உங்கள் உடலில் கால்சியச் சத்துக்களை அதிகரிக்க பாதாமை நீங்கள் எப்படி பயன்படுத்தலாம்?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  உங்கள் உடலில் கால்சியச் சத்துக்களை அதிகரிக்க பாதாமை நீங்கள் எப்படி பயன்படுத்தலாம்?

உங்கள் உடலில் கால்சியச் சத்துக்களை அதிகரிக்க பாதாமை நீங்கள் எப்படி பயன்படுத்தலாம்?

Priyadarshini R HT Tamil
Jan 05, 2025 12:16 PM IST

பாதாமை எப்படி சாப்பிட்டால் அது உங்கள் உடலில் கால்சியச் சத்துக்களை அதிகரிக்கும்?

உங்கள் உடலில் கால்சியச் சத்துக்களை அதிகரிக்க பாதாமை நீங்கள் எப்படி பயன்படுத்தலாம்?
உங்கள் உடலில் கால்சியச் சத்துக்களை அதிகரிக்க பாதாமை நீங்கள் எப்படி பயன்படுத்தலாம்?

ஒரு கைப்பிடியளவு பாதாம்

தினமும் ஒருவர் 6 முதல் 20 பாதாம் வரை எடுத்துக்கொள்ளவேண்டும். உங்கள் கைப்பிடியில் ஒரு கைப்பிடியளவு எடுத்துக்கொண்டால் அது உங்கள் உடலுக்கு நல்லது. இதை நீங்கள் பாலுடன் அல்லது இனிப்புக்களுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம். இதை நீங்கள் சுவை நிறைந்ததாக்கும் சில வழிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் உடலில் இயற்கையாக கால்சியத்தை அதிகரிக்கும் வழிகள் என்னவென்று பாருங்கள்.

பாதாம் பால்

உங்களுக்கு தாவர அடிப்படையிலான கால்சியம் கிடைக்கவேண்டுமெனில் நீங்கள் வீட்டில் தயாரிக்கப்பட்ட பாதாம் பாலை வாங்கலாம். இதில் நீங்கள் காபி, டீ, ஓட்ஸ் கலந்து சாப்பிடலாம். இது ஒரு புத்துணர்வு தரும் பானமாகும்.

பாதாம் பட்டர்

உங்கள் பிரட் அல்லது டோஸ்ட்களில் நீங்கள் பாதாம் பட்டரை சேர்த்து சாப்பிடலாம். ஸ்மூத்திகளில் சேர்த்து சாப்பிட்டால் அவை இன்னும் கிரீமியாக இருக்கும். இதில் கால்சியச் சத்துக்களும் அதிகம். இது உங்கள் உடலுக்கு ஊட்டமளிக்கும். பாதாமை சேர்த்துக்கொள்ள சுவையான வழிகளுள் ஒன்றாகும்.

பாதாம் கஞ்சி மற்றும் ஸ்மூத்தி

பொடியாக நுணுக்கிய பாதாமை நீங்கள் காலையில் சாப்பிடும் சத்து மாவு கஞ்சிகளில் சேர்த்து சாப்பிடலாம் அல்லது பாதாமை பொடித்து ஸ்மூத்திகளின் மேல் தூவி சாப்பிடலாம். இது உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைக் கொடுப்பதுடன், உங்களுக்கு கால்சியச் சத்துக்கள் அதிகம் நிறைந்த காலை உணவாகவும் மாறும்.

ஊறவைத்த பாதாம் அல்லது ஊறவைக்காத பாதாம்

தினமும் நீங்கள் ஒரு கைப்பிடியளவு பாதாமை ஊறவைத்து அல்லது ஊறவைக்காமல் என இரண்டு வழிகளிலும் எடுத்துக்கொள்ளலாம். இது உங்கள் உடலுக்கு தேவையான கால்சியச் சத்துக்களை இயற்கையாகக் கொடுக்கும். இதை சாப்பிடுவதும் எளிது, மொறுமொறுப்பானது. இதயத்துக்கு ஆரோக்கியத்தைக் கொடுப்பது.

சூப்பர் ஸ்னாக்ஸ்

ஒரு நாளில் நீங்கள் சாப்பிடும் 20 பாதாம்கள் உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது. இது உங்கள் இதய ஆரோக்கியத்துக்கு ஏற்றது. இது மொறுமொறுப்பானது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.