உங்கள் பற்கள் பளிச் என மின்ன வேண்டுமா? பற்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பின்பற்ற வேண்டிய உதவிக்குறிப்புகள் இதோ!
பல் நமது உடலில் முக்கியமான உறுப்பு ஆகும். நமது செரிமான மண்டலத்தில் முதல் உறுப்பாகவும் இந்த பற்கள் இருந்து வருகின்றன. இந்த பற்களை பாதுகாப்பது ஒவ்வொருவரின் முக்கிய கடமையாகும். பற்களை பாதுக்கப்பதால் உடலின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம்.

பல் நமது உடலில் முக்கியமான உறுப்பு ஆகும். நமது செரிமான மண்டலத்தில் முதல் உறுப்பாகவும் இந்த பற்கள் இருந்து வருகின்றன. தமிழில் ‘பல் போனால் சொல் போகும்’ என்ற கூற்று ஒன்று இருந்து வருகிறது. இதன் அடிப்படையில் நாம் பேசுவதற்கு முக்கிய ஆதாரமாக பற்கள் உள்ளன. இந்த பற்களை பாதுகாப்பது ஒவ்வொருவரின் முக்கிய கடமையாகும். பற்களை பாதுக்கப்பதால் உடலின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம். இத்தகைய பற்களில் வரக்கூடிய முக்கிய பிரச்சனை என்றால் பற் சொத்தை (Cavities) எனும் பாதிப்பு ஆகும். இது சிறியவர் முதல் பெரியவர் வரை வரும் பொதுவான பாதிப்பு ஆகும். இவை பெரும்பாலும் நாம் சாப்பிடும் உணவு துணுக்குகள் பற்களில் தங்கி விடுவதால் ஏற்படுகின்றன.
சக்கரை பொருள் பல் இடுக்குகளில் ஒட்டிக் கொள்ளும்போது வாயில் உள்ள பாக்டீரியாக்கள் இவற்றுடன் வினைபுரிந்து லேக்டிக் அமிலத்தைச் சுரக்கின்றன.இந்த அமிலம் எனாமலை அழித்து பற்களை சிதைக்கிறது.இதன் விளைவால் பற்கள் சொத்தை ஆகின்றன.இதன் முதல் அறிகுறி, பற்களில் கூச்சம் உண்டாகும்..முக்கியமாக இனிப்பு சாப்பிடும்போது, குளிர்ச்சியான அல்லது சூடான பானங்களை அருந்தும்போது பற்களில் கூச்சம் ஏற்படும்.பிறகு பல்லில் வலி ஏற்படும். உணவை மெல்லும்போது பல் வலி அதிகரிக்கும். சொத்தைப் பல்லை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால், நாளடைவில் இந்த வேர்கள் வலுவிழந்து போகும் போது பற்கள் ஆட்டம் கண்டு தாமாகவே விழுந்துவிடும்.