தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Household Works : சம்பளமற்ற வீட்டு வேலை - ஆண், பெண்ணுக்கு இடையே எத்தனை பெரிய வேறுபாடு! அதன் பண மதிப்பு இவ்வளவா? - ஆய்வு

Household Works : சம்பளமற்ற வீட்டு வேலை - ஆண், பெண்ணுக்கு இடையே எத்தனை பெரிய வேறுபாடு! அதன் பண மதிப்பு இவ்வளவா? - ஆய்வு

Priyadarshini R HT Tamil
Jun 15, 2024 06:45 AM IST

Household Works : சம்பளமற்ற வீட்டு வேலையில் ஆண்களைவிட 3 மடங்கு அதிகம் பெண்கள் ஈடுபடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Household Works : சம்பளமற்ற வீட்டு வேலையில் ஆண்களைவிட 3 மடங்கு அதிகம் ஈடுபடும் பெண்கள்! – ஆய்வு தகவல் என்ன?
Household Works : சம்பளமற்ற வீட்டு வேலையில் ஆண்களைவிட 3 மடங்கு அதிகம் ஈடுபடும் பெண்கள்! – ஆய்வு தகவல் என்ன?

ஒரு பெண் படித்தால் அந்த குடும்பமே படிப்பறிவு பெற்றதுபோல் என்று நாம் பெண்களை படிக்கவைத்து, வேலைக்கு அனுப்புகிறோம் என்று மார்தட்டிக்கொண்டாலும், வீட்டு வேலைகளில் ஈடுபடுத்துவதில்தான் பெண்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்று ஆய்வுகள் கூறுகிறது.

வீட்டு வேலைகள் 

உலக அளவில் சம்பளமற்ற வீட்டு வேலைகள் மற்றும் குழந்தைகள் கவனிப்பு போன்றவற்றில் பெண்கள் ஆண்களைக் காட்டிலும், 3 மடங்கு அதிக நேரம் செலவிடுவது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

"Journal of Family and Economic Issues" ஆய்விதழில் வெளிவந்த கட்டுரையில், இந்தியாவில் சம்பளமற்ற வீட்டுவேலைகளில், பெண்கள் ஆண்களைக் காட்டிலும் 10 மடங்கு அதிக நேரம் செலவிடுவது ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

International Institute for Population Studies and Tata Institute of Social Sciences-Mumbai இணைந்து செய்த ஆய்வில், படித்த பெண்கள் சம்பளமற்ற வீட்டு வேலைகள் செய்வது கணிசமாக குறைவாக உள்ளதும் தெரிய வந்துள்ளது. எனவே பெண்களுக்கு கல்வியறிவு மற்றும் வேலைவாய்ப்பு மிகவும் முக்கியமானது.

ட்ரெண்டிங் செய்திகள்

மணமான பெண்கள் vs மணமாத பெண்கள்

திருமணமான பெண்கள், திருமணமாகாத பெண்களைக் காட்டிலும், 2 மடங்கு சம்பளமற்ற வீட்டுவேலைகளை செய்ய வேண்டிய சூழல் இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்து, முஸ்லீம், சீக்கிய மேல்சாதி பெண்கள் சம்பளமற்ற வீட்டுவேலை செய்வது அதிக அளவில் உள்ளது.

படிப்பறிவில்லாத நகர்புறப் பெண்கள், படிப்பறிவில்லாத கிராமப்புற பெண்களைக் காட்டிலும், 86.7 சதவீத நேரம் கூடுதலாக சம்பளமற்ற வீட்டுவேலைகள் செய்வதில் ஈடுபட வேண்டிய சூழல் உள்ளது.

பள்ளி பயிலும் குழந்தைகள் வீட்டில் பெண்கள் சம்பளமற்ற வீட்டு வேலை செய்வது அதிகமாக உள்ளது.

தனிக்குடும்பம் vs கூட்டுக்குடும்பம்

தனிக்குடித்தனம் மேற்கொள்ளும் வீடுகளில் வாழும் பெண்கள், கூட்டு குடித்தனம் (பல தலைமுறைகள் இணைந்து வாழும்) நடத்தும் வீடுகளில் உள்ள பெண்களை விட அதிக சம்பளமற்ற வீட்டு வேலைகளில் ஈடுபடும் சூழல் உள்ளது.

6 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்கள், சம்பளமற்ற வீட்டு வேலைகளில் 301 நிமிடங்களும், அதே வேலையில் ஆண்கள் 98 நிமிடங்களும் ஈடுபடுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. ஆணாதிக்க சமூகமே இதற்கு முக்கிய காரணம்.

சொந்த வீட்டில் உள்ள பெற்றோர்கள், புகுந்த வீட்டில் உள்ளவர்களைக்காட்டிலும், பெண்களின் சம்பளமற்ற வீட்டு வேலைகளில் அதிகம் உதவுகின்றனர் என்பது National Sample Survey office in January- December 2019 தரவுகளின்படி தெரியவந்துள்ளது.

பெற்றோர்களின், புகுந்த வீட்டில் உள்ளவர்களின் கல்வியறிவும் பெண்கள் சம்பளமற்ற வீட்டு வேலை செய்வதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

பெண்கள் அதிகார நிலையில் இருக்கும் வீடுகளில் சம்பளமற்ற வீட்டு வேலைகளை பெண்கள் செய்வது குறைவாகவும், ஆணாதிக்க வீடுகளில் பெண்கள் சம்பளமற்ற வீட்டு வேலைகளை செய்வது அதிகமாகவும் உள்ளது.

பணமதிப்பு

பெண்களின் சம்பளமற்ற வேலைகளின் பண மதிப்பை, சந்தை மதிப்பீடுகளில் ஒப்பிட்டால், உலக அளவில் 10-60 சதவீதம் GDP அளவிலான பண மதிப்பை அது கொண்டுள்ளது.

தமிழகம் மற்றும் இந்தியாவில் சம்பளமற்ற வீட்டு வேலைகளை செய்துவரும் பெண்களின் மதிப்பை அங்கீகரிக்கும் சமூகத்தில் தான், நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோமா என்பது எண்ணிப்பார்க்க வேண்டிய ஒன்று.

எப்போது பெண்களின் மதிப்பை, வேலைப் பிரிவினையில் அவர்களின் பங்களிப்பை நமது சமூகம் உணரும் நிலை வரும்?

நன்றி – மருத்துவர். புகழேந்தி.