எளிதாக உடல் எடையை குறைக்க வேண்டுமா?.. தயிரை இப்படி சாப்பிட்டு பாருங்க.. சில நாட்களிலேயே வித்தியாசம் தெரியும்!
எடை குறைப்பில் தயிர் மிகவும் உதவியாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், புரோட்டீன், புரோபயாடிக்குகள், கால்சியம் போன்றவற்றுடன், ஆன்டிஆக்ஸிடன்ட்களால் நிறைந்த தயிரை சரியான முறையில் சாப்பிட்டால் எளிதாக எடை குறையலாம். சில நாட்களிலேயே வித்தியாசம் தெரியும். எப்படி என்பதைப் பார்ப்போம்.

அதிகரித்து வரும் எடையில் இன்று கிட்டத்தட்ட அனைவரும் சிரமப்படுகிறார்கள். இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று தவறான உணவு பழக்கம், மற்றொன்று சரியான உடல் உழைப்பு இல்லாதது. காரணங்கள் எதுவாயினும், எடை குறைக்க பலர் பல வழிகளில் முயற்சி செய்கிறார்கள். நடப்பது, ஓடுவது போன்ற பயிற்சிகள், யோகாசனங்கள் போன்றவற்றைச் செய்கிறார்கள். எல்லாவற்றிலும் முக்கிய பங்கு வகிப்பது உணவில் மாற்றம். எடை இழப்புக்காக ஒரு உணவுத் திட்டத்தை வகுத்து, அதற்கேற்ப உணவுகளைப் பிரித்து சாப்பிடுகிறார்கள். நீங்களும் அப்படிப்பட்டவராக இருந்தால், உங்கள் உணவில் தயிரை நிச்சயம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
கால்சியம், புரோபயாடிக்குகள், புரோட்டீன் போன்ற பல ஊட்டச்சத்துக்களால் நிறைந்த தயிர் மிகக் குறைந்த கலோரிகளை கொண்டுள்ளது. இதை பல வழிகளில் உங்கள் எடை இழப்பு உணவில் சேர்க்கலாம். எப்படி சாப்பிட்டால் எளிதாக, விரைவாக எடை குறையலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
எடை குறைக்க தயிரை எப்படி சாப்பிட வேண்டும்?
1. பழங்களுடன் சாப்பிடுங்கள்
தயிரை இன்னும் சுவையாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் மாற்ற, நீங்கள் சாதாரண தயிரில் சில புதிய பழங்களைச் சேர்க்கலாம். ஆப்பிள், வாழைப்பழம், பெர்ரி போன்ற பழங்களை சிறிய துண்டுகளாக நறுக்கி தயிரில் போட்டு சாப்பிடுங்கள். இதில் உப்பு, சர்க்கரை போன்றவற்றை சேர்க்காமல் சாப்பிட்டால் நல்லது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஃபைபர், வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்களால் நிறைந்த இந்த பொருட்களின் கலவையை மதிய உணவில் சாப்பிட்டால் எடை குறைப்பது எளிதாகும்.