Kerala Ayila Fish Kuzhambu : கம கம என கேரளா அயில மீன் குழம்பு எப்படி செய்வது.. இதோ பாருங்க.. ஈஸி டிப்ஸ்!
Kerala Ayila Fish Kuzhambu : கேரளா ஸ்டைல் அயிலை மீன் குழம்பு எப்படி செய்வது என்று இதில் பார்க்கலாம்.
கேரளா அயில மீன் குழம்பு
தேவையான பொருட்கள்
அயிலை மீன் - 5
வெங்காயம் - 2
தக்காளி - 1
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
புளி தண்ணீர் - 1 கப்
உப்பு
செய்முறை
கேரளா ஸ்டைல் அயிலை மீன் குழம்பு எப்படி செய்வது என்று இதில் பார்க்கலாம்.
முதலில் அயிலமீனை எடுத்துக்கொண்டு அதனை நன்கு கழுவி சுத்தம் செய்து வைக்கவும். முதலில் ஒரு கடாயை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி 10 சின்ன வெங்காயம் சேர்த்து மீடியம் சைஸ் தக்காளி ஒன்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும் வதக்கிய பிறகு அதனை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள் ஆரியவுடன் அதனை மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட் ஆக அரைக்கவும். இதனை நீங்கள் அம்மியில் சேர்த்து அரைத்தால் சுவை இன்னும் சுவையாக இருக்கும் அதனால் முடிந்தவரை அம்மியில் அரைத்து சேர்ப்பது நல்லது.
இப்போது ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய பூண்டு நறுக்கிய இஞ்சி காரத்திற்கு பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
இப்போது நாம் அரைத்து வைத்திருந்த சின்ன வெங்காயம் தக்காளி பேஸ்ட்டை சேர்த்து நன்கு கிளறி விடவும். மசாலாக்கு தேவையான பதத்திற்கு வந்தவுடன் அதில் சிறிது உப்பு, புளி தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
புளித்தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் நன்கு கொதித்து வந்ததும் அதில் சுத்தம் செய்த அயில மீனை சேர்த்து கொதிக்க விடவும். ஐந்து நிமிடம் குழம்பு நன்கு கொதித்து வந்ததும் பின்னர் தாளிப்பு போட்டு குழம்பை இறக்கி விடவும்.
இப்போது நமக்கு தேங்காய் எண்ணெய் மிதங்க கம கம என அயிலமீன் குழம்பு ரெடி. இதனை வீட்டில் செய்து சுவைத்து பாருங்கள். மிகவும் அருமையாக இருக்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9