Identifying Food Adultration: உணவில் இருக்கும் கலப்படங்களை கண்டறிய பின்பற்ற வேண்டிய எளிய டிப்ஸ் இதோ
கலப்பட உணவுகளை உட்கொள்வதனால் லேசானது முதல் கடுமையான உடல்நல பிரச்னைகள் ஏற்படலாம். உணவில் இருக்கும் கலப்படங்களை கண்டறிய பின்பற்ற வேண்டிய எளிய டிப்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ஒரு உணவுப் பொருளின் தரம் குறைவாக இருந்தால் அதில் எதாவது கலப்படம் செய்யப்பட்டு இருக்கலாம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தீங்கு விளைவிக்கும் பொருள்கள் உயர்தர மிக்க உணவு பொருள்களில், மலிவான மாற்றுகளால் சேர்க்கப்படுகின்றன.
இந்த கலப்படங்களை உட்கொள்ளும் போது பல்வேறு நோய் பாதிப்புகள் உண்டாக்கும். மசாலா பொருள்கள், பால் உள்பட மற்ற உணவு பொருள்களிலும் கலப்படம் சேர்க்கப்படுகிறது. குறிப்பாக பாலில் அதிக அளவில் தண்ணீர் சேர்க்கப்படுகிறது. அந்த வகையில் நாம் சாப்பிடும் உணவு பொருள்களில் சேர்க்கப்படும் கலப்படத்தை கண்டறிய பல்வேறு வழிகள் உள்ளன.
உணவு கலப்படம் என்றால் என்ன?
உணவுக் கலப்படம் என்பது, தரம் தாழ்ந்த பொருள்களைச் சேர்ப்பதன் மூலமாகவோ அல்லது உணவை உட்கொள்ளவும், அதை சுவைக்கும் முக்கிய கூறுகளாக இருப்பதையும் அகற்றுவதன் மூலம் தீங்கு விளைவிப்பது தான் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். இது உணவின் தரத்தை குறைக்கும் செயல்முறையைாக உள்ளது.