Tamil News  /  Lifestyle  /  How To Make Milk Payasam In A Simple Way?

Milk Payasam: பாயாசத்தைப் போடலாமே.. எளிய முறையில் பால் பாயாசம் செய்வது எப்படி?

பால் பாயாசம் செய்வது எப்படி?
பால் பாயாசம் செய்வது எப்படி?

பால் பாயாசம் செய்வது எப்படி என்பது குறித்து பார்ப்போம்.

விநாயகர் சதுர்த்தியினை முன்னிட்டு சுலபமாக பால் பாயாசம் செய்வது எப்படி என்பது குறித்துப் பார்ப்போம்.

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்:

பால் - 250 மி.லி,

நெய் - 5 டீஸ்பூன்,

முந்திரி, உலர் திராட்சை - சிறிதளவு,

சேமியா - 50 கிராம், 

நீர் - ஒரு செம்பு,

ஜவ்வரிசி - 100 கிராம்,

தேங்காய்  - சிறிதளவு,

ஏலக்காய் - சிறிதளவு, 

சர்க்கரை - சிறிதளவு,

செய்முறை: ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்துக்கொள்ளலாம். அந்த நெய்யில் கொஞ்சம் முந்திரி, கொஞ்சம் உலர் திராட்சை சேர்த்துக்கொண்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொண்டு, ஒரு பவுலில் மாற்றிக்கொள்ளவும். பின் சிறிது நெய்யில் சேமியாவை போட்டு வறுத்து எடுத்துக்கொள்ளலாம். பின், ஒரு கடாயில் கொஞ்சம் நெய்யிட்டு ஜவ்வரிசி போட்டு வறுத்து எடுத்துக்கொள்ளலாம். பின் வாணாலியில் ஒரு செம்பு நீரில், வறுத்துவைத்த ஜவ்வரிசியினை போடவும். பின் ஜவ்வரிசி வெந்தவுடன், முன்பே வறுத்துவைத்த சேமியாவை சேர்த்துக்கொள்ளலாம். பின் 250 மி.லி. பால் சேர்க்கவும். பின் அதில் நெய், துருவிய தேங்காய், சர்க்கரை, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளலாம். இறுதியாக கெட்டியாக வருவதுபோல் தெரிந்தவுடன் உலர் திராட்சை, முந்திரியை சேர்த்துக்கொள்ளவும். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

 

 

 

 

 

 

 

டாபிக்ஸ்