தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  How To Make Home Made Healthy Pizza

Home Made Pizza: ஓட்ஸ் முதல் தினை பீட்சா! வீட்டிலேயே ஹெல்த்தியான பீட்சா தயார் செய்யும் முறை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 25, 2024 05:46 PM IST

பல்வேறு உடல்நல தீமைகள் இருப்பதாக கூறப்படும் போதிலும் பீட்சாவின் மீதான மவுசு உணவு பிரியர்களிடையே சற்றும் குறையவில்லை. ஆரோக்கியமற்ற உணவு எனக்கூறப்படும் பீட்சாவை ஆரோக்கியமானதாக மாற்றவும் சில வழிகள் உள்ளன.

வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய ஆரோக்கியமான பீட்சா
வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய ஆரோக்கியமான பீட்சா

ட்ரெண்டிங் செய்திகள்

அதேபோல் பிட்னஸ் பயிற்சியாளர்கள், சுகாதார நிபுணர்கள் எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என சொல்கிறார்களோ அவற்றின் சேர்மானங்கள் அதிகம் சேர்க்கப்படும் உணவாகவே பீட்சா உள்ளது. சுவையில் மிகுந்த ருசியுடன் காணப்படும் பீட்சாவானது பல்வேறு நாள்பட்ட நோய்களான இருதய நோய் பாதிப்பு, உடல் பருமன், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்றவை ஏற்பட காரணமாக உள்ளது.

அதேநேரத்தில் இதை சாப்பிட்ட பின்னர் குற்ற உணர்வுடன் கூடிய மகிழ்ச்சியை உண்டாவதை தவிர்க்க முடியாது. நண்பர்களோடு முடிவில்லாத அரட்டை அமர்வின்போது துணையாக பீட்சா இருக்க வேண்டும் என விரும்புகிறோம். என்னதான் ஆரோக்கியமற்ற உணவாக பீட்சா கருதப்பட்டாலும், சில குறிப்பிட்ட சேர்மானங்களை சேர்த்து அதை ஆரோக்கியமான உணவாக மாற்றி அமைக்கலாம். அந்த வகையில் வீட்டிலேயே மிக எளிமையாக தயார் செய்யும் ஐந்து வகையான ஆரோக்கியம் நிறைந்த பீட்சாக்கள் பற்றி தெரிந்துகொள்வோம்.

ஓட்ஸ் பீட்சா

தேவையான பெருள்கள்

ஓட்ஸ் மாவு - 1 கப்

ஈஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை - 1 டிஸ்பூன்

தண்ணீர் - மாவு பிசைவதற்கு ஏற்ப

பீட்சா சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்

டாப்பிங்ஸ் - காளான்/ சிக்கன், ஆலிவ் இலை, கொடை மிளகாய்

செய்முறை

பீட்சாவுக்கு ஏற்றவாறு ஓட்ஸ் மாவை நன்கு பிசைந்து கொண்டு அதன் மீது லேசாக சீஸ் தடவி, பின் விருப்பதுக்கு ஏற்ப டாப்பிங்கை பரப்பிவிட வேண்டும். இதன் பின்னர் ஓவனில் வைத்து பென்னிறமாகும் வரை பேக் செய்யவும்.

உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்த உணவாக கருதப்படும் ஓட்ஸில் இனிதான சுவையுடன் கூடிய பீட்சா தயார்

காலிபிளவர் அல்லது வெஜிடபுள் பீட்சா

தேவையான பொருள்கள்

காலிபிளவர் பூக்கள் அல்லது மாவுச்சத்து நிறைந்த காய்கறிகள் ஏதாவது - 2 கப் (நன்கு மிருதுவாக நறுக்கியிருக்க வேண்டும்)

சீஸ் - ¼ கப்

பீட்சா சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்

டாப்பிங்ஸ் - கார்ன், வெள்ளரி, ஆலிவ், சுரைக்காய்

செய்முறை

காய்கறிகளை நன்கு கழுவி தண்ணீரை வடித்து அதில் சீஸ் சேர்ந்து நன்கு கிளறவும். பின் ஒரு மெல்லிசான பேக்கிங் ஷீட் எடுத்துக்கொண்டு அதன் மீது பீட்சா போன்ற வட்ட வடிவத்தில் பரப்பி 20 முதல் 30 நிமிடம் வரை பேக் செய்யவும்.

நன்கு பென்னிறமானதும் கீழே இறக்கி ருசிக்கலாம். இதற்கு டாப்பிங்காக குறைவான சீஸ் தடவி, சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை சேர்க்கலாம்.

தினை பீட்சா

தேவையான பொருள்கள்

ராகி அல்லது பல்வேறு தினைகள் கலந்த மாவு - 1 கப்

ஈஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை - 1 டிஸ்பூன்

தண்ணீர் - மாவு பிசைவதற்க ஏற்ப

பீட்சா சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்

டாப்பிங்ஸ் - பூசணி, பேசில் இலை

செய்முறை

தினை மாவை தண்ணீர், ஈஸ்ட், சர்க்கரை, பீட்சா சாஸ் ஆகியவற்றே சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். இதில் ஆரோக்கியமான டாப்பிங்கை சேர்த்து, மேற்பரப்பில் லேசாக சீஸ் சேர்க்கவும். பின் இதனை பென்னிறமாகும் வரை பேக் செய்யவும்.

எக்கச்சக்கமான சத்துக்கள் நிறைந்த தினையில் சுவை மிகுந்த பீட்சாவை ருசிக்கலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்