தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  How To Do Pelvic Kegel Exercises To Control Urinary Problem And Constipation

Kegel Exercises: அடக்கா முடியாத சிறுநீர்.. படு வீக்காக இருக்கும் பெல்விக் ஃப்ளோர்.. தீர்வு என்ன?

Kalyani Pandiyan S HT Tamil
Mar 29, 2024 10:29 PM IST

பெண்களுக்கு கர்ப்பபை அறுவை சிகிச்சை நடைபெற்று இருக்குமானால், அவர்களுக்கும் இந்த பிரச்சினையானது வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆண்களைப் பொறுத்தவரை பிராஸ்டேட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் இந்த பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

அடக்க முடியாத சிறுநீர் - கட்டுப்படுத்துவது எப்படி?
அடக்க முடியாத சிறுநீர் - கட்டுப்படுத்துவது எப்படி? (Pexels)

ட்ரெண்டிங் செய்திகள்

இது குறித்து அவர் பேசும் போது, “ நமது உடலில் சிறுநீர் மற்றும் மலத்தை நினைத்த நேரத்தில் வெளியேற்றுவதற்கும், தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் அதை அடக்குவதற்கும் நமது கழிவு உறுப்புகள் இருக்கும் பகுதிகளில் ஒரு கண்ட்ரோல் இருக்கும். ஒரு சிலருக்கு இந்த கண்ட்ரோல் சரிவர இருப்பதில்லை.

இதன் காரணமாக அவர்களின் சிறுநீரானது அவர்களது ஆடைகளில் கசியும். இதற்கு அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய பெல்விக் ஃப்ளோரின் தசைகளின் பலவீனமே காரணமாக இருக்கின்றன. 

இதற்கு வயது ஒரு காரணமாக அமைகிறது. இரண்டாவதாக உடல் எடை அதிகமாக இருக்கும் பொழுதும், இந்த பிரச்சினை வருகிறது. கர்ப்ப காலத்தில் குழந்தை வயிற்றில் இருக்கும் பொழுதும் சரி, குழந்தை பெற்றெடுத்த பின்னரும் சரி, இந்த பிரச்சினை வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. 

பெண்களுக்கு கர்ப்பபை அறுவை சிகிச்சை நடைபெற்று இருக்குமானால், அவர்களுக்கும் இந்த பிரச்சினையானது வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆண்களைப் பொறுத்தவரை பிராஸ்டேட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில், இந்த பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.  

ஆகையால் இதனை சரி செய்ய இதற்கு மிக முக்கியமான காரணமாக இருக்கக்கூடிய அந்த தசைகளுக்கு நாம் பயிற்சி அளிக்க வேண்டும். அந்த பயிற்சிக்கு பெயர்தான் கீகள் பயிற்சி. இந்த பயிற்சியானது அந்த தசைகளை உறுதியாக்கும்.

அவை உறுதியாகும் போது, அந்த தசைகளுக்கு சரிவர அழுத்தம் கொடுக்கப்படும். இந்த அழுத்தம், சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதில் இருக்கக்கூடிய பிரச்சினையை நீக்கும். 

சிறுநீர் வந்தாலோ அல்லது மலம் வந்தாலோ அதை அடக்குவதற்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை உற்று நோக்குங்கள். அங்கு நீங்கள் ஒருவித அழுத்தத்தை தசைகளின் வாயிலாக உருவாக்கி அதை செய்கிறீர்கள். அந்த தசைகளைதான் நாம் உறுதியாக்க வேண்டும். 

இந்த பயிற்சியின் போது உங்களுடைய வயிற்றுப் பகுதி தசைகளோ, தொடை பகுதி தசைகளோ அல்லது உங்களுடைய பின்பகுதி தசைகளோ இறுக கூடாது. நீங்கள் சிறுநீர் கழிக்கும் பொழுது, எந்த தசைகளை பயன்படுத்தி சிறுநீர் வெளிவருவதை தடுப்பீர்களோ அந்த தசைகள் மட்டுமே இறுக வேண்டும். 

இந்த தசைகளை நீங்கள் முதலில் இறுக்கிப் பிடிக்க வேண்டும். சரியாக மூன்று நொடிகள் அதை அப்படியே நிறுத்த வேண்டும். அதன் பின்னர் அந்த தசைகளை நீங்கள் தளர்த்தலாம். அந்த தளர்த்தும் நேரமும் கிட்டத்தட்ட மூன்று நொடிகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். 

இதனை நீங்கள் ஒரு நாளைக்கு ஒருமுறை செய்தால் பத்தாது. காலை பத்து முறையும்,மதியம் பத்து முறையும், மாலை பத்து முறையும் செய்ய வேண்டும்; இதற்கான ரிசல்ட் என்பது உடனடியாக தெரியாது. குறைந்தபட்சம் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை இந்த பயிற்சியை நீங்கள் தொடர்ச்சியாக செய்யும் பொழுது, உங்களுக்கான ரிசல்ட் கிடைக்கும்” என்று பேசினார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

WhatsApp channel

டாபிக்ஸ்