வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு செஞ்சு கொடுக்க சூப்பர் ஸ்நாக்ஸ்! ஆரோக்கியமான எள்ளு லட்டு செய்வது எப்படி?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு செஞ்சு கொடுக்க சூப்பர் ஸ்நாக்ஸ்! ஆரோக்கியமான எள்ளு லட்டு செய்வது எப்படி?

வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு செஞ்சு கொடுக்க சூப்பர் ஸ்நாக்ஸ்! ஆரோக்கியமான எள்ளு லட்டு செய்வது எப்படி?

Suguna Devi P HT Tamil
Published May 07, 2025 12:32 PM IST

வீட்டில் விடுமுறையில் உள்ள குழந்தைகளுக்கு ஏதேனும் சுவவையான சிற்றுண்டிகளை நாம் செய்து கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால் வெளி உணவுகளை வாங்கித் தரச் சொல்லி அடம் பிடிப்பார்கள். இன்று குழந்தைகள் விரும்பும் சுவையில் எள்ளு லட்டு செய்வது எப்படி எனப் பார்க்கப் போகிறோம்.

வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு செஞ்சு கொடுக்க சூப்பர் ஸ்நாக்ஸ்! ஆரோக்கியமான எள்ளு லட்டு செய்வது எப்படி?
வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு செஞ்சு கொடுக்க சூப்பர் ஸ்நாக்ஸ்! ஆரோக்கியமான எள்ளு லட்டு செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

ஒரு கப் வெள்ளை எள்ளு

அரை கப் வறுத்த வேர்க்கடலை

2 கப் துருவிய தேங்காய்

1 டீஸ்பூன் ஏலக்காய்த் தூள்

முக்கால் கப் வெல்லம்

2 டேபிள்ஸ்பூன் நெய்

செய்முறை

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எள்ளை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை நன்றாக வறுக்க வேண்டும். பின் அதில் வேர்க்கடலையை சேர்த்துக் மீண்டும் நன்றாக வறுக்க வேண்டும். இவை இரண்டும் பொன்னிறமாக மாறியதும் துருவிய தேங்காயை போட்டு வறுக்க வேண்டும். இவை அனைத்தையும் தனித் தனியாக வறுத்து எடுக்கவும். பின்பு அனைத்தையும் நன்கு ஆற வைத்து , பின்பு ஒரு மிக்ஸியில் வறுத்த எள்ளு மற்றும் வறுத்த வேர்க்கடலையை சேர்த்து கொரகொரப்பாக இருக்குமாறு அரைக்க வேண்டும்.

மேலும் இதில் பிறகு நாம் வறுத்து வைத்திருந்த கொப்பரை தேங்காய் சேர்த்து அரைக்கவும், பின் துருவிய வெல்லம் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். இவ்வாறு அடுத்து அரைத்த எள் கலவையை ஒரு அகன்ற பாத்திரத்தில் வைக்கவும். இப்பொழுது அதில் சிறிது சிறிதாக நெய் சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். இப்பொழுது சுவையான எள்ளு லட்டு தயார். இதனை வீட்டில் உள்ள குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் உங்களது வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு செய்து கொடுத்து மகிழுங்கள். இந்த லட்டு பதின்ம வயது பெண் பிள்ளைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான நன்மைகளை வழங்குகிறது. அடிக்கடி செய்து கொடுப்பதை வழக்கமாக்குங்கள்.

Suguna Devi P

TwittereMail
சுகுணா தேவி பி, கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். அச்சு ஊடகம், மொழிபெயர்ப்பு துறை மற்றும் டிஜிட்டல் ஊடகம் என 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தேசம், லைப்ஸ்டைல் சர்வதேசம், சினிமா உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் ஆங்கில இலக்கியத் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றுள்ள இவர், விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் 2018-2019 ஆம் ஆண்டு பணியாற்றியுள்ளார். மேலும் ஈடிவி பாரத் தமிழ், தமிழ்நாடு அரசு நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான இதழ் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2024 செப்டம்பர் மாதம் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.