Hormone Balance : ஹார்மோன்களை சமநிலையில் வைக்க உதவும் எளிய பழக்கவழக்கங்கள் இவைதான்!-hormone balance these are the simple habits that help balance hormones - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Hormone Balance : ஹார்மோன்களை சமநிலையில் வைக்க உதவும் எளிய பழக்கவழக்கங்கள் இவைதான்!

Hormone Balance : ஹார்மோன்களை சமநிலையில் வைக்க உதவும் எளிய பழக்கவழக்கங்கள் இவைதான்!

Priyadarshini R HT Tamil
Feb 17, 2024 04:21 PM IST

Hormone Balance : ஹார்மோன்களை சமநிலையில் வைக்க உதவும் எளிய பழக்கவழக்கங்கள் இவைதான்!

Hormone Balance : ஹார்மோன்களை சமநிலையில் வைக்க உதவும் எளிய பழக்கவழக்கங்கள் இவைதான்!
Hormone Balance : ஹார்மோன்களை சமநிலையில் வைக்க உதவும் எளிய பழக்கவழக்கங்கள் இவைதான்!

எனவே உடலில் ஹார்மோன்கள் ஆரோக்கியத்தை பேணுவது மிகவும் அவசியம். அதற்கு நீங்கள் சில எளிய வழிகளை கடைபிடித்தாலே போதும். அது உங்கள் உடலில் உற்பத்தியாகும் ஹார்மோன்களின் ஆரோக்கியத்துக்கு உதவும். 

அவற்றை முறையாக கடைபிடித்து உங்கள் ஒட்டுமொத்த உடல ஆரோக்கியத்துக்கு வழிவகுத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் உடலில் ஹார்மோன்கள் முறையாக பராமரிக்கப்படவில்லையென்றால் அது உடல் நலனை பாதிக்கும். 

காலை நேர சூரிய குளியல்

உங்கள் உடலில் ஹார்மோன்களை பராமரிக்க காலையில் அரை மணிநேரம் இளஞ்சூரிய ஒளி உங்கள் உடலில் படுமாறு பார்த்தக்கொள்ளுங்கள். இது உங்கள் உடலில் செரோட்டினின் உற்பத்தியை அதிகரித்து, உங்கள் மனநிலையை மகிழ்ச்சியாக வைப்பதுடன், உங்கள் உடலுக்கு வைட்டமின் டி சத்து கிடைக்கவும் வழி செய்கிறது.

அதிக புரதச்சத்துக்கள் நிறைந்த காலை உணவு

முட்டைகள் அல்லது ஓட்ஸ்கள் என புரதச்சத்துக்கள் அதிகம் நிறைந்த காலை உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். இது உடலில் ரத்தச்சர்க்கரை அளவை சரியாக பராமரிக்க உதவுகிறது. மேலும் பசியை நாள் முழுவதும் கட்டுப்படுத்துகிறது. தசை வளர்ச்சி மற்றும் சரிசெய்ய உதவுகிறது.

காலை உணவுக்குப்பின் கெஃபைன்

காலையில் உணவு உண்டபின் காஃபி அல்லது டீ பருகவேண்டும். அப்போதுதான் அது கார்டிசால் அளவில் பாதிப்பை குறைத்து, ரத்த சர்க்கரை முறையாக பராமரிக்க உதவும். ஹார்மோன் அளவுகளை தொந்தரவு செய்யாமல், தேவையான ஆற்றலை உறுதி செய்கிறது.

சத்துக்கள் நிறைந்த தண்ணீர்

சத்துக்கள் நிறைந்த நீரை பருகவேண்டும். இளநீர் போன்றவற்றை பருகி, உடலின் ஆற்றலை பெருக்கிக்கொள்வதுடன், உடலின் ஹார்மோன் பராமரிப்பையும் உறுதிசெய்யுங்கள். இவை ஒட்டுமொத்த செல்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.

நடைபயிற்சி

சாப்பிட்ட உடன் 10 நிமிடம் நடக்க வேண்டும். அது இன்சுலின் உணர்திறனை அதிகரித்து, மனஅழுத்தத்தை குறைக்கிறது. செரிமானத்தை அதிகரிக்கிறது. ஹார்மோன் சமம் மற்றும் உடலில் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சுவதை தடுக்கிறது.

புளிக்க வைக்கப்பட்ட உணவுகள்

ப்ரோபயோடிக்குகள் நிறைந்த உணவுகள், தயிர், யோகர்ட் ஆகியவை குடல் ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது. ஊட்டச்சத்துக்கள் உடலில் உறிஞ்சப்படுவதையும் மேம்படுத்துகிறது. ஹார்மோன்களை சமமாக பராமரிக்க, தேவையான பல்வேறு நுண்ணுயிரிகள் வளர உதவுகிறது. நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்க உதவுகிறது.

மெக்னீசியச்சத்து நிறைந்த உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும்

கீரைகள், நட்ஸ்கள் மற்றும் விதைகளில் மெக்னீசியச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது ஹார்மோன்களை சரியான பராமரிக்கிறது. மேலும் தசைகளை ரிலாக்ஸாக்கி, மனஅழுத்தத்தை குறைக்கிறது.

ஊதா வெளிச்சத்தை தவிர்கக் வேண்டும்

உறங்கச்செல்வதற்கு முன், திரை நேரத்தை தவிர்க்க வேண்டும். அப்போதுதான் மெலோட்டினின் அளவு அதிகமாக சுரக்கும். அது உறக்கத்தின் தரத்தை அதிகரிக்கிறது. உங்கள் உறக்க விழிப்பு சுழற்சியை முறைப்படுத்துகிறது. அது ஹார்மோன்களை சரியாக பராமரிக்க உதவி, ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் உதவுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.