Karupatti Paniyaram: இப்படி செய்யுங்க கருப்பட்டி பணியாரம்.. சும்மா தித்திப்பாக இருக்கும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Karupatti Paniyaram: இப்படி செய்யுங்க கருப்பட்டி பணியாரம்.. சும்மா தித்திப்பாக இருக்கும்!

Karupatti Paniyaram: இப்படி செய்யுங்க கருப்பட்டி பணியாரம்.. சும்மா தித்திப்பாக இருக்கும்!

Marimuthu M HT Tamil
Aug 28, 2024 02:29 PM IST

Karupatti Paniyaram: இப்படி செய்யுங்க கருப்பட்டி பணியாரம்.. சும்மா தித்திப்பாக இருக்கும்! கருப்பட்டி பணியாரம் செய்யும்முறைகள் பற்றிப் பார்ப்போம்.

Karupatti Paniyaram: இப்படி செய்யுங்க கருப்பட்டி பணியாரம்.. சும்மா தித்திப்பாக இருக்கும்!
Karupatti Paniyaram: இப்படி செய்யுங்க கருப்பட்டி பணியாரம்.. சும்மா தித்திப்பாக இருக்கும்!

அப்படி நம் பாரம்பரிய உணவுகளை தேடிப்பிடித்து உண்பது, செய்து உண்பது உடலுக்கு மிகவும் சத்தானது. அப்படி, ஒரு பாரம்பரியமிக்க சத்தான உணவுதான், கருப்பட்டி பணியாரம்.

சாதாரணமாக வெல்லம் சேர்த்து பணியாரம் செய்வோம். அதைவிட கருப்பட்டி சேர்த்து பணியாரம் செய்வது நல்லது. உடலுக்கு சத்தானது. சுவையும் நன்றாக இருக்கும். இந்த கருப்பட்டி பணியாரத்தைச் செய்வது எப்படி என்பது குறித்துப் பார்ப்போம்

கருப்பட்டி பணியாரம் செய்யத்தேவையான பொருட்கள்:

இட்லி புழுங்கல் அரிசி - ஒரு கப்;

மாவு பச்சரிசி - ஒரு கப்;

உளுந்து - கால் கப்;

வெந்தயம் - ஒரு டீஸ்பூன்

கருப்பட்டி பணியாரம் செய்முறை:

முதலில் இட்லி புழுங்கல் அரிசி ஒரு கப் அளவு, உளுந்து கால் கப் அளவு, மாவு பச்சரிசி ஒரு கப் அளவு, வெந்தயம் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொண்டு நீர் சேர்த்து நன்கு கழுவிக்கொள்ளவும். அதன்பின் நான்கு மணிநேரம் அளவான நீர் சேர்த்து ஊற வைக்கவும். பின், கிரைண்டரில் ஊற வைத்த நீரை முதலில் ஊற்றவும். அடுத்து இந்த நான்கு கலவைகளையும் ஒன்றன்பின் ஒன்றாகப்போட்டு, அரைத்துக் கொள்ளவும். இதை நன்கு 20 நிமிடங்கள் வரை வழுவழுவென அரைத்துக்கொள்ளவும். அதன்பின், அரைத்த மாவினை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். அது பார்ப்பதற்கு கொஞ்சம் கெட்டியாக இருப்பதுபோல் வைத்துக்கொள்ளவும். கூடுதலாக நீர் சேர்த்து விடக்கூடாது.

பின் அதை 7 முதல் 8 மணி நேரம் வரை வைத்து மூடிபோட்டு மூடிக்கொள்ளவேண்டும். இந்தக் காலகட்டத்தில் மாவு நன்கு புளித்துவிடும். 8 மணிநேரம் புளித்தால் தான், பணியாரம் நன்கு வரும். அதில் இருந்து பாதி மாவை, வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். மீதி இருக்கும் பாதி மாவை மட்டும் முதலில் பணியாரம் ஊற்ற எடுத்துக்கொள்ளவும்.

இப்படித்தான் கருப்பட்டியினை மாவில் கலக்கவேண்டும்:

அடுத்து ஒரு கப் தூளாக்கி கருப்பட்டியை எடுத்து, அடுப்பில் வைக்கப்பட்ட பாத்திரத்தில் போட்டுக்கொள்ளவும். ஒரு கரண்டி நீர் சேர்த்து கரையும் அளவுக்கு மாற்றவேண்டும். அதன்பின் வடிகட்டிக்கொள்ளவேண்டும். இது நன்கு ஆறியவுடன் முதலில் பாதி எடுத்து வைத்த பணியார மாவில் கலந்துகொள்ளலாம். பின் நன்கு கலந்துவிட்டுவிடலாம். அதில் சுவை கொடுக்க ஒரு டீஸ்பூன் உப்பு, கால் டீஸ்பூன் ஏலக்காய் பொடி, ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய்த்துருவல் போட்டு நன்கு கலக்கிக்கொள்ளவும். மாவு அரைக்கும்போது கெட்டியாக அரைத்தால் பணியாரம் ஊற்றும்போது கெட்டியாக இருக்கும்.

தற்போது பணியார பாத்திரத்தை எடுத்து, அடுப்பின் மீது வைத்துக் கொள்ளலாம். அதன்பின், ஒவ்வொரு குழியிலும் நல்லெண்ணெய் ஊற்றலாம். இரும்புக்கல் என்றால் சற்று அதிகமாக எண்ணெய் சேர்க்கவேண்டும். நான்ஸ்டிக் பணியார பாத்திரம் என்றால் எண்ணெய் குறைவான அளவு எடுத்தாலே போதுமானது. எண்ணெய் சூடானதும் குழியில் பணியார மாவை ஊற்றிக்கொள்ளலாம். இந்தப் பள்ளத்தில் முக்கால் அளவு பணியார மாவினை ஊற்றினாலே போதும். அதன்மேல், மூடிப்போட்டு மூடிக்கொள்ளலாம். ஒரு பக்கமாக வெந்ததும், அந்த பணியாரத்தை திருப்பிக்கொள்ளலாம். திருப்பிபோட்டபின், எல்லா பணியாரக்குழிகளிலும் குறைவாக எண்ணெய்ப் போடலாம்.

பணியாரம் ஊற்றியதில் இருந்து அடுப்பில் தீயை மிதமான அளவே வைக்கவேண்டும். அதிகமான அளவு வைத்தால் கருப்பட்டி பணியாரம் கருகிவிடும்.

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.