தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Homemade Protein Boost: How To Make Protein-rich Peanut Butter At Home

Peanut Butter: 5 நிமிடத்தில் வீட்டிலேயே புரோட்டீன் நிறைந்த பீநட் பட்டர் செய்வது எப்படி?

Kathiravan V HT Tamil
Jan 18, 2024 10:58 AM IST

”Homemade Peanut Butter: கடைகளில் விற்பனை செய்யப்படும் சில பீநட் பட்டர்களில் செயற்கை நிறமூட்டிகள் உள்ளிட்டவை சேர்க்கப்படுவதால் வீட்டிலேயே பீநட் பட்டர் தயாரிப்பது அதிகரித்து உள்ளது”

வீட்டிலேயே பீநட் பட்டர் செய்யும் முறை
வீட்டிலேயே பீநட் பட்டர் செய்யும் முறை

ட்ரெண்டிங் செய்திகள்

உடற்பயிற்சி மேற்கொள்ளும் அனைவரின் தேவையாக பீநட் பட்டர் மாறி உள்ளது. இதில் உள்ள புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் உடல் வலுவை தரக்கூடியதாக உள்ளது. 

கடைகளில் விற்பனை செய்யப்படும் சில பீநட் பட்டர்களில் செயற்கை நிறமூட்டிகள் உள்ளிட்டவை சேர்க்கப்படுவதால் வீட்டிலேயே பீநட் பட்டர் தயாரிப்பது அதிகரித்து உள்ளது.  

 தேவையான பொருட்கள்:-

  • பச்சை வேர்க்கடலை  
  • உப்பு 
  • தேன் 
  • சர்க்கரை (தேவைப்பட்டால்)  
  • எண்ணெய்  

செய்முறை 

தோலுடன் கூடிய பச்சை வேர்கடலையை வாணலியில் 350°F (175°C)க்கு   பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். பின்னர் அதன் மீதுள்ள தோலை அகற்றிய பின்னர் வறுத்த வேர்கடலையை மிக்ஸி ஜாரில் போட்டுக்கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொண்டு விட்டு விட்டு அரைக்கவும். ரொம்ப நேரம் தொடர்ந்து அரைக்க கூடாது. 

ஒரு டேபிள் ஸ்பூன் தேனை இதில் சேர்த்து அரைப்பதன் மூலம் சுவையாகவும், இதமானதாகவும் இருக்கும். தேன் விரும்பாதவர்கள் சிறிதளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். 

அரைக்கும் போது கடலை சேர்ந்து வராதது போல் இருக்கும். ஆனால் தொடர்ந்து விட்டுவிட்டு அரைக்க அரைக்க வேர்க்கடலையில் உள்ள எண்ணெய் தனியாக பிரிந்து வரத் தொடங்கி பசை போல் மாறும். 

இந்த நிலையின் போது ஒரு டீஸ்பூன் கடலை எண்ணெய் அல்லது சன்பிளவர் ஆயிலை சேர்த்து ஒரு நிமிடம் வரை அரைக்க வேண்டும். எண்ணெய் சேர்ப்பதால் பீநட் பட்டர் இருகாமல் இருக்கும். 

இதனை காற்றுபுகாத டப்பாவில் அடைத்து ஃபிரிட்ஜில் வைக்காமல் பாதுகாப்பான இடத்தில் வைத்து பராமரிக்கவும். ஒருவாரம் வரை இதனை பயன்படுத்தலாம். 

WhatsApp channel

டாபிக்ஸ்