Tatsy Recipe: ருசியான சத்தான வாழைக்காய் பால் குழம்பு செய்முறை
ருசியான சத்தான வாழைக்காய் பால் குழம்பு செய்முறை குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்
பொதுவாக வாழைக்காய் சாப்பிட்டால் வாய்வுத் தொல்லை ஏற்படும் என்ற அச்சத்தில் பெரும்பாலானவர்கள் வாழைக்காயை ஒதுக்கிவிடுவார்கள். ஆனால் வாழைக்காயில் பல ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
வாழைக்காயை வைத்து பால்கறி செய்வது பற்றி இங்கு பார்க்கலாம்.
வாழைக்காய் பால் குழம்பு செய்யத் தேவையானப்பொருட்கள்:
வாழைக்காய் - 1
தேங்காய் - 1
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
தாளிக்க:
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சாம்பார் வெங்காயம் - 2 அல்லது 3 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
வாழைக்காய் பால் குழம்பு செய்முறை:
தேங்காயைத் துருவி கெட்டியான பாலை எடுக்கவும். பின்னர் சிறிது தண்ணீரை தேங்கா யுடன் சேர்த்து அரைத்து, இரண்டாம் பாலையும் பிழிந்து எடுக்கவும்.
கடையில் கிடைக்கும் தேங்காய்ப் பாலை உபயோகித்தால், மேற்கண்ட வேலை மிச்சம். வாழைக் காயின் தோலை சீவி விட்டு, நீளவாக்கில் நான்காக வெட்டவும்.
பின்னர் அதை 3 அங்குலத் துண்டுகளாக வெட்டவும்.
வெட்டிய துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் இரண்டாம் பாலைச் சேர்க்கவும். காய்கள் மூழ்கும் அளவிற்கு பால் இருக்க வேண்டும்.
தேவைப்பட்டால் சிறிது தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளலாம்.
ரெடிமேட் தேங்காய் பால் உபயோகித்தால், 2 அல்லது 3 டேபிள் ஸ்பூன் திக்கான பாலுடன் சிறிது தண்ணீரைச் சேர்த்து உபயோகிக் கவும்.
காய் மூழ்கும் அளவுக்கு பாலும் தண்ணீரும் சேர்த்து, அத்துடன் உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்க விடவும்.
காய் நன்றாக வெந்ததும், அடுப்பை சிறு தீயில் வைத்து, திக்கான பாலை ஊற்றவும்.
மீண்டும் குழம்பு ஒரு கொதி வந்ததும், இறக்கி வைத்து, கடுகு, வெங்காயம், கறிவேப்பிலைத் தாளித்துக் கொட்டவும்.
தாளிப்பதற்கு தேங்காய் எண்ணை உபயோகித்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
சூடான சாதம் மற்றும் தொட்டுக் கொள்ள, பொரித்த அப்பளம், வடகம் ஆகியவற்றுடன் பரிமாறலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்