ஓவன் எதற்கு? குக்கரே போதும் கப் கேக் செய்ய! குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்! இதோ ஈசியான ரெசிபி!
குழந்தைகளுக்கு பிடிக்கும் படியுமான ஒரு உணவு என்றால் கேக் தான். அதில் ஒரு வகையான கப் கேக்கை ஓவன் இல்லாமல் குக்கரை வைத்தே செய்யலாம். இதனை செய்வது எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.
பள்ளி விடுமுறை ஆரம்பித்து சில தினங்கள் ஆகி விட்டது. பள்ளிக்கு சென்று திரும்பிய மாலை நேரத்திலேயே குழந்தைகள் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு ஏதேனும் கொடுக்க வேண்டும் என்றால் கடைகளில் வாங்கி கொடுத்தால் செலவும் அதிகமாகும். அது நல்ல உணவாகவும் இருக்காது. சுத்தமாக தயாரித்து இருக்குமா என்ற கேள்வியும் எழும்பும். எனவே வீட்டில் சிற்றுண்டி செய்து கொடுப்பதே நல்லதாக்கும். ஆனால் இப்பொழுது விடுமுறை விடுத்து வீட்டிலேயே இருக்கிறார்கள். இது மேலும் தலைவலி தான். இந்த விடுமுறை நாட்கள் முழுவதும் வீட்டிலேயே இருந்து கொண்டு ஏதாவது சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள். எனவே அவர்களுக்கு பிடிக்கும் படியுமான ஒரு உணவு என்றால் கேக் தான். அதில் ஒரு வகையான கப் கேக்கை ஓவன் இல்லாமல் குக்கரை வைத்தே செய்யலாம். இதனை செய்வது எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
ஒரு கப் மைதா
ஒரு கப் சர்க்கரை
அரை கப் கோகோ பவுடர்
கால் டீஸ்பூன் பேக்கிங் சோடா
அரை டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
1 சிட்டிகை உப்பு
கால் கப் எண்ணெய்
அரை கப் காய்ச்சி ஆறவைத்த பால்
1 டீஸ்பூன் வெண்ணிலா எசென்ஸ்
முக்கால் கப் சாக்லேட்
பட்டர் கிரீம்
2 டீஸ்பூன் ஐசிங் சுகர்
50 கிராம் உப்பு இல்லாத வெண்ணெய்
செய்முறை
முதலிள் ஒரு அகன்ற பாத்திரத்தில் மைதாமாவை போட வேண்டும். பின்னர் அதில் கோகோ பவுடர், பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து வைக்க வேண்டும். பிறகு மற்றோரு பாத்திரத்தில் சர்க்கரை, எண்ணெய், காய்ச்சி ஆறவைத்த பால், வெண்ணிலா எசென்ஸ் ஆகியவற்றை சேர்த்து கலந்துவிட வேண்டும். பிறகு நாம் கலக்கி வைத்த கேக் மாவில் இந்த சர்க்கரை கலவையை சேர்த்து நன்கு பீட் செய்யவும். இதனை நீண்ட நேரம் பீட் செய்தால் மட்டுமே கேக் நன்கு உப்பி வரும். பின்பு இதில் சாக்லேட் துண்டுகளை சேர்த்து கலந்துவிடவும். பின்னர் கப் கேக் அச்சில் மாவை ஊற்றி கேக் டின்னில் வைத்து டின்னை குக்கரில் வைத்து, குக்கரை ரப்பர் மற்றும் விசில் இன்றி மூட வேண்டும். குறைந்த தீயில் வேக விட வேண்டும். உங்களிடம் ஓவன் இருந்தால் 45 நிமிடம் பேக் செய்து எடுக்கலாம்.
பட்டர் கிரீம் ப்ரோஸ்டிங் செய்ய, ஒரு அகன்ற பாத்திரத்தை எடுத்து அடிக்கில் ஐசிங் சுகர், உப்பில்லாத வெண்ணெய், வெண்ணிலா எசென்ஸ், காய்ச்சி ஆறவைத்த பால், கோகோ பவுடர் சேர்த்து கலக்க வேண்டும். கலந்த கிரீமை பைப்பிங் பையில் போட்டு வைக்கவும். உங்களிடம் இந்த பை இல்லையென்றால். இரு கவரில் போட்டு அடிப்பகுதியில் துளையிட்டு பயன்படுத்தலாம். கப் கேக் நன்கு ஆறியதும் அச்சில் இருந்து எடுத்து தட்டில் வைத்து, அதின் மீது கிரீமை வைத்து அலங்கரிக்கவும். கடைசியாக துருவிய சாக்லேட்டை தூவி பரிமாறவும். குக்கர் கப் கேக் தயார்!
டாபிக்ஸ்