Stomach Cancer: வயிறு புற்றுநோய் எப்படி ஏற்படும்.. எந்தெந்த உணவுகளை சாப்பிட்டால் புற்றுநோய் அபாயம் அதிகரிக்கும் பாருங்க!
Stomach Cancer: அல்சர் மற்றும் இரைப்பை பிரச்சனைகளுக்கு உடனடியாக சிகிச்சை பெறவும். இவை இரண்டும் அதிகரித்தால் வயிற்றுப் புற்றுநோயை உண்டாக்கும். மேலும், சில வகையான உணவுகள் வயிற்றுக்கு தீங்கு விளைவிக்கும். இது போன்ற உணவுகளை அதிகமாக உண்பது வயிற்றில் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

உலக அளவில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நம் நாட்டிலும் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் ஆண்டு தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. புற்றுநோயில் மிகவும் பொதுவான வகை வயிற்று புற்றுநோய். வயிற்றுப் புற்றுநோய்க்கு பல காரணங்கள் உள்ளன.
உங்கள் வயிற்றில் உள்ள செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளரும் போது, அது புற்றுநோய் கட்டியாக மாறுகிறது. இரைப்பை மற்றும் அல்சர் பிரச்சனைகளும் சில நேரங்களில் புற்றுநோயை உண்டாக்கும். 95% வயிற்று புற்றுநோய் செல்கள் வயிற்றின் உள் புறத்தில் வளர ஆரம்பிக்கின்றன. உடனடியாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இது தீவிர புற்றுநோயாக மாறி கல்லீரல் மற்றும் கணைய உறுப்புகளை பாதிக்கலாம். அதனால்தான் வயிற்றுப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
வயிற்றுப் புற்றுநோய்க்கான காரணங்கள்
அல்சர் மற்றும் இரைப்பை பிரச்சனைகளுக்கு உடனடியாக சிகிச்சை பெறவும். இவை இரண்டும் அதிகரித்தால் வயிற்றுப் புற்றுநோயை உண்டாக்கும். மேலும், சில வகையான உணவுகள் வயிற்றுக்கு தீங்கு விளைவிக்கும். இது போன்ற உணவுகளை அதிகமாக உண்பது வயிற்றில் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். குறிப்பாக அதிக உப்பு சேர்த்து சேமிக்கப்படும் மீன், இறைச்சி மற்றும் ஊறுகாயை அதிகம் சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் ஏற்படும். வறுக்கப்பட்ட அல்லது சுடப்பட்ட இறைச்சிகள் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பது உங்கள் வயிற்று புற்றுநோயின் வாய்ப்புகளை அதிகரிக்கும்.