Herbal medicine: மருத்துவ குணம்மிக்க பூண்டு மிளகு பால் செய்வது எப்படி?
மருத்துவ குணம்மிக்க பூண்டு மிளகு பால் செய்வது எப்படி என்பது குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.
பூண்டு, மிளகு ஆகியவற்றுக்கு இயற்கையிலேயே மருததுவ குணங்கள் நிறைந்துள்ளன. பல்வேறு நோய்களுக்குஅருமருநதாக இவ்விரண்டும் பயன்படுத்தப்படுகின்றன.
மிளகையும், மஞ்சளையும் சமையலில் அன்றாடம் நாம் சேர்த்துக் கொள்வதற்குக் காரணம் அவற்றின் மருத்துவ குணங்களால் தான்.
பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித்தொழிக்கும் ஆற்றல் பெற்றது.
அதே போல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது. உடலில் உருவாகும் வாய்வுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு உள்ளது.
மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும் போது, இருமலாவது, சளியாவது, போயே போயிடும்.
இங்கு பூண்டு மிளகு பால் செய்வது எப்படி? என்று கொடுக்கப்பட்டுள்ளது. இதை படித்து சுவைத்து அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
பூண்டு மிளகு பால் செய்யத் தேவையான பொருட்கள்:
பால் – 1 கப்
பூண்டு – 3 பற்கள்
மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 2 சிட்டிகை
பனங்கற்கண்டு – 1 டீஸ்பூன்
பூண்டு மிளகு பால் செய்முறை :
முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, அதில் பூண்டைத் தட்டிப் போட்டு நன்கு பூண்டை வேக வைக்க வேண்டும். பூண்டு நன்கு வெந்ததும், அதில் பனங்கற்கண்டு சேர்க்க வேண்டும்.
பின் அதில் மிளகுத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கரண்டியால் பூண்டை நன்கு மசித்தால், பூண்டு பால் ரெடி!
பூண்டு பாலை குடிப்பதால் சளி மற்றும் காய்ச்சல் பிரச்னையில் இருந்து உடனடியாக விடுபடலாம். முகப்பரு பிரச்னைகள் வராமல் தடுக்க, பூண்டு கலந்த பாலை முகத்தில் தடவி, கழுவ வேண்டும். அல்லது அந்த பாலை குடித்து வரலாம்.