்து கடலை பருப்பு, உளுந்து இரண்டையும் தனித்தனியாக பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளவேண்டும். அனைத்தையும் வறுக்கும்போது அடுப்பை சிம்மில் வைத்துவிடவேண்டும்.

ஒரே ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பெருங்காய கட்டிகளை பொரித்து எடுத்துக்கொள்ளவேண்டும். கட்டிப் பெருங்காயம் இல்லாதபட்சத்தில் பெருங்காயத்தூளை எடுத்துக்கொள்ளவேண்டும்.

அடுத்து வர மிளகாய், கறிவேப்பிலை என இரண்டையும் தனித்தனியாக வறுத்துக்கொள்ளவேண்டும். இதனுடன், பூண்டையும் இடித்து சேர்த்து வறுத்துக்கொள்ளவேண்டும்.

அடுத்து அதே கடாயில் மிளகு, சீரகம் மற்றும் கருப்பு எள் சேர்த்து நன்றாக வாசம் வரும் வரை வறுத்துக்கொள்ளவேண்டும். கடைசியாக புளிளையும் சேர்த்து வறுக்கவேண்டும். அனைத்து பொருட்களையும் ஆறவைத்து, காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்துக்கொள்ளவேண்டும். சுவையான முருங்கை விதை பொடி தயார். இதை சாதம் அல்லது டிபஃன் என எதனுடன் வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிடலாம். சுவை அள்ளும்.

மேலும் முருங்கை விதையில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். எனவே ஒருமுறை இதை கட்டாயம் செய்து சாப்பிட்டு பாருங்கள். ஒருமுறை ருசித்தால், மீண்டும், மீண்டும் வேண்டும் என்று எண்ணுவீர்கள்.

மேலும் ஒரு ரெசிபியை தெரிந்துகொள்ளுங்கள்

நெல்லிக்காய் மோர் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

நெல்லிக்காய் – 2

தயிர் – ஒரு கப்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

மல்லித்தழை – சிறிதளவு

பச்சை மிளகாய் – 1

இஞ்சி – கால் இன்ச்

செய்முறை

நெல்லிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவேண்டும்.

அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து விடவேண்டும். அதில் கறிவேப்பிலை, மல்லித்தழை, பச்சை மிளகாய், இஞ்சி, தயிர் என அனைத்தையும் சேர்த்து நன்றாக அடித்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

வடிகட்டி போதிய அளவு தண்ணீர் சேர்த்து பருகவேண்டும். சுவையான நெல்லிக்காய் மோர் தயார். இதுபோல் அடிக்கடி செய்து வரும்போது அது உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைத்தரும்.

இந்த நெல்லிக்காய்களை முழுதாக ஒரு டப்பாவில் உப்புத்தண்ணீரில் வைத்து, ஃபிரிட்டிஜில் வைத்துக்கொண்டால், நெல்லிக்காய்களும் நீண்ட நாட்கள் கெடாது. இதில் இருந்து எளிதாக நெல்லிக்காய் மோர் தேவைப்படும்போது செய்து சாப்பிடலாம்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.