தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  வெள்ளிப்பாத்திரங்கள், நகைகள் பளிச்சென மின்னிட வைக்கும் 5 எளிய வழிகள்

வெள்ளிப்பாத்திரங்கள், நகைகள் பளிச்சென மின்னிட வைக்கும் 5 எளிய வழிகள்

I Jayachandran HT Tamil
Mar 25, 2023 10:47 PM IST

வெள்ளிப்பாத்திரங்கள், நகைகளை பளிச்சென மின்னிட வைக்கும் 5 எளிய வழிகள் குறித்து இங்கு அறிந்து கொள்வோம்.

வெள்ளிப்பாத்திரங்கள், நகைகள் பளிச்சென மின்னிட வைக்கும் எளிய வழிகள்
வெள்ளிப்பாத்திரங்கள், நகைகள் பளிச்சென மின்னிட வைக்கும் எளிய வழிகள்

ட்ரெண்டிங் செய்திகள்

இதுதவிர பூஜை அறையில் பயன்படுத்தப்படும் வெள்ளிக் குத்துவிளக்குகள், வெள்ளிக் காமாட்சி விளக்குகள், தூபக்கால்கள், தீபாரதனை தட்டுகள் என்றும் வெள்ளியில் உள்ளன.

எவ்வளவுதான் தினமும் வெள்ளிப் பாத்திரங்களைக் கழுவிச் சுத்தப்படுத்தினாலும் அதன் சற்று பழுப்பு, மஞ்சள் அல்லது கருப்பு நிறத்தில் சில நாட்களில் மாறிவிடும். இது அதன் தோற்றத்தை மோசமாக்கிவிடும். எனவே வெள்ளிப்பாத்திரத்தை பளிச்சென வைக்கும் வழிமுறைகள் குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

1. விபூதி-

வெள்ளிப்பாத்திரங்களை சுத்தமான நைஸான விபூதியைக் கொண்டு விளக்கினால் பளிச்சென சுத்தமாகிவிடும். ஆனால் பெரும்பாலும் கடைகளில் கிடைக்கும் விபூதிகள் சொரசொரப்பாக இருப்பதால் பாத்திரங்களில் கீறல்கள் விழுந்து மங்கிவிடும்.

ஆனால் பழனி முருகன் கோயில் அருகே கிடைக்கும் சித்தனாதன் விபூதி மிகவும் நைஸாக இருக்கும். இந்த விபூதியை வாங்கி வெள்ளிப் பாத்திரங்களை விளக்கினால் பளிச்சென்று டால் அடிக்கும். கீறல்கள் எதுவும் விழாது.

2. ஆப்ப சோடா பேஸ்ட்-

உணவில் நாம் பயன்படுத்தும் சோடா உப்பான ஆப்ப சோடா என்ற பேக்கிங் சோடாவைப் பயன்படுத்தி வெள்ளிப் பாத்திரங்களை துலக்கினால் பளிச்சென பளபளக்கும். அதிலிருக்கும் கரைகள் சுத்தமாக போய்விடும். அதற்கு ஆப்ப சோடாவை சிட்டிகை அளவு கையில் எடுத்து வெள்ளிப்பாத்திரங்களின் மீது தேய்த்து துடைத்தால் அழுக்குகள் போகும். அப்படியும் இண்டு இடுக்குகளில் இருந்தால் பேக்கிங் சோடாவை சிறுது தண்ணீரில் கலந்து பேஸ்ட் போல ஆக்கித் தேய்த்தால் பாத்திரங்களின் அனைத்துப் பகுதிகளிலும் போய்ச்சேரும். ஒரு அரைமணிநேரம் அப்படியே உலரவிட்டுப் பின்னர் தண்ணீரில் கழுவினால் சுத்தமாக விளங்கும்.

3. டூத் பேஸ்ட்-

நாம் அன்றாடம் பல்துலக்கப் பயன்படுத்தும் டூத்பேஸ்ட்டினாலும் வெள்ளிப்பாத்திரங்களைப் பளபளவென கழுவி சுத்தம் செய்ய முடியும். கையில் சிறிது டூத்பேஸ்ட்டை எடுத்து வெள்ளிப்பாத்திரங்களின் மீது தேய்த்து தண்ணீர் விட்டுக் கழுவி துணியால் துடைத்தால் பளபளவென மின்னும். சில வேலைப்பாடுகள் நிறைந்த வெள்ளிப்பாத்திரங்கள் என்றால் கரைகள் அவ்வளவு எளிதாகப் போகாது. அப்படிப்பட்ட பாத்திரங்களில் டூத்பேஸ்ட்டை தேய்த்துவிட்டு ஒரு பழைய டூத் பிரஷ்ஷை வைத்து நன்றாகத் தேய்த்தால் கரைகள் எளிதாக நீங்கி விடும். கருமையும் போய்விடும். இந்தப் பேஸ்ட்களில் உப்பு இருக்க வேண்டுமா என்று கேட்டால் தேவையில்லை என்றுதான் சொல்வோம்.

4. பேக்கிங் சோடா கொதி-

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவைத்து அதில் தேவையான அளவு பேக்கிங் சோடாவைப் போட்டால் நுரைதட்டி வரும். அந்த நீரில் உங்களது வெள்ளிப் பாத்திரங்களைப் போட்டு கால் மணிநேரம் கொதிக்க விட்டால் மஞ்சள், பழுப்பு, கருப்பு நிறத்தில் மாறியிருந்த வெள்ளிப்பாத்திரங்கள் மீண்டும் பளபளக்கும் வண்ணம் மாறும். இந்த முறை மிகவும் எளிதானதும் சுத்தமாகக் கரைகளைப் போக்கும் முறையாகும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்றால் பேக்கிங் சோடா போட்டு கொதிக்கும் தண்ணீரில் உணவு பார்சல் செய்யப் பயன்படுத்தும் அலுமினிய ஃபாயில்களை சிறிய துண்டுகளாக கத்தரித்துப் போட வேண்டும். இது பேக்கிங் சோடாவுடன் வினைபுரிந்து வெள்ளியை மின்ன வைக்கும்.

5.பீதாம்பருப்பு பேஸ்ட் அல்லது ரூப்பேரி பேஸ்ட்-

இந்த பேஸ்ட் ரெடிமேடாக அமேசான் போன்ற ஆன்லைன் தளங்களில் கிடைக்கிறது. இது பீதாம்பருப்பில் இருந்து தயாரிக்கப்பட்ட பேஸ்ட் ஆகும். இந்தப் பேஸ்ட்டை வாங்கி வெள்ளிப்பாத்திரங்கள் மீது தடவி கையாலோ அல்லது மெல்லியத் துணியாலோ துடைத்தால் வெள்ளிப்பாத்திரங்கள் மீண்டும் பொலிவாகத் தோற்றம் பெறும்.

WhatsApp channel

டாபிக்ஸ்