Hotel Style Kara Kulambu : ஓட்டல் ஸ்டைலில் காரக்குழம்பு வீட்டிலே செய்யலாம்! இதோ ரெசிபி!
Hotel Style Kara Kulambu : ஓட்டலில் காரக்குழம்பு சாப்பிடும்போது இதை வீட்டில் செய்ய முடியுமா என்று ஏங்கியிருக்கிறீர்களா? மீண்டும், மீண்டும் சாப்பிட தூண்டும் ஓட்டல் ஸ்டைல் காரக்குழம்பு செய்ய இதோ ரெசிபி.
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் – 12
தக்காளி – 1
பூண்டு – 1 பல்
கறிவேப்பிலை – 1 கொத்து
தேங்காய் – 4 டேபிள் ஸ்பூன்
புளி – எலுமிச்சை அளவு ஊறவைத்து கரைத்து வடிகட்டியது.
குழம்பு வைக்க தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 10
பூண்டு – 20
கறிவேப்பிலை – 1 கொத்து
மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
கொத்தமல்லித்தூள் – ஒன்றரை டீஸ்பூன்
சாம்பார் தூள் – ஒன்றரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெல்லம் – சிறிதளவு (தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம்)
தாளிக்க
கடுகு – அரை டீஸ்பூன்
வெந்தயம் – கால் டீஸ்பூன்
சுண்டக்காய் வத்தல் – 2 ஸ்பூன் (எண்ணெயில் வறுத்தது)
செய்முறை
முதலில் வெங்காயம், பூண்டு, தேங்காய், தக்காளி, கறிவேப்பிலை ஒரு கொத்து சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் கடுகு, வெந்தயம் தாளித்து, வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கி, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, கொத்தமல்லித்தூள் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் அளவு வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அரைத்து வைத்த விழுதை சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும்.
கடைசியாக புளியை சேர்த்து குழம்பு கெட்டியாகி, எண்ணெய் பிரிந்து வரவேண்டும்.
அப்போது சிறிது வெல்லம் சேர்த்த இறக்க வேண்டும்.
ஓட்டல் ஸ்டைலில் காரக்குழம்பு வீட்டிலே செய்யலாம். இதை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடவேண்டும். பொதுவாக காரக்குழம்பு செரிமானத்துக்கு உதவுகிறது. அதனால்தான் முழு மீல்சில் தவறாமல் இடம்பெறுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்