தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  How To Make Badam Halwa

badam halwa recipe: குழந்தைகள் விரும்பும் பாதாம் அல்வா செய்யலாம் வாங்க!

I Jayachandran HT Tamil
Nov 30, 2022 08:58 PM IST

பாதாம் அல்வா செய்யும் முறை பற்றி இங்கு காணலாம்.

பாதாம் அல்வா
பாதாம் அல்வா

ட்ரெண்டிங் செய்திகள்

பாதாம் பருப்பு – 1 கப்

சர்க்கரை – ¾ கப்

நெய் – ¼ கப்

தண்ணீர் – சிறிதளவு

செய்முறை-

பாதாம் பருப்பை வெந்நீரில் இரண்டு மணி நேரம் நன்கு ஊற வைத்துக் கொள்ளவும்.

நன்கு ஊறிய பின்னர் பாதாம் பருப்பின் தோலை உரித்து எடுத்துக் கொள்ளவும்.

உரித்த பாதாம் பருப்பை ஒரு மிக்சி ஜாரில் சிறிதளவு தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.

அடிகனமான ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். நான்ஸ்டிக் பாத்திரமாக இருந்தால் மிகவும் சிறந்தது. அல்வா நன்கு ஒட்டாமல் வரும்.

பாத்திரம் சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு அரைத்து வைத்துள்ள பாதாம் விழுதை சேர்க்கவும்.

எடுத்து வைத்துள்ள நெய்யில் பாதி மற்றும் சர்க்கரையை சேர்த்துக் கொள்ளவும்.

நன்கு கைவிடாமல் கலந்து விடவும்.

சர்க்கரை நன்கு கரைந்த பின் மீதமுள்ள நெய்யை சேர்க்கவும்.

நெய் பிரிந்து வெளியே வரும் அதுவரை நன்கு கைவிடாமல் கிளறிவிடவும்.

தேவைபட்டால் கேசரி கலர் அல்லது குங்குமப் பூவை பாலில் சேர்த்து கலந்து பின் சேர்த்துக் கொள்ளலாம்.

வாசனைக்காக சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ளவும்.

கடைசியாக பொடியாக நறுக்கிய பாதாம் சிறிதளவு சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான பாதாம் அல்வா தயார்.

WhatsApp channel