Exclusive : மழைக்காலத்தில் வைரஸ் காய்ச்சல் எப்படி வருகிறது? யூடிஐக்கும் காரணம் – மருத்துவர் விளக்கம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Exclusive : மழைக்காலத்தில் வைரஸ் காய்ச்சல் எப்படி வருகிறது? யூடிஐக்கும் காரணம் – மருத்துவர் விளக்கம்!

Exclusive : மழைக்காலத்தில் வைரஸ் காய்ச்சல் எப்படி வருகிறது? யூடிஐக்கும் காரணம் – மருத்துவர் விளக்கம்!

Priyadarshini R HT Tamil
Nov 16, 2024 06:00 AM IST

மழைக்காலத்தில் ஏற்படும் அனைத்து வகை காய்ச்சல்களுக்கும் காரணம் என்னவென்று இந்த தொடரில் தெரிந்துகொண்டு வருகிறோம். வைரஸ் காய்ச்சல் எப்படி வருகிறது? யூடிஐக்கும் காரணம் என்னவென்று மருத்துவர் காமராஜ் கூறுவதைக் கேளுங்கள்.

மழைக்காலத்தில் வைரஸ் காய்ச்சல் எப்படி வருகிறது? யூடிஐக்கும் காரணம் – மருத்துவர் விளக்கம்!
மழைக்காலத்தில் வைரஸ் காய்ச்சல் எப்படி வருகிறது? யூடிஐக்கும் காரணம் – மருத்துவர் விளக்கம்!

குறிப்பாக குழந்தைகள், உடல் பலகீனமான நிலையில் இருப்பவர்கள், நாள்பட்ட நோய்களுக்கு மருந்தை உட்கொண்டு வாழ்பவர்கள் என அனைவரும் இந்த காலகட்டத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்

காய்ச்சல் என்றால், உடனே மருந்து கடைகளுக்கு சென்று காய்ச்சலுக்கு ஒரு செட் மாத்திரை, சளி, இருமலுக்கு ஒரு செட் மாத்திரை கொடுங்க என்று கேட்டு வாங்கி பயன் படுத்தக்கூடாது. எதனால் திடீர் காய்ச்சல் வந்தது என்றும், அது என்ன வகை காய்ச்சல், எதனால் சளி, இருமல் தொற்றுகள் ஏற்பட்டது என்றும் ஆராய்ந்து அறியவேண்டும்.

இதைவிடுத்து, சுயமாக மருந்தை வாங்கி ஓரிரு நாட்கள் சாப்பிட்டு பின் காய்ச்சல் குறையாதபோது, நோய் தீவிர நிலையில் மருத்துவமனைக்கு செல்லும்போதுதான் நோயை கணிக்கமுடியாமல், தீர்க்க முடியாமல் உயிரிழப்பு ஏற்படக்கூடிய நிலை உருவாகிறது.

எனவே இதைத் தவிர்த்து, விரைவான மருத்துவ உதவி, விரைவான மருத்துவ பரிசோதனை மூலம்தான் நோயைத் தீர்க்க உதவும் என்பதை நினைவில்கொண்டு மாறுபட்ட குறிகுணங்கள், அறிகுறிகள் தோன்றிய உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்று மருத்துவர் காமராஜ் வலியுறுத்துகிறார்.

காய்ச்சல்களுக்கு சித்த மருத்துவத்தில் மருந்து உள்ளதா? உடனே சரியாகுமா?

சித்த மருத்துவத்தில் காய்ச்சலுக்கு மருந்து இருக்கா? குணப்படுத்த முடியுமா என்ற சந்தேகம் அனைவருக்கும் உள்ளது. சித்த மருத்துவத்தில் காய்ச்சலுக்கு மருந்து உள்ளது. காய்ச்சல் முதல் 4,448 நோய்களுக்கும், சித்த மருத்துவத்தில் சிகிச்சைகள் உள்ளன.

சித்த மருந்துகள் தாமதமாகத்தான் வேலை செய்யும் என எண்ணாதீர்கள். உடனடி தீர்வு தரும் சித்த மருந்துகளும் உள்ளன. சித்த மருத்துவ நூல்களில் 64 வகையான காய்ச்சல் இருப்பது விளக்கிக் கூறப்பட்டுள்ளது.

மழைக் காலங்களில் வரும் சுரங்களை பற்றியும் அதற்கான சித்த மருத்துவ தீர்வுகள் மற்றும் தற்காப்பு முறைகளைப் பற்றியும் இந்த தொடரில் தெரிந்துகொள்ளலாம்.

மழைக்காலத்தில் காய்ச்சல் வரக் காரணம் என்ன?

சுகாதாரமற்ற குடிநீர் குடிப்பது மற்றும் சுகாதாரமற்ற உணவுகளை உண்பது

காற்றின் மூலம் பரவும் வைரஸ் நுண்கிருமிகளின் தொற்று

மழைக் காலங்களில் அதிக அளவில் உற்பத்தியாகும் கொசுக்கள் இவைகள் காய்ச்சல் ஏற்பட காரணங்களாகின்றன

பிற வைரஸ் தொற்றுக்கள் மூலமாகவும் பரவலாம்

மழைக்காலங்களில் ஏற்படும் காய்ச்சலில் மிக முக்கியமானது மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா போன்ற காய்ச்சல்களாகும். இவை வருவது குறித்து பார்த்தோம். காலராவும், டைஃபாய்ட் காய்ச்சலும் எப்படி வருகின்றன என்று ஆராய்ந்தோம். இனி சிறுநீர் தொற்று காய்ச்சல், மஞ்சள் காமாலை வைரஸ் காய்ச்சல் ஏற்படும் விதம் குறித்து பார்க்கலாம்.

மஞ்சள் காமாலை ஏற்படுவது எப்படி?

மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் ஹெப்படைடிஸ் வகை கிருமி, சுத்தமில்லாத உணவுகள் மற்றும் தண்ணீரின் மூலம் வருகிறது.

அறிகுறிகள்

உடற்சோர்வு,

பசியின்மை

மஞ்சள் நிற சிறுநீர்,

வாந்தி மற்றும்

ஈரல் செயல் பிறழ்ச்சி

கண்கள் மஞ்சளாக இருத்தல் ஆகியனவாகும்.

சிறுநீர் தொற்றினால் ஏற்படும் காய்ச்சல்

சுத்தமில்லாத தண்ணீர் மூலமாக தொற்று ஏற்பட்டு காய்ச்சல் ஏற்படும். அதனால்தான் எல்லா காலங்களிலும் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து ஆறிய பின்னர் இளஞ்சூடாக குடிக்க அறிவுறுத்தப்படுகிறது.

வைரஸ் காய்ச்சல் வரும் வழி

பல்வேறு வகையான வைரஸ் நுண் கிருமிகளால் ஏற்படும்.

அறிகுறிகள்

மிதமானது முதல் அதிகமான காய்ச்சல், சளியும், இருமலும் சேர்ந்து விட்டுவிட்டு ஏற்படும்.

எனவே இந்த குறிகுணங்கள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பலன்பெறவேண்டும் என்று சித்த மருத்துவர் காமராஜ் அறிவுறுத்துகிறார்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.