How To Make Egg Rice Easily: அரை மணிநேரத்தில் முட்டை சாதத்தை எளிதாக செய்வது எப்படி?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  How To Make Egg Rice Easily: அரை மணிநேரத்தில் முட்டை சாதத்தை எளிதாக செய்வது எப்படி?

How To Make Egg Rice Easily: அரை மணிநேரத்தில் முட்டை சாதத்தை எளிதாக செய்வது எப்படி?

Marimuthu M HT Tamil Published Apr 11, 2024 08:53 AM IST
Marimuthu M HT Tamil
Published Apr 11, 2024 08:53 AM IST

How To Make Egg Rice Easily:முட்டை சாதத்தை எளிதாக செய்வது எப்படி என்பது குறித்துப் பார்க்கலாம்.

முட்டை சாதம்
முட்டை சாதம்

முட்டை என்பது அனைவரும் வாங்கும் மலிவு விலையில் கிடைக்கும் உயர்தர புரதம் நிறைந்த உணவாகும். முட்டைகள், உயர்தர புரதங்கள் மற்றும் அமினோ அமிலங்கள், அத்தியாவசிய வைட்டமின்கள் பி 12, பி 6 மற்றும் ஃபோலேட், அத்துடன் இரும்பு, துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற தாதுக்கள் ஆகியவற்றின் மொத்த களஞ்சியமாக இருக்கிறது.

முட்டைகளை உணவில் எடுத்துக்கொள்வது காலையில் சரியான ஊட்டச்சத்தினை அளிக்கும். முட்டைகளில் காணப்படும் கோலின் மூளையின் ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் முக்கியமானது. இது நரம்பியல் கடத்தி செயல்பாட்டில் முக்கியப் பங்கினைக் கொண்டுள்ளது. மேலும் இது அறிவாற்றல் செயல்பாட்டிற்கும் பங்களிக்கும். முட்டை ஜீரணிக்க எளிதானவை மற்றும் முட்டை புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவாக இருப்பது, நாள் முழுவதும் ஆற்றலை உண்ண உதவக் கூடியது. 

முட்டைகள் குழந்தையின் திசுக்கள், தசைகள் மற்றும் உறுப்புகளின் சரியான வளர்ச்சிக்கு உதவக்கூடியது. முட்டைகள் நரம்பு செயல்பாட்டிற்கு முக்கியமான பி 12 மற்றும் இரும்பு போன்ற தாதுக்கள் போன்ற அத்தியாவசிய வைட்டமின்களை வழங்குகின்றன. முட்டைகள், குறிப்பாக ஒமேகா -3 ஊட்டச்சத்துகளால் செறிவூட்டப்பட்டவை.

இந்நிலையில் முட்டையினை வைத்து காலையில் எளிதில் தயார் செய்யக்கூடிய முட்டை சாதத்தை தயார் செய்வது எப்படி என்பது குறித்துக் காண்போம்.

முட்டை சாதம் செய்யத் தேவையான பொருட்கள்:

நல்லெண்ணெய் - சிறிதளவு,

பல்லாரி வெங்காயம் - 1,

முட்டைக்கோஸ் - சிறிதளவு,

முட்டை - 2,

பச்சை மிளகாய் - 2,

இஞ்சி பூண்டு பேஸ்ட் - சிறிதளவு,

தக்காளி - அரை,

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,

கரமசாலா - அரை டீஸ்பூன்,

மல்லித்தூள் - அரை டீஸ்பூன்,

உப்பு - அரை டீஸ்பூன், 

மிளகுத்தூள் - சிறிதளவு

செய்முறை: ஒரு வடை சட்டியில் இரண்டு டீஸ்பூன் அளவு நல்லெண்ணெய் சேர்த்துக்கொள்ளவும். எண்ணெய் சூடான உடன் ஒரு நறுக்கிய பல்லாரி வெங்காயத்தை அதன்மேல் பரப்பிக்கொள்ளவும். சிறிதளவு பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸை, அதன்மேல் தூவவும். சிறிதுநேரம், நன்கு அதனை வதக்கிக்கொள்ளவும். அதேபோல் நறுக்கிய பச்சை மிளகாயை, அதன்மேல் போட்டுக் கிளறவும்.

அதன்பின் அரை டீஸ்பூன் இஞ்சிபூண்டு பேஸ்ட்டினை சேர்த்துக்கொள்ளவும். ஒரு அரை தக்காளியை, நறுக்கி அதில் சேர்த்துக்கொள்ளவும். பின் அதனையும் நன்கு வதக்கிக்கொள்ளவும். அதன்பிறகு, அதனை ஓரத்தில் வைத்துவிட்டு, வாணலியில் இரண்டு முட்டைகளை உடைத்து அதில் போடவும். அது மிதமான சூட்டில் வந்தவுடன், அதைத் திருப்பிப்போட்டு, பொடி மாஸாக ஆக்கிக்கொள்ளவும்.

இப்போது முதலில் தக்காளி, வெங்காயம், முட்டைக்கோஸ் போட்டு, கிளறி வைத்த கலவையையும், முட்டையினை பொடி மாஸாக்கி தயார் செய்து வைத்த கலவையினையும் ஒன்றோடு ஒன்றாக மிக்ஸ் செய்து வைத்துக்கொள்ளவும். இதையடுத்து ஒரு கப் வடித்த சாதத்தை அதில் சேர்த்துக்கொள்ளுங்கள். கொஞ்சமாக மிளகாய்த்தூள், கொஞ்சமாக கரமசாலா, சிறிதளவு மல்லித்தூள், கொஞ்சமாக உப்பு, சிறிதளவு மிளகுத்தூள் ஆகியவற்றைப்போட்டு நன்கு கிளறவும். தற்போது சுவையான முட்டை சாதம் தயார்.

இதனை அலுவலகத்திற்குச் செல்பவர்கள், அரை மணிநேரத்தில் செய்து, மதிய லஞ்சுக்குத் தயார் செய்து, லஞ்ச் பாக்ஸில் எடுத்து வைத்துக்கொண்டு கிளம்பலாம்.