பொங்கல் வரப்போகுது! வீட்டை சுத்தப் படுத்தியாச்சா? இதோ ஈசியா செய்ய சில டிப்ஸ்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  பொங்கல் வரப்போகுது! வீட்டை சுத்தப் படுத்தியாச்சா? இதோ ஈசியா செய்ய சில டிப்ஸ்கள்!

பொங்கல் வரப்போகுது! வீட்டை சுத்தப் படுத்தியாச்சா? இதோ ஈசியா செய்ய சில டிப்ஸ்கள்!

Suguna Devi P HT Tamil
Jan 05, 2025 12:22 PM IST

விழாக்கள் என்றாலே மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொண்டு வரும் ஒரு சிறந்த தருணமாகும். விழாக்கள் வந்தாலே உறவினர்கள் வருவது அவர்களுடன் நேரத்தை செலவிடுவது, விழாவை கொண்டாடுவது என வெகு விமரிசையாக நடைபெறும்.

பொங்கல் வரப்போகுது! வீட்டை சுத்தப் படுத்தியாச்சா? இதோ ஈசியா செய்ய சில டிப்ஸ்கள்!
பொங்கல் வரப்போகுது! வீட்டை சுத்தப் படுத்தியாச்சா? இதோ ஈசியா செய்ய சில டிப்ஸ்கள்! (Pixabay)

பழையதை தூக்கி எறியுங்கள் 

உங்களுக்கு முந்தைய நாள் போகி பண்டிகை ஆகும். போகி பண்டிகை என்பதே பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பழமொழியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். வீட்டில் உள்ள பழைய பொருட்களையும் மனதில் உள்ள பழைய எண்ணங்களையும் வெளியே துரத்திவிட்டு புதிய எண்ணங்களை ஏற்றுக்கொள்வதும் புதிய பொருட்களை வைப்பதும் இதன் குறிக்கோளாகும். எனவே போகி பண்டிகைக்கு முந்தைய நாட்களிலேயே வீட்டில் உள்ள பழைய பொருட்களை கண்டறிந்து அதனை மொத்தமாக ஒரு பகுதியில் போட்டு வைக்க வேண்டும்.  போகி பண்டிகையின் போது எரிக்க கூடிய பொருட்களை மட்டுமே எரிக்க வேண்டும் பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரிப்பதை தவிர்க்க வேண்டும் அவை அனைத்தையும் அப்புறப்படுத்துவதே சிறப்பான ஒன்றாகும். இதனை கட்டாயம் செய்வதை உறுதி படுத்துங்கள். 

தேவையானவற்றை ஒழுங்கு படுத்துங்கள் 

வீட்டிற்கு விருந்தினர்கள் வருவதால் அவர்களுக்கு தேவையான பொருட்கள் இருந்தால் அதனை எடுத்து ஒழுங்குப்படுத்தி வைக்கவும் எந்த பொருளும் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அப்போதுதான் விருந்தினர்களுக்கு தேவையான அனைத்தையும் வழங்க முடியும். விருந்தோம்பல் என்பது தமிழர்களின் பாரம்பரிய குணமாகும். எனவே வீட்டிற்கு வரும் விருந்தினர்களில் மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதும் வீட்டின் தூய்மையின் ஒரு பகுதியில் அடங்கும். 

கழிவறை சுத்தம் அவசியம் 

கழிவறை சுத்தம் என்பது விழா காலங்கள் மட்டுமல்லாமல் மற்ற நாட்களிலும் மிகவும் அவசியமான ஒன்றாகும். எனவே கழிவறையை மிகவும் சுத்தமான ஒன்றாக வைத்திருக்க வேண்டும். ஏனெனில் விழா காலங்களில் அதிகம் பெயரால் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான அறையாக கழிவறை இருந்து வருகிறது. கழிவறை சுத்தமாக இல்லாத பட்சத்தில் பல நோய்கள் பரவவும் வாய்ப்பு உள்ளது எனவே கழிவறை சுத்தத்தை முதன்மையான ஒன்றாக கருதுங்கள். 

சமையலறை சுத்தம் 

சமையலறையில் அனைத்து மசாலா பொருட்களையும் தனியாகவும் பருப்புகளையும் ஸ்டாக் வைத்து கொள்ளவும். தேவைப்படும் அளவிற்கு மட்டுமல்லாமல் சற்று அதிகமான அளவில் பொருட்களை சேமித்து வைத்துக் கொள்ளவும். அடுப்பு முதல் அனைத்து இடங்களையும் சுத்தமாக துடைத்து அடுக்கி வைத்துக் கொள்ளவும். இவ்வாறு இருக்கும் பொழுது வேகமாக சமையல் செய்யவும் அதிகமான பேருக்கு சமைக்கவும் தோதாக இருக்கும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.