Soybean Kebab: இதை சைவம் என்று சொன்னால் அசைவம் கூட நம்பாது.. சுவையான சோயாபீன் கபாப் செய்வது எப்படி?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Soybean Kebab: இதை சைவம் என்று சொன்னால் அசைவம் கூட நம்பாது.. சுவையான சோயாபீன் கபாப் செய்வது எப்படி?

Soybean Kebab: இதை சைவம் என்று சொன்னால் அசைவம் கூட நம்பாது.. சுவையான சோயாபீன் கபாப் செய்வது எப்படி?

Marimuthu M HT Tamil
Jan 25, 2025 02:24 PM IST

Soybean Kebab: இதை சைவம் என்று சொன்னால் அசைவம் கூட நம்பாது என்னும் சொல்லாடலின்படி, சுவையான சோயாபீன் கபாப் செய்வது எப்படி என்பது குறித்துப் பார்ப்போம்.

Soybean Kebab: இதை சைவம் என்று சொன்னால் அசைவம் கூட நம்பாது.. சுவையான சோயாபீன் கபாப் செய்வது எப்படி?
Soybean Kebab: இதை சைவம் என்று சொன்னால் அசைவம் கூட நம்பாது.. சுவையான சோயாபீன் கபாப் செய்வது எப்படி?

இது இந்தியா மட்டுமல்லாது, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பிரபலமான உணவாகும்.

சோயாபீன் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது பாலாவ் போன்ற சோயா ரைஸ், சோயா மஞ்சூரியன் போன்ற பல்வேறு உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது.

சோயாவில் இருந்து சில சுவையான செய்முறையை முயற்சிக்கும் பலர் உள்ளனர். நீங்கள் எப்போதாவது சோயா கபாப் சாப்பிட்டிருக்கிறீர்களா? இது சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். தயாரிப்பதும் மிகவும் எளிது. வெறும் 15 நிமிடங்களில் செய்துவிடலாம். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். எனவே சுவையான சோயாபீன் கபாப் செய்வது எப்படி என்பது குறித்துப் பார்ப்போம்.

சோயாபீன் கபாப் செய்யத் தேவையானவை:

  • புழுங்கல் அரிசி - ஒரு கப்,
  • உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
  • காய்ந்த மிளகாய் - 2,
  • கறிவேப்பிலை - சிறிதளவு,
  • கடுகு - தலா ஒரு டீஸ்பூன்,
  • கறிவேப்பிலை - சிறிதளவு,
  • எண்ணெய், உப்பு - தேவையான அளவு,
  • சீரகம் - 1/2 டீஸ்பூன்

சோயா பீன் கபாப் செய்வது எப்படி?:

சோயா பீன் கபாப்பினை எவ்வாறு செய்வது என்பது குறித்துப் பேசுவோம்.

சுவையான சோயாபீன் கபாப் தயாரிக்க, முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். கொதிக்கும் நீரில் சோயாவைச் சேர்த்து வேகவிடவும்.

மறுபுறம், உருளைக்கிழங்கை தனியாக வேகவைக்கவும். அவற்றை 2 முதல் 3 நிமிடங்கள் வேகவைத்தபின், அவற்றிலிருந்து அனைத்து தண்ணீரையும் வெளியேற்ற, வடிகட்டிவிட்டு, உருளைக்கிழங்கினை மசித்துவிடவும்.

இப்போது சோயாவை ஒரு மிக்ஸி ஜாடியில் வைத்துக்கொள்ளவும். குறிப்பாக, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து மென்மையான பேஸ்ட் போன்ற பதத்திற்கு மிக்ஸி ஜாடியில் எடுத்துக்கொள்ளவும். இப்போது தயார் செய்ததை, ஒரு தட்டில் வைக்கவும்.

அதே கலவையில், வேகவைத்த உருளைக்கிழங்கை சேர்த்து கலக்கிக்கொள்ளவும். இப்போது கொத்தமல்லி இலைகள் மற்றும் அனைத்து மசாலாப் பொருட்களையும் கலந்து மென்மையான மாவாக மிக்ஸ் செய்துகொள்ளவும்.

இப்போது இந்த மாவு கலவையிலிருந்து சிறிய துண்டுகளை எடுத்து கபாப் போன்ற வடிவமாக மாற்றவும். (கபாப் என்பது, துண்டு துண்தாக வெட்டப்பட்ட இறைச்சியை மசாலாப் பொருட்களுடன் கலந்து, நெருப்பில் வறுத்த உணவு வகையாகும்).

பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய்யை ஊற்றவும். எண்ணெய் சூடானதும், சோயா கலவையை கபாப் போல எடுத்து எண்ணெயில் வறுக்கவும். பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பின்னர் அதை ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும். அவ்வளவுதான், சுவையான சோயாபீன் கபாப் சாப்பிடத் தயாராக உள்ளது.

இந்த ஆரோக்கியமான சோயாபீன் கபாப்பை தக்காளி சட்னி, சாஸ் அல்லது உங்களுக்கு விருப்பமான எந்த சட்னியுடனும் கலந்து சாப்பிடலாம். ஒரு முறை முயற்சி செய்யுங்கள் உங்களுக்குப் பிடிக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.