Chilli Rice: குழம்பு வைக்க நேரமில்லையா.. கிடைக்கிற கொஞ்ச நேரத்தில் செம டேஸ்ட்டியான குடை மிளகாய் சாதம் செய்வது எப்படி?
Chilli Rice: குழம்பு வைக்க நேரமில்லையா.. கிடைக்கிற கொஞ்ச நேரத்தில் செம டேஸ்ட்டியான குடை மிளகாய் சாதம் செய்வது எப்படி? என்பது குறித்துப் பார்ப்போம்.
Chilli Rice: பரபரக்கும் வேலைச்சூழலில் கிடைக்கும் சிறிது நேரத்தில் ஹோட்டலுக்குச் சென்று ஆரோக்கியமில்லாத ஃபாஸ்ட்புட் உணவுகளை ருசிப்பவர்கள் நம்மில் ஏராளம். அதனால் பணத்துக்குப் பணமும் நஷ்டம். உடல் ஆரோக்கியமும் அதல பாதாளத்துக்கு நம்மை இட்டுச் சென்றுவிடுகிறது. இப்படியொரு நிலையில், ருசியான எளிமையான குடைமிளகாய் சாதம் செய்து சாப்பிடலாம்.
குடைமிளகாய் சாதம் செய்யத் தேவையான பொருட்கள்:
சாதம் - மூன்றுபேர் சாப்பிடும் அளவு;
வரமிளகாய் - 4;
வெள்ளைப்பூண்டு - 10 பல்;
எண்ணெய் - 2 டீஸ்பூன்;
கடுகு, உளுந்து - தேவையான அளவு;
பெரிய வெங்காயம் - 1;
தக்காளி - 2;
குடை மிளகாய் - 1;
மஞ்சள் தூள் - 1
குடைமிளகாய் சாதம் செய்வது எப்படி:
மூன்று பேர் சாப்பிடும் அளவுக்கு சாதம் வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பின், நான்கு வரமிளகாயை, 10 வெள்ளைப்பூண்டு பல் சேர்த்து, கொஞ்சம் நீர் சேர்த்து மசாலா அரைத்து எடுத்துக்கொள்ளலாம்.
மிகவும் வழுவழு என்று அரைக்கக் கூடாது. எனவே, குறைவான அளவு நீர் ஊற்றி அரைத்தாலே நன்றாக இருக்கும். ஸ்டவ் ஆன் செய்துவிட்டு, அதில் ஒரு கடாயை வைத்துக்கொள்ள வேண்டும். பின் அதன்மேல் தேவைப்படும் அளவு எண்ணெயை ஊற்றிக்கொள்ள வேண்டும்.
பிறகு கடுகு, உளுந்து, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு அதில் தாளிக்க வேண்டும். பின் நீளவாக்கில் வெட்டப்பட்ட பெரிய வெங்காயத்தைச் சேர்க்கவும். அதனைத்தொடர்ந்து பொன்னிறமாக அதனை வறுத்துக்கொள்ள வேண்டும். தக்காளி இரண்டு எடுத்துக்கொண்டு, அதனை நன்கு நறுக்கிக்கொள்ள வேண்டும். பின் அந்த வதக்கிய வெங்காயத்தின்மேல் தக்காளியைப் போட்டு நன்கு கிளறிக்கொள்ளவும். அதன்பின், குடைமிளகாயை நன்கு நறுக்கி, அதில் சேர்த்துக் கிளறவும்.
பச்சை வாடை போகும் வரை கிளறுதல் முக்கியம்:
இந்தக் கலவை கொஞ்சம் வதங்கிய பின் உப்பு சேர்த்துக் கொள்ளலாம். தக்காளி நன்கு வதங்கிய பின், ஒரு டீஸ்பூன் மஞ்சள் சேர்க்கலாம். அடுத்து நாம் அரைத்து எடுத்த மசாலாவை சேர்த்துக்கொள்ளலாம். ஒரு 2 நிமிஷத்துக்கு இந்த மசாலாவை, தக்காளி, குடைமிளகாயுடன் வதக்கி விட்டுக்கலாம்.
பச்சை வாடை போகும் அளவு நன்கு வதக்கவும். இப்போது அடுப்பில் தீயை சிறியளவுக்கு வைத்து, சாதத்தை அந்த கடாயில் சேர்த்துவிடலாம். அதன்பின் நன்கு கிளறிக்கொள்ளலாம்.
பூண்டு பற்களை சிறிது சிறிதாக நறுக்கி கூட, அந்த மசாலாவை தயாரிக்கலாம். ஆனால், மசாலா செய்து இவ்வாறு சேர்ப்பதால், பூண்டு வேண்டாமென்று ஒதுக்குபவர்கள்கூட, இதனைச் சாப்பிடுவார்கள். கிளறும்போது இரண்டு கரண்டியை இரண்டு கைகளில் பிடித்துக்கொண்டு, சாதத்தைக் கிளறிவிடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம், சாதம் உடையாது. அதன்பின், அதன்மேல் சிறிது உப்பு போட்டு தூவி விடவேண்டும்.
ஏனென்றால், முன்பே நாம் உப்பு போட்டு இருந்தாலும், இதில் மசாலா, தக்காளி சேர்க்கும்போது உப்பு பத்தாமல் போய்விடும். அதனால் உப்பு சேர்க்கலாம். இதன்மேல் மல்லித்தழை தூவிக்கலாம். அவ்வளவு தான் ருசியான குழம்பு மற்றும் சாம்பார் தேவைப்படாத குடைமிளகாய் சாதம் தயார். பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். சிவப்புக்கு தக்காளி, பச்சைக்கு குடை மிளகாய் ஆகியவை நிறங்களை அந்த சாதத்துக்குத் தருகின்றன.
இந்த எளிய குடைமிளகாய் சாதத்தை அரை மணிநேரத்தில் ரெடிசெய்துவிடமுடியும்.
டாபிக்ஸ்