தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  How To Be A Successful Leader : ‘மாபெரும் சபைதனில் நீ நடந்தால் மாலைகள் விழவேண்டும்’ தலைமைபண்பில் சிறப்பது எப்படி?

How to be a Successful Leader : ‘மாபெரும் சபைதனில் நீ நடந்தால் மாலைகள் விழவேண்டும்’ தலைமைபண்பில் சிறப்பது எப்படி?

Priyadarshini R HT Tamil
Jun 11, 2024 03:00 PM IST

How to be a Successful Leader : ‘மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்’ என்ற பாடலுக்கு ஏற்ப தலைமைபண்பில் சிறப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

How to be a Successful Leader : ‘மாபெரும் சபைதனில் நீ நடந்தால் மாலைகள் விழவேண்டும்’ தலைமைபண்பில் சிறப்பது எப்படி?     
How to be a Successful Leader : ‘மாபெரும் சபைதனில் நீ நடந்தால் மாலைகள் விழவேண்டும்’ தலைமைபண்பில் சிறப்பது எப்படி?    

ட்ரெண்டிங் செய்திகள்

பணியிடத்தில் நீங்கள் தலைமைப்பண்பில் வெற்றியுடையவராக இருக்கவேணடும் எனில் என்னசெய்ய வேண்டும்.

பணியிடத்தில் தலைமைப்பண்பு

தலைமைப்பண்பு கொண்ட வெற்றியாளர்கள், சில குறிப்பிட்ட பண்புகள் மற்றும் பழக்கங்களை பழகுவார்கள். அது பணியிடத்தில் அவர்களை தலைமைப்பண்பில் சிறந்து விளங்கவைக்கும். நீங்கள் வெற்றியுடன் தலைவராக வேண்டுமெனில் அதற்கு என்ன செய்யவேண்டும் என்று இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை பின்பற்றி வாழ்வில் நீங்களும் தலைவராகுங்கள்.

தெளிவான உரையாடல்

உங்கள் குழுவினருடன் எப்போதும் திறந்த மற்றும் தெளிவான உரையாடலை நிகழ்த்துங்கள். மேலும் உங்கள் குழுவினர் கூறும் விஷயங்களை நன்றாக கவனிக்க வேண்டும். அவர்களின் பிரச்னைகள் மற்றும் பரிந்துரைகளுக்கு செவி கொடுங்கள். வெற்றியுடைய தலைவர்கள், சிறந்த மற்றும் தெளிவாக உரையாடுபவர்களாக இருக்கிறார்கள்.

நேர்மறை எண்ணங்கள் மற்றும் முன்னேற்றச் சிந்தனை

வெற்றி பெற்ற தலைவர்கள், வாழ்க்கையில் எப்போது நேர்மறை எண்ணங்களை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் பிரச்னைகளில் இருந்து உழல்வதில்லை. மாறாக அவர்கள் தீர்வுகளை நோக்கி நகர்கிறார்கள். அவர்களுக்கு தங்கள் குழுவையும், நிறுவனத்தையும் எங்கு அழைத்துச் செல்லவேண்டும் என்பது நன்றாக தெரியும். அவர்கள் திட்டமிட்டு இலக்கை அடைவார்கள்.

முன்னேற்றம் மற்றும் அதிகாரம்

வெற்றி தலைவர்கள் தங்கள் குழுவினரை நம்புவார்கள். அவர்களுக்கான பொறுப்புகள் மற்றும் டாஸ்குகளை அவர்கள் குழுவினரின் திறனுக்கு ஏற்ப பகிர்ந்தளிப்பார்கள். அவர்கள் தங்கள் குழுவுக்கும் அதிகாரம் தருவார்கள். அவர்களே முடிவெடுக்கவும், முன்னெடுக்கவும் குழுவினரை அனுமதிப்பார்கள். இவர்கள் தங்கள் குழுவினர் அனைவருக்கும் உரிமை, பொறுப்பு அளிப்பார்கள். குழுவில் உள்ள அத்தனை பேருக்கும் தலைமைப்பண்பை ஏற்படுத்துவார்கள்.

நெகிழ்தன்மை மற்றும் ஏற்கும் திறன்

வெற்றித் தலைவர்கள், மாற்றங்களை ஏற்பவர்களாகவும், நெகிழ்திறன் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் தொடர்ந்து கற்பவர்களாகவும், தேவையானவற்றி திருத்திக்கொள்பவர்களாகவும் இருப்பார்கள். பணியிடத்துக்கு தேவையானவர்களாக இருப்பார்கள்.

அனுதாபம் கொண்டவர்கள்

வெற்றி தலைவர்கள், தங்கள் குழுவினரிடம் அனுதாபம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு அதிக அறவுணர்வு இருக்கும். இவர்கள் தங்கள் குழுவுக்கு ரோல் மாடல்களாக இருப்பார்கள்.

விரைந்து முடிவெடுக்கும் திறன்

சவாலான நேரங்களில் வெற்றித் தலைவர்கள், விரைந்து முடிவெடுப்பார்கள். சவாலான நேரங்களில், அவர்கள் தன்னம்பிக்கையுடனும், சிறப்பாகவும் முடிவெடுப்பார்கள். முடிவெடுக்கப்படாமல் ஒரு பிர்சனை பெரிதாவதை அவர்கள் அனுமதிக்கமாட்டார்கள். அவர்கள் பணியிடத்தில் ஏற்படும் ஆபத்துக்களை முன்னரே கணித்து வைத்திருப்பார்கள்.

மீண்டெழுதல்

தவறுகள் செய்வது மனித பண்புகளுள் ஒன்றுதான். ஆனால் அந்த தவறுகளை தொடராமல், அதிலே மூழ்கி வீழாமல் திருத்திக்கொண்டு வாழ்தலே அறிவு. தவறுகளில் இருந்து மீண்டெழும் திறன்பெற்றவர்களாக வெற்றித் தலைவர்கள் இருப்பார்கள். அவர்கள் தங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்பார்கள். பின்னடைவுகளில் இருந்து மீண்டும் வருவார்கள். அவர்களின் இலக்குகளை நோக்கி தொடர்ந்து பயணம் செய்பவர்களாக இருப்பார்கள்.

முயற்சிகளுக்கு பாராட்டு

வெற்றி தலைவர்கள், தங்கள் குழுவினரின் வெற்றிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கிறார்கள். பாராட்டுக்களை தெரிவிக்கிறார்கள். அவர்களின் சாதனைகள் மற்றும் முயற்சிகளை வரவேற்கிறார்கள். வாழ்த்துகிறார்கள். அவர்கள் குழுவினருடன் வலுவான உறவை ஏற்படுத்துகிறார்கள். குழுவினரிடையே ஒற்றுமையை வளர்த்தெடுக்கிறார்கள்.

நேர மேலாண்மை

வெற்றி தலைவர்கள், டாஸ்குகளில் எதற்கு முன்னுரிமை தரவேண்டும் என்ற ஞானம் பெற்றவர்களாக உள்ளார்கள். அவர்களின் நேரத்தை முறையாக பயன்படுத்துகிறார்கள். தலைமைப்பண்பில் அவர்கள் சிறந்து விளங்குகிறார்கள். தங்கள் பணியிலும் சிறக்கிறார்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்