Healthy Recipe: ஊளைச் சதையை குறைக்கும் டேஸ்டியான கொள்ளு பானம் செய்வது எப்படி?
ஊளைச் சதையை குறைக்கும் டேஸ்டியான கொள்ளு பானம் செய்வது எப்படி என்பது குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.
கொள்ளுப் பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறி விடும். அதே போல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு.
இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது.கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம். வறுத்தும் சாப்பிடலாம். கொள்ளு உண்பது சருமத்திற்கு நன்மை பயக்கும்.
இது உங்கள் தோலில் உள்ள நிறமியைக் குறைத்து, உள்ளிருந்து நிறத்தை மேம்படுத்த உதவும். முகத்தில் கரும்புள்ளிகள், அழுக்கு போன்றவை நீங்க கொள்ளு பானம் உதவும்.
வாரம் 3 முறை குடித்தால் முகம் பொலிவு பெறும். கொள்ளு உடல் எடையை குறைப்பதில் நல்ல பலனை தரும். வாரத்தில் 2 அல்லது 3 முறை கொள்ளு பானம் அருந்துவது உடல் எடையை குறைக்கவும் உதவியாக இருக்கும்.
கொள்ளு பானம் செய்யத் தேவையானவை : .
கொள்ளு - 1 கப்
மோர் - 1/2 லிட்டர்,
நெய் - 2 டேபிள் ஸ்பூன்,
சீரகம் - 2 டேபிள் ஸ்பூன்,
மிளகாய் - 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - தேவையான அளவு
டேஸ்டியான கொள்ளு பானம் செய்முறை-
கோடையில் கொள்ளு பானத்தை தயாரிக்க முதலில் கொள்ளு ஊற வைக்க வேண்டும். பின்னர். அதை கொர கொரப்பாக அரைக்கவும்.
இதனுடன் மோர், நெய், சீரகம், உப்பு, மிளகாய், சர்க்கரை ஆகியவை சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து, பிறகு குடியுங்கள்.
உடல் புத்துணர்வு ஆகும். வெப்பத்தை சமாளித்து விடலாம்.
முகத்தில் கரும்புள்ளிகள், அழுக்கு போன்றவை நீங்க கொள்ளு பானம் உதவும். வாரம் 3 முறை குடித்தால் முகம் பொலிவு பெறும்.
கொள்ளு வைத்து தயாரிக்கப்படும் இந்த பானம் மனநிலையை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. இது ஹார்மோன் கோளாறுகளை சரிசெய்வதோடு உங்கள் மனநிலையை மேம்படுத்தும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.