குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியின் நிலை! இந்த ஐந்து அறிகுறிகள் இருந்தால் ஆபத்து!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியின் நிலை! இந்த ஐந்து அறிகுறிகள் இருந்தால் ஆபத்து!

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியின் நிலை! இந்த ஐந்து அறிகுறிகள் இருந்தால் ஆபத்து!

Suguna Devi P HT Tamil
Published Oct 24, 2024 03:13 PM IST

குழந்தைகளுக்கு எந்த நோயும் எளிதில் வந்து விடும் ஆபத்து உள்ளது. ஏனெனில் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருப்பதே இதற்கு காரணமாகும்.

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியின் நிலை! இந்த ஐந்து அறிகுறிகள் இருந்தால் ஆபத்து!
குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியின் நிலை! இந்த ஐந்து அறிகுறிகள் இருந்தால் ஆபத்து!

குறிப்பாக பெற்றோர்களும் பராமரிப்பாளர்களும் அவர்களது  குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போது போது மிகவும் கவலைப்படுவார்கள். குழந்தைகளின் நோயெதிர்ப்பு மண்டலத்தை கவனிக்காமல் இருக்கும் பட்சத்தில் அடிக்கடி நோய்வாய்ப்படவோ அல்லது தொற்றுநோய்க்கு ஆளாகவோ வாய்ப்புள்ளது. இது அவர்களின் உடல் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும். குழந்தைகளில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதற்கான 5 அறிகுறிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. 

அடிக்கடி ஏற்படும் தொற்றுகள்

மீண்டும் மீண்டும் தொற்றுநோய்களால் குழந்தைகள் பாதிக்கப்பட்டால் அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது என்று அர்த்தமாகும். குறிப்பாக காது தொற்று, சைனஸ் தொற்று மற்றும் நிமோனியா போன்ற தொற்றுக்கள் அடிக்கடி ஏற்படலாம் . அடிக்கடி சளி மற்றும் காய்ச்சல் போன்ற நோய்த்தொற்றுகள், மீண்டும் வரும். சிகிச்சை அளித்தால் மட்டுமே சரியாகும். 

அடிக்கடி சளி இருப்பது

குறிப்பாக குழந்தைகளுக்கு ஒவ்வொரு மாதமும் சளி தொந்தரவு ஏற்படும். குளிர் அறிகுறிகள் அவற்றின் வழக்கமான காலத்திற்கு அப்பால் நீடிக்கும் ஜலதோஷத்தை சரி செய்வதில் சிரமம் உண்டாகும். 

நாள்பட்ட சோர்வு

குழந்தைகள் நாள் முழுவதும் தூக்கம் அல்லது மந்தமாக இருப்பது போன்று இருப்பார்கள்.  சாதாரணமாக ஒரு நாளின் செயல்பாடுகளில் குழந்தைகள் நழுவ முயற்சிக்கும் அளவிற்கு சோர்வு  உண்டாகும். மேலும் படிப்பில் கவனம் செலுத்த இயலாமை அல்லது கவனத்தைத் தக்கவைக்க முடியாமல் இருக்கும். 

 செரிமான பிரச்சினைகள்

தொடர்ச்சியாக பல நாட்களுக்கு மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு போன்றவை உண்டாகும்.  வயிற்று வலி அல்லது பிடிப்புகள் அடிக்கடி வரும்.  சில வகையான உணவுகள் சாப்பிடும் போது செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். 

 காயம் குணமாக நீண்ட காலம் 

வழக்கமான வெட்டுக்கள் அல்லது காயங்கள் மெதுவாக ஆறும். அறுவைசிகிச்சை காயங்கள் எளிதில் தொற்றும் . காயம் ஏற்பட்ட இடத்தில் தொற்றுநோயை எதிர்க்க கூடிய வலிமை இல்லாமல் போகும். 

குழந்தைகளின் ஆரோக்கியத்தை கண்காணிக்க, குறைந்த நோய் எதிர்ப்பு சக்தியின் இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக குழந்தை மருத்துவரைப் பார்க்க பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு மருத்துவர் அத்தகைய குறைந்த நோய் எதிர்ப்பு சக்திக்கான பிற சாத்தியமான காரணங்களைக் கண்டறிந்து, சரியான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தலாம்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.