சுட சுட வாழைக்காய் சிப்ஸ்! வீட்டிலேயே செய்யலாம்! பக்காவான ரெசிபி உள்ளே!
அனைவரும் விரும்பும் வாழைக்காய் சிப்ஸ் நமது வீட்டிலேயே எளிமையாக செய்யலாம். அந்த வாழைக்காய் சிப்ஸ் செய்யும் எளிய முறையை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
சிப்ஸ் என்றாலே எல்லாருக்கும் பிடித்தமான உணவாகும். குறிப்பாக மாலை நேரத்தில் சூடான சிப்ஸ் சாப்பிட்டு டீ குடிப்பதே பெரும்பாலாருக்கான பிடித்தமான பொழுதுபோக்காகும். கடைகளில் செய்யப்படும் சிப்ஸ்கள் சில சமயங்களில் சுத்தமான எண்ணெயில் செய்யப்படுவதில்லை. குறிப்பாக இந்த சிபஸ்களை சாப்பிடும் போது வயிறு தொந்தரவுகளும் ஏற்படுகின்றன. அனைவரும் விரும்பும் வாழைக்காய் சிப்ஸ் நமது வீட்டிலேயே எளிமையாக செய்யலாம். அந்த வாழைக்காய் சிப்ஸ் செய்யும் எளிய முறையை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
தேவையான பொருட்கள்
2 வாழைக்காய்
கால் டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூள்
கால் டேபிள்ஸ்பூன் மிளகுத் தூள்
கால் டேபிள்ஸ்பூன் சீரக தூள்
சிறிதளவு கறிவேப்பிலை
தேவையான அளவு மிளகாய் தூள்
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு எண்ணெய்
செய்முறை
முதலில் 2 வாழைக்காய்கலையும் எடுத்து தோலை சீவி அதை தண்ணீரில் போட்டு அதனுடன் அரை டேபிள்ஸ்பூன் அளவு உள்ள உப்பு சேர்த்து சுமார் அரை மணி நேரத்தில் இருந்து 40 நிமிடம் வரை ஊற விடவும். நன்றாக ஊறிய பின்னர் வாழைக்காயை எடுத்து அதை வட்ட வடிவில் சீவி ஒரு தட்டில் வைத்து கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் வாழைக்காயை பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடான பின்பு அதில் சீவி வைத்திருக்கும் வாழைக்காயை கடாயின் அளவிற்கேற்ப பக்குவமாக எண்ணெயில் போட வேண்டும்.
பின்பு ஒரு அறி கரண்டியின் மூலம் அதை நன்கு திருப்பி விட்டு கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் அனைத்து பக்க ங்களிலும் அது நன்றாக வெந்து வரும். வாழைக்காய் சிப்ஸ் நன்கு வெந்ததும் அதை கரண்டியின் மூலம் எடுத்து எண்ணெய்யை வடித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும். சீவி வைத்திருந்த மீதி வாழைக்காயை போட்டு பொரித்து எடுப்பதற்கு முன் எண்ணெய்யை சூடான பதத்திற்கு கொண்டு வருவதற்கு சிறிது நேரம் அதை சுட விடவும். எண்ணெய் சுடுவதற்குள் பொரித்து எடுத்து வைத்திருக்கும் சிப்ஸ் சூடாக இருக்கும் போதே அதில் சீரக தூள், மிளகு தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள் சேர்த்து அதை நன்கு கலந்து விட வேண்டும்.
அடுத்து எண்ணெய் சூடான பதத்தில் இருப்பதை உறுதி செய்த பின்னர் மீதமுள்ள வாழைக்காய்களை முன்பு செய்தது போன்ற எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து மசாலாக்களை தூவி நன்கு கலந்து விடவும். சிப்ஸுகளை பொரித்து எடுத்த பின்பு கறிவேப்பிலையை சூடாக இருக்கும் எண்ணெயில் போட்டு அடுப்பை உடனடியாக அணைத்து விட்டு கருவேப்பிலை நிறம் மாறுவதற்குள் அதை எடுத்து சிப்ஸ் உடன் சேர்த்து நன்கு கலந்து விட்டு சிப்ஸை சுட சுட பரிமாறவும்.இப்பொழுது சூடான, சுவையான மற்றும் மொறு மொறுப்பான வாழைக்காய் சிப்ஸ் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.
டாபிக்ஸ்