Bachelor Chicken Biriyani : பேச்சுலர்ஸ் இது உங்களுக்குத்தான்.. இனி ஈஸியா சிக்கன் பிரியாணி செய்யலாம்.. இதோ இந்த மாதிரி!
ரொம்ப ஆடம்பரம் இல்லாமல் பச்சரிசியில் எப்படி பிரியாணி செய்வது என்பது குறித்து பார்க்கலாம். இந்த பிரியாணி வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு செய்யலாம். அது மட்டுமில்லாமல் பேச்சுலர்க்கு இது மிகவும் உபயோகமாக இருக்கும்.
பேச்சுலர் சிக்கன் பிரியாணி
பிரியாணி என்று சொன்னால் யாருக்குதான் பிடிக்காது. இன்று பெரும்பாலானோர் எந்த நேரத்ரில் பிரியாணி கொடுத்தாலும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போதெல்லாம் விருந்து என்றாலோ பிரியாணிதான். பொதுவாக பிரியாணியை பிரஷர் குக்கரில் எளிதாக சமைக்கலாம். அந்தவகையில் பேச்சுலர் சிக்கன் பிரியாணி எப்படி செய்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சிக்கன் 500 கிராம்
பச்சை அரிசி 500 கிராம்
எண்ணெய் 3 டீஸ்பூன்
பிரியாணி மசாலா (இலவங்கப்பட்டை, கிராம்பு, நட்சத்திர சோம்பு, பே இலைகள், ஏலக்காய்)
வெங்காயம் 2
பச்சை மிளகாய் 2
தக்காளி 1
மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் 1 டி.எஸ்.பி
மிளகு தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு 1 டீஸ்பூன்
எலுமிச்சை 1/2
புதினா இலைகள்
நெய் 1 டீஸ்பூன்
செய்முறை
ரொம்ப ஆடம்பரம் இல்லாமல் பச்சரிசியில் எப்படி பிரியாணி செய்வது என்பது குறித்து பார்க்கலாம். இந்த பிரியாணி வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு செய்யலாம் அது மட்டுமில்லாமல் பேச்சுலர்க்கு இது மிகவும் உபயோக மாக இருக்கும்.
முதலில் ஒரு கடாய் எடுத்துக் கொள்ளுங்கள் அதில் பட்டை இலவங்கம் ஏலக்காய் ஸ்டார் பிரியாணி இலை ஆகியவற்றை எண்ணெய் ஊற்றி போட்டுக் கொள்ளுங்கள்.
பின்னர் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இதில் இரண்டு டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் உப்பு, தயிர் அதில் அரை கிலோ சிக்கன் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.
பின்னர் இதனை நன்கு மூடி வைத்து 10 நிமிடங்கள் வேக வைக்கவும். நன்கு வெந்திருக்க வேண்டும் பார்க்கும்போது என்னை பிரிந்து இருக்க வேண்டும் அப்பொழுதுதான் நன்றாக வரும்.
ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். அதன்படி இரண்டு கப் தண்ணீர் ஊற்றி அதில் புதினா சேர்த்து எலுமிச்சைப்பழம் சாறை பிழிந்து விட்டு அரை மணி நேரம் ஊற வைத்த பச்சரிசியை கழுவி சேர்த்துக் கொள்ளுங்கள்.
பின்னர் அடுப்பை சிம்மில் வைத்து ஒரு 15 நிமிடம் வேக வைக்கவும் பின்னர் தம் போட்டு எடுத்துப் பாருங்கள் சுவையான பிரியாணி ரெடி. பேச்சுலர்ஸ்கள் இந்த மாதிரி பிரியாணி செய்து சாப்பிடலாம் இந்த ரெசிபி மிகவும் ஈஸியாக இருக்கும் எனவே இதனை ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்கள்.
சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
மனஅழுத்தத்துக்கு மருந்து
சிக்கனில் டிரிப்டோஃபன் மற்றும் அமினோ அமிலம் உள்ளது. இவையிரண்டும் உடலில் செரோட்டினின் சுரக்க உதவுகிறது. இது உங்கள் மனநிலையை மகிழ்ச்சிப்படுத்தும் ஒரு வேதிப்பொருள்.
இதில் உள்ள வைட்டமின் மற்றும் மினரல்கள் மூளை இயக்கத்துக்கு உதவுகிறது
வைட்டமின் பி12 மற்றும் சோலைன் உள்ளது. இது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. நரம்பு மண்டலத்துக்கும் உதவுகிறது. வயோதிகர்களுக்கு நினைவாற்றலை வழங்குகிறது.
சாப்பிடுவதற்கு எளிதானது
சிக்கன் சாப்பிடுவது எளிதானது. கடித்து விழுங்க சிறந்தது. சுவை நிறைந்தது. இதில் அதிக புரதச்சத்து அதிகம் உள்ளது.
சிக்கன் தசையை வலுப்படுத்துகிறது
இதில் உயர்தர புரதச்சத்து உள்ளது. 30 கிராம் புரதச்சத்து தசை வளர்ச்சிக்கு உதவுகிறது.
எலும்பை வலுப்படுத்துகிறது
இதில் உள்ள புரதச்சத்து எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது
வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தது. இது இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
எடை இழக்க உதவுகிறது
புரதச்சத்து நிறைந்தது. அது ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. எடையை மேலாண்மை செய்ய உதவுகிறது.
சிக்கனை முழுமையாக சமைத்துதான் சாப்பிட வேண்டும். முறையாக சாப்பிடவேண்டும். அப்போதுதான் உணவில் இருந்து பரவும் நோய்கள் குணமாகும். 165 டிகிரியில் அதை எப்போதும் சமைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இது சளி, இருமலை குணப்படுத்த உதவுகிறது. இது சிங்க் மற்றும் புரதச்சத்து நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்