Elaneer Payasam: 5 நிமிடத்தில் தயாராகும் இளநீர் பாயாசம்
இளநீர் பாயாசம் எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
இளநீர் வழுக்கை – ஒரு கப்
சர்க்கரை – ஒன்றரை கப்
பால் – 2 கப்
தேங்காய் பால் – ஒரு கப்
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்,
வறுக்க தேவையான பொருட்கள்
நெய் – மூன்று டீஸ்பூன்
பாதாம் - 5
முந்திரி – 5
பிஸ்தா -5
உலர் திராட்சை – 10
சார பருப்பு – 2 டீஸ்பூன்
செய்முறை
* வழுக்கையான இளநீரின் உள்ளிருக்கும் தேங்காயை நன்கு கழுவி எடுத்து, அதோடு தேங்காய் பால் சேர்த்து மிக்ஸியில் குழைவாக அரைக்கவும்.
- பின்பு அதில் 1/4 ஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்த்து 2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். ஒரு கடாயில் நெய் விட்டு அது சூடானதும்..
- உலர் திராட்சை & பருப்புகளை போட்டு பொன்னிறமாக வறுத்து அதை தனியே எடுத்து வைக்கவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து 2 கப் பாலினை ஊற்றி அதில் சர்க்கரை சேர்த்து நிறுத்தாமல் நன்கு கிளறவும். பால் நன்கு வற்றி பாஸந்தி பதத்தில் வந்ததும் மீதி ஏலக்காய் பொடியைத் தூவி..
- வறுத்த உலர் பருப்புகளை சேர்த்து நன்கு அதை கிளறி அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும். இந்தக்கலவை நன்கு ஆறியதும் அரைத்த இளநீர் கலவையை சேர்த்துக் கலக்கி இதை 20 நிமிடங்கள் ஃபிரிட்ஜில் வைக்கவும்.
- ருசியான இளநீர் பாயாசம் ரெடி.
குறிப்பு : பாலுக்கு பதில் மில்க் மெய்ட், கன்டன்ஸ்ட் பால், சேர்த்தும் செய்யலாம். இதில் சேர்க்கும் உலர் பருப்புகள் உங்கள் விருப்பமே.பாலை ரொம்ப பால்கோவா மாதிரி கிளறிவிடக் கூடாது பாஸந்தி பதமே சரி. இளநீர் வழுக்கை இளசாக இருக்கவேண்டும் கெட்டியானது ருசிக்காது. சிலர் பாலில் சேமியா சேர்த்து வேக வைத்தும் செய்வார்கள்!
நன்றி: வெங்கிஸ் கிச்சன்
டாபிக்ஸ்