Tamil News  /  Lifestyle  /  How To Make Gujarathi Style Chicken Gravy

வித்தியாசமான சுவையில் காரசாரமான குஜராத்தி சிக்கன் குழம்பு செய்வது எப்படி?

I Jayachandran HT Tamil
Mar 18, 2023 11:56 PM IST

வித்தியாசமான சுவையில் காரசாரமான குஜராத்தி சிக்கன் குழம்பு செய்வது எப்படி? என்பது குறித்து இங்கு அறிந்து கொள்வோம்.

குஜராத்தி சிக்கன் குழம்பு
குஜராத்தி சிக்கன் குழம்பு

ட்ரெண்டிங் செய்திகள்

குஜராத்தி சிக்கன் குழம்பு செய்யத் தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1 கிலோ

வெங்காயம் - 2 (பெரியது மற்றும் நறுக்கியது)

தக்காளி - 3 (பெரியது மற்றும் நறுக்கியது)

உருளைக்கிழங்கு - 2 (பெரியது மற்றும் தோலுரித்து துண்டுகளாக்கப் பட்டது)

குஜராத்தி மசாலா - 4 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 1/4 கப்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா - 2 டேபிள் ஸ்பூன்

சீரகப் பொடி - 2 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

பட்டை - 1

பிரியாணி இலை - 2

ஏலக்காய் - 6

கிராம்பு - 5

அன்னாசிப்பூ - 1

குஜராத்தி மசாலா செய்வதற்கு-

இஞ்சி - 1/4 கப் (நறுக்கியது)

பூண்டு - 30 பற்கள்

பச்சை மிளகாய் - 7

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்

குஜராத்தி சிக்கன் குழம்பு செய்முறை:

முதலில் குஜராத்தி மசாலாவுக்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடிகட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு 3-4 நிமிடம் நன்கு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

பிறகு அதில் அரைத்து வைத்துள்ள குஜராத்தி மசாலா, உப்பு, மசாலாப் பொடிகளை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

அடுத்து அதில் தக்காளியை சேர்த்து 2 நிமிடம் வக்கி, பின் சிக்கனை சேர்த்து நன்கு மசாலாவுடன் சேருமாறு பிரட்டி விட வேண்டும்.

பின் அதில் உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி, 1 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, 3 விசில் விட்டு, 10 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து இறக்க வேண்டும்.

விசில் போனதும், குக்கரை திறந்து, அதில் எலுமிச்சை சாறு மற்றும் சிறிது கொத்த மல்லியைத் தூவினால், குஜராத்தி சிக்கன் குழம்பு ரெடி!

WhatsApp channel

டாபிக்ஸ்