Egg Eating Tips: நிஜ முட்டை vs போலி முட்டை கண்டறிய எளிய டிப்ஸ்! யாரெல்லாம் முட்டை சாப்பிடலாம்?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Egg Eating Tips: நிஜ முட்டை Vs போலி முட்டை கண்டறிய எளிய டிப்ஸ்! யாரெல்லாம் முட்டை சாப்பிடலாம்?

Egg Eating Tips: நிஜ முட்டை vs போலி முட்டை கண்டறிய எளிய டிப்ஸ்! யாரெல்லாம் முட்டை சாப்பிடலாம்?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Apr 10, 2024 05:34 PM IST

அனைவருக்கும் பிடித்த உணவாக இருந்து வரும் முட்டையில் நிஜமானது, போலியானதை கண்டறிய சில வழிமுறைகளை பின்பற்றலாம். முட்டையை யாரெல்லாம், எப்படி சாப்பிட வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

போலியான முட்டையை கண்டறியும் வழிகள்
போலியான முட்டையை கண்டறியும் வழிகள்

நாம் சாப்பிடும் உணவில் ஒரு பகுதியை பூர்த்தி செய்வதில் முட்டைக்கு தனியொரு இடம் உண்டு. முட்டை சாப்பிடுவதால் நினைவாற்றல் மேம்பாடு அடைவது, மூளை மற்றும் தசை வளர்ச்சி அடைவது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது, பார்வை திறன் மேம்படுவது என பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.

உடலுக்கு தேவையான அனைத்து வைட்டமின்களும், குறிப்பாக வைட்டமின் ஏ, பி12, பி2, பி5 போன்றவையும், பல்வேறு வகையான தாதுக்கள், கனிமை சத்துக்களும் நிறைந்துள்ளன.

முட்டையில் இருக்கும் மஞ்சள் கரு வைட்டமின் டி சத்துக்களை கொண்டதாக உள்ளது. இது உடலுக்கு தேவையான கொழுப்பு சத்துக்களை கொடுக்கிறது. இதயநோய், பக்கவாத பாதிப்பு இருப்பவர்கள் முட்டை மஞ்சள் கருவை அதிகமாக சாப்பிடக்கூடாது. மாறாக முட்டையின் வெள்ளை கருவை இவர்கள் சாப்பிடலாம்.

முட்டையில் இருக்கும் புரதம் பசியை கட்டுப்படுத்துகிறது. இதனால் நொறுக்கு தீனிகள், மாவுசத்து பொருள்கள் அதிகம் சாப்பிடப்படுவது கட்டுப்படுத்தப்படுகிறது.

கோழி முட்டை

முட்டைகளில் கோழி முட்டை தான் அதிகமாக சாப்பிடக்கூடியதாக உள்ளது. கோழி முட்டை தவிர காடை, வாத்து , கவுதாரி போன்ற பறவைகளின் முட்டையும் பலர் சாப்பிடுவதுண்டு, ஆனால் கோழி முட்டையில் இருக்கும் சத்துக்களின் அளவு மற்ற முட்டைகளை ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது.

சராசரியாக ஒரு வருடத்துக்கு 150 முதல் 200 முட்டைகள் வரை ஒரு கோழியிடமிருந்து பெறப்படும். கோழியானது 21 வார வாயதாக இருக்கும் போது முட்டையிடும். எளிதில் உடையக்கூடிய தன்மை கொண்டவையாக முட்டைகள் இருக்கின்றன. எனவே முட்டைகளை வாங்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக முட்டை ஓட்டில் கீரல் அல்லது உடைந்த காணப்பட்டால் அதை வாங்கக்கூடாது. அந்த முட்டை சில மணி நேரங்களில் கெட்டுவிடும்.

நல்ல முட்டை - போலி முட்டை வித்தியாசம்

போலியான கோழி முட்டையின் ஓடு பார்ப்பதற்கு பளபளவென இருக்கும். அதை தொட்டு பார்த்தால் சிறிது சொரசொரப்பாக இருக்கும். நிஜமான கோழி முட்டையில் சிறிது இறைச்சி வாசம் இருக்கும். அதேபோல் போலி முட்டையை உடைத்தவுடன் மஞ்சள் கருவும், வெள்ளை கருவும் ஒன்றாக கலந்து விடும்.

முட்டைகளை பாதுகாக்கும் முறை

முட்டைகளை அதற்குரிய டப்பாவில் போட்டு வைப்பது தான் பாதுகாப்பானது. இதைவிட மண் பானையில் வைத்தால் மிகவும் சிறப்பானது. ஒரு வேளை குளிர்சாதன பெட்டியில் வைக்க நேரிட்டால் அதற்குரிய அறையில் வைக்க வேண்டும். இதன் மூலம் நிலையான வெப்பநிலையில் அதனை பராமரிக்கலாம்.

வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டால் அதன் தரம் கெட்டுப்போக வாய்ப்பு உள்ளது. அவ்வாறு பாதிப்புக்குள்ளான முட்டையை பயன்படுத்தினால் உடலில் சிறு உபாதைகள் ஏற்படலாம்.

குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் முட்டைகளை பச்சையாக குடிக்ககூடாது. அது பாக்டீரியா பாதிப்புகளை ஏற்படுத்தலாம். முட்டையை வேக வைத்து சாப்பிட்டால் அதன் சத்துக்களை முழுமையாக பெறலாம்.

பிராயலர் கோழி, நாட்டுக்கோழி முட்டை ஆகிய இரண்டுக்கும் பெரிதாக வித்தியாசம் கிடையாது. இவை இரண்டுக்கும் ஒரே மாதிரியான சத்துதான் என கூறப்படுகிறது.

குழந்தைகளுக்கு முட்டையை கொடுப்பதென்றால் நன்றாக அவித்து தர வேண்டும். இல்லாவிட்டால் அது ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.